Tamil Years 60 Names Meanings in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தமிழ் வருடம் பெயர்களும் அதற்கான அர்த்தமும் பற்றி விவரித்துள்ளோம். தமிழ் வருடங்கள் மொத்தம் 60 ஆகும். இந்த 60 வருடங்களுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. பிரபவ என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும். இதன் படியே ஆண்டு சுழற்சி இருக்கும். அதாவது, பிரபவ ஆண்டு தொடங்கி 60 ஆண்டுகள் வரை தொடர்ந்து நடக்கும். மீண்டும் அதேபோல், தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அந்த வகையில் தற்போது, சோபகிருது வருடம் முடிந்து குரோதி வருடம் தொடங்க இருக்கிறது. குரோதி வருடம் தமிழ் வருடங்களில் 38 வது வருடம் ஆகும். ஓகே வாருங்கள், தமிழ் வருடங்களின் 60 பெயர்களும் அதற்கான அர்த்தங்களையும் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் வருடம் 60 பெயர்கள் மற்றும் அர்த்தங்கள்:
வ.எண் | தமிழ் வருடம் பெயர் | பொருள் |
1 | பிரபவ | உயர்வான உதயம் பிரபவ |
2 | விபவ | ஒப்பிலா பெருமை விபவ |
3 | சுக்ல | ஒளி மிகுந்த வானத்து வெண்மை சுக்ல |
4 | பிரமோத | உவகை பொங்கும் பிரமோத |
5 | பிரஜாபதி | உருவாக்கும் நாயகன் பிரஜாபதி |
6 | ஆங்கிரச | திருமிக்க தவமுனி ஆங்கிரச |
7 | ஸ்ரீமுக | உள மேற்கும் ஸ்ரீமுக |
8 | பவ | உள்ளம் உள்ளது காட்டும் பவ |
9 | யுவ | இளமை எழிலுறும் யுவ |
10 | தாது | இதயம் உவந்து தரும் தாது |
11 | ஈஸ்வர | இறைமை நிறைந்திடும் ஈஸ்வர |
12 | தானிய | இல்லம் செழித்திடும் வெகு தானிய |
13 | பிரமாதி | தலைமை தாங்கிடும் பிரமாதி |
14 | விக்ரம | தைரியம் நிலைத்திடும் விக்ரம |
15 | விரூஷ | நிலையுற நின்றிடும் விரூஷ |
16 | சித்திர பானு | நிறைந்த சித்திகள் விளங்கும் சித்திர பானு |
17 | சுபானு | நன்மைகள் பெருக்கிடும் சுபானு |
18 | தாரண | இளமை பூண்டிடும் தாரண |
19 | பார்த்திப | ஆளுமை கொண்டிடும் பார்த்திப |
20 | வியய | செலவிட செயல்தரும் வியய |
21 | ஸர்வஜித் | தொட்டது துலங்கும் ஸர்வஜித் |
22 | சர்வ தாரி | அணி எல்லாம் பூண்டிடும் சர்வ தாரி |
23 | விரோதி | கெட்டது விரட்டிடும் விரோதி |
24 | விக்ருதி | கேடுற்ற எழில் விக்ருதி |
25 | கர | செயல் திறமுறும் கர |
26 | நந்தன | சேயனக் கொஞ்சலுறும் நந்தன |
27 | விஜய | நல்வருகை தந்திடும் விஜய |
28 | ஜெய | நல் வெற்றி தந்திடும் ஜெய |
29 | மன்மத | காதலுறக் கவர்ந்திடும் மன்மத |
30 | துர்முகி | வெம்மை காய்ந்திடும் துர்முகி |
31 | ஹே விளம்ப | ஆடகப் பொன் போலும் நற்செயல் ஹே விளம்ப |
32 | விளம்பி | நாடலுறு சொல் செயல் விளம்பி |
33 | விகாரி | நளினமுறு அழகின் திரிபு விகாரி |
34 | சார் வரி | எல்லையில்லா இன்ப ஒலி சார் வரி |
35 | பிலவ | குகையுள் தோன்றிடும் பிலவ |
36 | சுபகிருது | வகையுறு நலமே வளைந்தி டும் சுபகிருது |
37 | சோபகிருது | வடிவுறு எழில் நிறைந்திடும் சோபகிருது |
38 | குரோதி | கடிந்திடு கோபமுறும் குரோதி |
39 | விஸ்வாவசு | படிந்திடும் அன்பில் பழகிடும் விஸ்வாவசு |
40 | பராபவ | வடிந்திடும் புகழில் வந்திடும் இகழ் பராபவ |
41 | பிலவங்க | நீரை கடக்க உதவும் சாதனம் பிலவங்க |
42 | கீலசு | பழமையின் வடிவு கீலசு |
43 | சௌம்ய | பண்புறு சாந்தம் சௌம்ய |
44 | சாதாரண | சமத்துவம் சொல்லிடும் சாதாரண |
45 | கிருது | வெறுப்பில் விளைந்திடும் விரோதி கிருது |
46 | பரிதாபி | செய்தபின் வறுந்திடும் பரிதாபி |
47 | பிரமாதிச | பொறுப்பில் தலைமை எனும் பிரமாதிச |
48 | ஆனந்த | பொலிவோடு மகிழ்வுறும் ஆனந்த |
49 | ராட்சா | கொடுமையே குணமெனும் ராட்சா |
50 | நள | கொதி நிலையிலாகுளிர்ச்சி நள |
51 | பிங்கள | கோலமிகு காவிய சாஸ்திரம் பிங்கள |
52 | காளயுக்தி | காலத்தில் அறிவுறுத்தும் காளயுக்தி |
53 | சித்தார்த்த | சிறப்புறு சித்தி தரும் சித்தார்த்த |
54 | ரௌத்ர | சீர் கெடும் சினமே ரௌத்ர |
55 | துர்மதி | தூண்டிடும் தீமைக்கு துர்மதி |
56 | துந்துபி | துய்ய நல்இசை தரும் துந்துபி |
57 | ருத்ரோத்காரி | கோபத்தின் விளைநிலமாம் ருத்ரோத்காரி |
58 | ரக்தாக்ஷி | குருதியாய்ச் சிவந்த கண் ரக்தாக்ஷி |
59 | குரோதன | விரோதத்தில் வேராகும் குரோதன |
60 | அக்ஷய | குறைவுஇல்லாமல் நிறைவது அக்ஷய |
தமிழ் புத்தாண்டு என்பதன் வேறு பெயர்கள் என்ன தெரியுமா..
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |