பழமையான தமிழரின் அளவீட்டு முறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Advertisement

தமிழரின் அளவீடு முறைகள் 

உலகிற்கே கலாச்சாரத்தையும், பண்பாட்டினையும் கற்றுக்கொடுத்த நாடு. மிகவும் பழமை வாய்ந்த, அதே சமயத்தில் நாகரிகமும் செழித்து வளர்ந்த நாடு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்ட வீடுககளை வடிவமைத்து வாழ்ந்த நாடு. இன்று உலகமே போற்றும் யோகாவை கற்றுத்தந்த நாடு. எண்களை, பூஜ்ஜியத்தை உலகிற்கு அளித்த நாடு. உலகின் சிறந்த மற்றும் முதல் மருத்துவ முறையான ஆயுர்வேதத்தை அறிமுகப்படுத்திய நாடு. நீர் மேலாண்மையில் உயர்ந்து விளங்கிய நாடு.வானியல், கணிதம், மருத்துவம், வரைபடவியல், கனிமவியல் என எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் மகத்தான சாதனை படைத்த நாடு. நாம் தாய் நாடான இந்தியா.

நம் முன்னோர்களின் அறிவுக்கூர்மையும் அவர்களின் படைப்பாற்றலும் விசித்திரமானது. பூக்கள் போன்றவற்றை அளக்க முழம் என்னும் அலகையும் பால், எண்ணெய் போன்ற நீர்ம பொருட்களை அளக்க உழக்கு என்ற அளவையும் பயன்படுத்தினர். இப்படி நம் முன்னோர்கள் பயன்படுத்திய அளவைகளை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்…

பழந்தமிழரின் அளவை முறைகள்:

Ancient measurements of Tamil

பழந்தமிழர்கள் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு சிறந்த முறையினை பயன்படுத்தினார்.

அந்தவகையில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய அளவை முறைகள்:

  • எண்ணல்
  • நிறுத்தல்
  • முகத்தல்
  • பெய்தல்
  • நீட்டல்
  • தெறித்தல்
  • சார்த்தல்

எண்ணல் முறைகள்:

1=ஒன்று
10= பத்து
100=நுறு
1000= ஆயிரம்
10000=பத்தாயிரம்
100000=நூறாயிரம்
1000000=பத்து நூறாயிரம்
10000000= கோடி
10 கோடி=1 அற்புதம்
10 அற்புதம்=1 நிகற்புதம்
10 நிகற்புதம்=1 கும்பம்
10 கும்பம்=1 கணம்
10 கணம்=1 கற்பம்
10 கற்பம்=1 நிகற்பம்
10 நிகற்பம்=1 பதுமம்
10 பதுமம்=1 சங்கம்
10 சங்கம்=1 சமுத்திரம்
10 சமுத்திரம்=1 ஆம்பல்
10 ஆம்பல்=1 மத்தியம்
10 மத்தியம்=1 பரார்த்தம்
10 பரார்த்தம்=1 பூரியம்
10 பூரியம்=1 முக்கோடி
10 முக்கோடி=1 மகாயுகம்

மிக பழமையான நூல் எது? | Tamilil Miga Palamaiyana Nool

நிறுத்தல் அளவைகள்:

32 குன்றிமணி = 1.067 கிராம்
10 வராகனெடை = 10.67 கிராம்
8 பலம்= 85.33 கிராம்
5 சேர்= 426.67 கிராம்
1000 பலம்= 10.67 கிலோகிராம்
6 வீசை=2.560 கிலோகிராம்
8 வீசை= 3.413 கிலோகிராம்
20 மணங்கு= 68.2667 கிலோகிராம்.

thamilarin alavai muraikal

நிறுத்தல் அளவுக்கான தராசு ஆறு வகைப்படும்.

மணித்தராசு – இது இரத்தினம் முதலியவற்றை அளக்க பயன்படுத்தப்பட்ட மிகச் சிறிய தராசு
பொன் தராசு – தங்கம் அளக்க பயன்படுத்தப்பட்ட சிறு தராசு
உலோகத் தராசு – செம்பு, பித்தளை முதலியவற்றை அளக்க பயன்படுத்திய பெரிய தராசு
பண்டத் தராசு – ஏலக்கால், மிளகு போன்ற பலசரக்கு பொருட்களை அளக்க பயன்படுத்திய தராசு
கட்டைத் தராசு – விறகு அல்லது மூட்டைகளை அளக்க பயன்படுத்திய தராசு. இது இரு புறமும் சதுர மரப்பலகைகளைத் தட்டுக்களாகக் கொண்டிருக்கும்.
தூக்கு – காய்கறிகளை அளக்க பயன்படுத்திய தராசு.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள எங்களது தளத்தை பின்தொடருங்கள்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement