தமிழ்நாட்டில் உள்ள அணைகள் பெயர்கள் | Tamilnatil Ulla Anaigal in Tamil

Tamilnatil Ulla Anaigal in Tamil

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகள் | Important Dams in Tamilnadu in Tamil

அணை என்று சொல்லப்படுவது ஒரு நீரோட்டத்தின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இது நீரோட்டத்தைத் தடுக்கவும் திசை மாற்றவும் பொதுவாக நீரைத் தேக்கவும் பயன்படுகிறது. இவை பொதுவாக வெள்ள தடுப்பிற்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் நீர் மின்சக்தித் திட்டங்களுக்காகவும் கட்டப்படுகின்றன. தமிழ்நாட்டில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளது. அவற்றின் முக்கிய அணைகளை பற்றி விரிவாக படித்து தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளின் பெயர்கள்

மேட்டூர் அணை:

மேட்டூர் அணை

மேட்டூர் அணையானது காவிரி ஆற்றங்கரை மீது கட்டப்பட்ட அணையாகும். மேட்டூர் அணையில் 2 நீர் மின் நிலையம் உள்ளது. மேட்டூர் அணையானது 1934 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தமிழகத்திலே அணைகளில் மிகப்பெரிய அணை மேட்டூர். மேட்டூர் அணையின் உயரமானது 120 அடிகளை கொண்டு கட்டப்பட்டுள்ளது. அணையின் நீளமானது 1700 மீட்டர் அளவில் கொண்டது.

வைகை அணை:

வைகை அணை

வருசநாட்டில் உருவாகும் வைகையின் குறுக்கே ஆண்டிபட்டி எனும் ஊரில் இந்த வைகை அணை கட்டப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர் கொள்ளளவு உயரம் 111 அடிகளை கொண்டுள்ளது.

பாபநாசம் அணை:

பாபநாசம் அணை

திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் அணையானது சுமார் 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திற்கு முக்கியமான அணையாக இருக்கிறது. இந்த அணையின் உயரம் 143 அடி. பாபநாசத்தின் நீளமானது 744 அடியாகும். அணையின் மொத்த கொள்ளளவு 5,500 பில்லியன் கன அடி உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் 1942 ஆம் ஆண்டு பாபநாசம் அணை கட்டப்பட்டது.

கல்லணை அணை:

கல்லணை அணை

தமிழகத்தின் முதன்மையான அணை கல்லணை. இந்த கல்லணையை கரிகால சோழனால் காவிரி நதி குறுக்கே கட்டப்பட்டது. இது 2000 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. கல்லணையின் நீர் கொள்ளளவு 66 அடியை கொண்டுள்ளது.

அமராவதி அணை:

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணையின் நீர் தேக்க உயரமானது 110 அடிகளை கொண்டுள்ளது. மிகப்பெரிய நீர் தேக்கமாக உள்ளதால், முதலைப் பண்ணை, மீன்பிடித்தொழில் இங்கு அதிகமாக நடைபெறுகிறது.

இந்திய நதிகள் பெயர்கள்

மணிமுத்தாறு அணை:

மணிமுத்தாறு அணை

மணி முத்தாற்றின் அருகில் திருநெல்வேலி மாவட்டத்தில் குறுக்கே கட்டப்பட்ட அணை. இந்த நீரானது மழைக்காலத்தில் தாமிரபரணியில் தேவையில்லாமல் கடலில் கலப்பதை தடுப்பதற்காக காமராஜரால் கொண்டுவரப்பட்ட அணைத்திட்டமாகும். 1958 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணையின் மொத்த நீளம் 3 கி.மீ ஆகும். அணையின் மொத்த கொள்ளளவு 5,511 பில்லியன் கன அடியாகும்.

ஆழியாறு அணை:

ஆழியாறு அணை

ஆழியாறு அணையானது பொள்ளாச்சி அருகில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் கடல் போல் காட்சியளிக்கும். ஆழி என்றால் கடல் என்று அர்த்தமாகும். அதனால் தான்  கடல் போன்ற பெரியாறு என்று பெயர் வந்தது. இந்த அணை 1957 ஆம் ஆண்டு கட்ட தொடங்கி 1962 ஆம் ஆண்டு அணையானது திறக்கப்பட்டது. காமராஜர் ஆட்சி செய்த காலத்தில் இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணையின் உயரம் 44.19 மீ அளவினை கொண்டுள்ளது. அணையின் நீளமானது 3200.4 மீ அளவாகும். அணையின் மொத்த கொள்ளளவு 2940 க.மீ 3 ஆகும்.

பவானிசாகர் அணை:

பவானிசாகர் அணை

காமராஜர் நிறுவிய அணைகளில் மிகவும் முக்கியமான அணை பவானிசாகர் அணை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்த அணையின் நீர் தேக்க உயரம் 105 அடிகள்.

சாத்தனூர் அணை:

சாத்தனூர் அணை

தமிழ்நாட்டில் முக்கியமான அணைகளுள் விளங்குவது சாத்தனூர் அணை. திருவண்ணாமலை நகரத்திலிருந்து 30 கி.மீ (19 மைல்) சாலை வழியாக அணையை அடையலாம். இந்த அணை 1953 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 1958 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. அணையின் உயரமானது 119 அடியை கொண்டது. அணையின் நீளமானது 4500.59 மீ ஆகும்.

இது போன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil