ஆசிரியர் தின கவிதைகள் 2024 | Teachers Day Poem in Tamil..!

Advertisement

ஆசிரியர் தின கவிதைகள் 2024 | Teachers Day Poem in Tamil..!

பொதுவாக நாம் அனைவரும் பள்ளி பருவங்களில் மாதா, பிதா, குரு மற்றும் தெய்வம் என்ற வார்த்தையினை அதிகமாக கேள்வி பட்டிருப்போம். அந்த வகையில் நமது அம்மா, அப்பாவிற்கு அடுத்த நிலையாக இருப்பது குருவாகிய ஆசிரியர்கள் தான். ஏனென்றால் அம்மா அப்பா தனது பிள்ளைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்து வளர்த்து வந்தாலும் கூட ஆசிரியர் நமக்கு கற்றுக்கொடுக்கும் கல்வியினை வைத்து தான் நமது அறிவானது மேம்படுகிறது. இவ்வாறு நாம் கற்கும் கல்வியினை பொறுத்து தான் நமது வாழ்க்கையும் அடுத்த நிலையினை நோக்கி செல்கிறது. அந்த வகையில் கல்வி அறிவினை மாணவர்களுக்கு அளிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆசிரியரின் பொறுப்பாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஆசிரியர்களை பெருமை படுத்தும் விதமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே இன்றைய பதிவில் ஆசிரியர் தின கவிதைகளை பார்க்கப்போகிறோம்.

ஆசிரியர் தின கவிதைகள் 2024:

 டீச்சர்ஸ் டே கவிதை

அறிவுத் தூண்டுகோல்களுக்கு
அகரம் சொல்லித் தந்த சிகரங்களே
உங்களுக்கான வாழ்த்துப்பாவினையும்
அதிலிருந்தே தொடங்குகிறேன்

அறிவின் துளிகளை அள்ளிவந்து
வகுப்பறையெங்கும் புதுமை செய்கிற
அற்புத வித்தகர்கள் நீங்கள்

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

கை பிடித்து
சொல்லித் தந்து தான்
கைதூக்கி விடுகிறீர்கள்
களிமண்ணையும் வண்ணங்கள்
குழைத்து பெருஞ்சிற்பமாக்கும்
அருஞ்சிற்பிகள் நீங்கள்
படி படி என பாடஞ்சொல்லும் நீங்கள்
தெய்வத்தினும் ஒரு படி மேல் தான்
நீங்கள் அறியாமை இருளகற்றும் அறிவுச்சூரியன்கள்
உங்கள் பலகை பாடம் தான் பல கைகளை உயர்த்தியது

ஆசிரியர் தினம் கவிதைகள் தமிழ்:

கை எடுத்து வணங்குகிறேன்
நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்

நான் வாழ ! நான் முன்னேற!
எனக்காக உழைத்தவர்கள்
நான் இன்று இன்பம் காண
அன்று துன்பம் பொறுத்தவர்கள்

நான் முத்து சேர்க்க
மூச்சடக்கி முத்து குளித்தவர்கள்
என் இளம் வயதில் கண்ட
நடமாடும் தெய்வங்கள்
என் ஆசிரியர்கள்..!

டீச்சர்ஸ் டே கவிதை:

ஒவ்வொரு குழந்தைக்கும்
அதன் தாய் தெய்வம்- அல்லவா
தாய் இல்லாமல் நாம் இல்லை
தாயை சிறந்த கோவிலும்மில்லை
உண்மைத் தானே..?அன்னையர் தினத்துக்கு
பரிசு தர வேண்டாமா..?
பரிசுடன் புறப்பட்டேன்
என்னை பெற்றதுக்கு – இலஞ்சம்
கொடுக்க முதியோர் இல்லத்திற்கு…!
Teachers Day கவிதை in Tamil:
 ஆசிரியர் தினம் கவிதைகள் தமிழ்
எத்தனை ஆயிரம் ஆசிரியர்கள்-ஆனால்
நோக்கம், லட்சியம் ஒன்று தானே
என் மாணவன் முன்னேற வேண்டும்
தேர்ச்சிப்பெற வேண்டும்
வெற்றி பெற வேண்டும்.!எத்தனை உயரிய எண்ணம்
நீங்கள் அல்லவா
வணக்கத்துக்குறியவர்கள்
எத்தனை கேலிகள்
எத்தனை கிண்டல்கள்
எத்தனை துன்பங்கள், தொல்லைகள்
உங்களுக்கு செய்தோம்
இன்று நினைக்கையில்
என் உள்ளம் வலிக்கிறதே
உங்கள் காலில் விழுந்து
மன்னிப்பு கோருகிறோம்
எங்களை மன்னியுங்கள் – ஐயாஇன்று வரையிலும் , இனிமேலும்
நாங்கள் காணும் வெற்றிகளுக்கு
நாங்கள் அடையும் புகழ்களுக்கு
உரியவர்கள் நீங்கள் தானே – ஐயா..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement