ஆசிரியர் தினம் கவிதை வரிகள் | Teachers Day Poetry in Tamil..!
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! வெறும் மண்ணாகவோ அல்லது கல்லாகவோ இருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி அனைவரின் கண்களுக்கும் அழகாக தெரியும் விதமாக அதனை வடிவமைத்து காட்டுவது ஒரு சிற்பியின் வேலை என்பது நமக்கு தெரியும். அதேப்போல் எந்த ஒரு அடிப்படையான விஷயமும் தெரியாமல் இருக்கும் ஒரு குழந்தைகளுக்கு கல்வி என்ற அறிவினை செலுத்தி வாழ்க்கையில் நல்ல நிலையில் பிறர் திரும்பி பார்க்கும் அளவிற்கு கொண்டு செல்வது ஆசிரியரின் பணியாக இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் கல்வி கற்றுக் கொடுக்கும் அனைத்து ஆசிரியர், ஆசிரியை வருடத்திற்கு பல விதமான கல்விக் கலைஞர்களை உருவாக்கி விடுகிறார்கள். இப்படிப்பட்ட புனிதமான பணியினை செய்யும் ஆசிரியர்களை மகிழ்விக்கும் வகையில் செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று வரக்கூடிய ஆசிரியர் தினம் கவிதை வரிகளை பார்க்கலாம் வாங்க..!
ஆசிரியர் பற்றிய கவிதை 2024:
களிமண்ணாய் இருந்த என்னை
உளிகொண்டு செதுக்கி
தளிரிளம் சோலை
தரும் இதம் தந்தீர்..!
என்னை செதுக்கிய
சிற்பிகள் நீங்கள்..!
வாழ்க்கையின் ஒவ்வொரு
நகர்விலும் உங்கள் வாசம்
என் பயணங்களில்.. ஆனாலும்
எனக்கு மழையற்ற காலங்கள்போல
கடந்து செல்கின்றன
உங்கள் நினைவுகள்
நீங்கா தொடர்கதையாக..!
ஆசிரியர் வாழ்த்து கவிதை:
அவர்களை நான்
கை எடுத்து வணங்குகிறேன்..!
அவர்கள் காட்டிய
பாதச் சுவடுகள் அனைத்தும்
இன்னும் வழிகாட்டியாக
என்னை முன்னோக்கி
நகர்த்திச் செல்கிறது..!
ஆசிரியர் தினம் பற்றிய பேச்சு போட்டி..! |
ஆசிரியர் தினம் வாழ்த்து கவிதை:
பொறுமையாக கற்பிக்கிறீர்கள்,
இளம் மனங்களை ஒளிரச் செய்கிறீர்கள்,
வழிகாட்டும் ஒளியாக
அன்றும், இன்றும், என்றும் என
தொடர்ச்சியாக இருக்கிறீர்கள்.
Poetry on Teachers Day:
கைவசப்படுத்தி கொடுக்க உதவும்
தூண்டுகோலே சிறந்த ஆசிரியர்
நான் வழி அறியாது வந்த போது
எனகென ஒரு பாதையை உருவாக்கி
என்னுடைய குருவாகி என் வாழ்க்கைக்கு
சுடர் ஏற்றிய என் குருவுக்கு
இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்..!
Kavithai for Teachers Day:
நாங்கள் செய்த தவறுக்கு
தண்டனை எங்களுக்கு தந்து
வேதனையை – நீங்கள்
அல்லவா அனுபவித்தீர்கள்
எத்தனை அன்பு , அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு
எங்கள் வாழ்வு வளம் பெறதானே
எத்தனை நாள்
மழையில் நனைந்தீர்கள்
வெயிலில் காய்ந்தீர்கள்
பசியை மறந்தீர்கள்
உங்கள் குடும்பத்தைவிட
எங்கள் நலனில் தானே
அதிகம் அக்கரை செலுத்தினீர்கள்
இறந்த காலங்களில் ஓராயிரம் முறை
உங்களை திட்டி தீர்திருந்தாலும்
நிகழ காலங்களில் வாழ்த்தாத நாளில்லை…!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |