Teachers Day Song in Tamil Lyrics | ஆசிரியர் பற்றிய பாடல் வரிகள்
கல்வி என்பது ரொம்ப முக்கியமானது. இந்த கல்வியை நாமாக கற்பித்து கொள்ள முடியாது. கல்வியை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கல்வியை மட்டும் கற்பிக்காமல், ஒழுக்கம், தன்னபிக்கை, விடாமுயற்சி, பண்பு, ஆற்றல் போன்றவற்றையும் கற்பிக்கின்றனர். ஆசிரியர் தினமானது சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவரான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் செப்டம்பர் 5 தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆசிரியருக்கு வாழ்த்து சொல்லும் விதத்தில் இன்றைய பதிவில் ஒரு பாடலை பார்ப்போம் வாங்க.
ஆசிரியர் தின பாடல் | Teachers Day Song in Tamil:
அகரம் சொல்லித் தந்த ஆசான்
வாழ்க வாழ்கவே…
அறிவைப் புகட்டும் ஆசான் இங்கு
வாழ்க வாழ்கவே…
தாய்மொழியைக் கற்றுத் தந்த ஆசான்
வாழ்க வாழ்கவே…
நல்வழியைக் கற்றுத் தந்த ஆசான்
வாழ்க வாழ்கவே…
கேள்வி கேட்க வைத்த ஆசான்
வாழ்க வாழ்கவே…
பதில் சொல்ல வைத்த எங்கள் ஆசான்
வாழ்க வாழ்கவே…
பணிவைக் கற்றுத் தந்த ஆசான்
வாழ்க வாழ்கவே…
துணிவைக் கற்றுத் தந்த ஆசான்
வாழ்க வாழ்கவே…
அறிவியலைப் புரிய வைத்தவர்
வாழ்க வாழ்கவே…
வாழும் முறையைக் கற்றுத் தந்தவர்
வாழ்க வாழ்கவே…
விளையாட்டைக் கற்றுத் தந்தவர்
வாழ்க வாழ்கவே…
வாழ்வின் விடியலாக வந்த ஆசான்
வாழ்க வாழ்கவே…
அறியாமையை அகற்றிய ஆசான்
வாழ்க வாழ்கவே…
ஆசிரியர் தின வாழ்த்து சொல்கிறோம்
வாழ்க வாழ்கவே…
வாழ்க வாழ்கவே…
வாழ்க வாழ்கவே…
ஆசிரியர் தினம் பேச்சு போட்டி கட்டுரை
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |