ஆசிரியர் தினம் பற்றிய பேச்சு போட்டி..!

Advertisement

Teachers Day Speech in Tamil for School Students | ஆசிரியர் தினம் பற்றிய பேச்சு

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வருகின்ற ஆசிரியர் தினத்திற்கான பேச்சு போட்டிக்கான உரையினை தெரிந்துக்கொள்ள போகிறோம். அந்த வகையில் நாம் செய்யும் அனைத்து விதமான வேலையினை விடவும் ஆசிரியர் பணி என்பது மிகவும் சிறப்பான ஒரு பணியாக கருதப்படுகிறது. அதிலும் ஆசிரியர் பணியே அறப்பணி அதில் என்னை அர்ப்பணி என்ற மிகவும் சிறப்பு பெற்ற பழமொழியும் தமிழில் இருக்கிறது. மேலும் ஒருவரின் வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக மாற வேண்டும் என்று நினைத்து அதற்கான முதல் அடியை துவங்கி வைப்பது ஆசிரியர்கள் தான். அதனால் இன்று பள்ளி குழந்தைகளுக்கான ஆசிரியர் தினத்திற்கான பேச்சு போட்டியினை பார்க்கலாம் வாங்க.!

ஆசிரியர் தினம் பற்றிய பேச்சு போட்டி | Teachers Day Speech in Tamil:

குறிப்புச்சட்டகம்:

  • முன்னுரை
  • ஆசிரியர் பணி
  • ஆசிரியர் தின வரலாறு
  • செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்
  • முடிவுரை

முன்னுரை:

தமிழில் மாதா, பிதா மற்றும் குரு என்று கூறுவார்கள். அந்த வகையில் பார்த்தால் ஒரு மனிதனை உலகத்திற்கு அறிமுகம் செய்து வளர்த்து வருவது தாய் மற்றும் தந்தை. ஆனால் இவர்களுக்கு அடுத்த நிலையில் யார் என்று தெரியாத ஒரு நபரைகூட சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும் என்று நினைத்து கல்வி வழியாக அறிவினை செலுத்துவது ஆசிரியர்கள் தான். இப்படிப்பட்ட ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில் தான் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்

ஆசிரியரின் பணி:

ஒரு குழந்தைக்கு வெறும் கல்வியினை மட்டும் கற்றுக் கொடுப்பது என்பது ஆசிரியர் பணி கிடையாது. ஏனென்றால் கல்வியினை நாம் கற்பது நமது அறிவு மற்றும் சிந்தனை ரீதியான செயல்களை சிந்திக்க வைக்கும்.

ஆனால் இவை எல்லாம் தாண்டி ஒரு குழந்தைக்கு ஒழுக்கம், நடத்தை, சுத்தம், ஆன்மீகம் மற்றும் பொதுஅறிவு என இவற்றை எல்லாமும் கற்று தருவதே ஆசிரியர் பணியாகும். ஆகவே ஒரு குழந்தைக்கு கல்விக்கு அடுத்த நிலையில் இவற்றையும் கற்று தரும் போது தான் ஆசிரியர் பணியே முழுமை அடைகிறது.

ஆசிரியர் தின வரலாறு:

ஆசிரியர் தின வரலாறு

ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதே திரு ராதா கிருஷ்ணன் அவர்கள் தான். 1888- ஆம் ஆண்டு செப்டம்பர் 05-ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ராதாகிருஷ்ணன் பிறந்தார்.

கல்வி:

இவர் ஒரு பிராமண குடும்பத்தை சேர்ந்த நபர் ஆவர். அந்த வகையில் ராதாகிருஷ்ணன் இளங்கலை துறையில் தத்துவத்தை முதல் பாட பகுதியாக எடுத்துக்கொண்டு BA பட்டத்தை பெற்றார். இதற்கு அடுத்த படியாக முதுகலை துறையில் MA பட்டத்தையும் பெற்றார்.

ஆசிரியர் பற்றிய கவிதைகள்

ராதாகிருஷ்ணனின் பணி:

கல்லூரி படிப்பை முடித்த ராதாகிருஷ்ணன் அவர்கள் முதல் முதலில் பிரிசிடென்சி என்று சென்னையில் அமைந்துள்ள கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிய தொடங்கினார்.

இத்தகைய பணியில் இருந்த போதிலும் கூட ராமானுஜர், மாதவர்,பகவத்கீதை, பிரம்மசூத்திரா, சங்கரா, இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், போன்றோரின் வர்ணனைகளையும் சிறப்பான முறையில் கற்று கொண்டார்.

தத்துவ பேராசிரியர்:

மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராக 1918-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் 1921-ஆம் ஆண்டு தத்துவ பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டார்.

படைப்பு:

இத்தனை விதமான சாதனைகளுக்கு பிறகு திரு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய தத்துவம் என்ற பெயரில் அவரது படைப்பினை வெளியிட்டார். இப்போது இவ்வளவு சிறப்புகளை பெற்று ராதாகிருஷணனின்  பிறந்த நாளை தான் ஆசிரியர் தினமாக கொண்டப்படுகிறது.

செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்:

செப்டம்பர் ஆசிரியர் தினம்முந்தைய காலங்களில் ஆசிரியர் தினம் என்பது வெவ்வேறு நாட்களில் கொண்டாப்பட்டு இருந்தது. அதன் பிறகே டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளாகிய செப்டம்பர் 5-ஆம் தேதி அன்று ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள்

முடிவுரை:

கல்வியிலும், ஆசிரியர் பணியிலும் அனைவருக்கும் முன் மாதிரியாக இருந்த தனது வாழ்க்கையினை சிறப்பான முறையில் வாழ்ந்த ராதாகிருஷ்ணன் அவர்கள் ஏப்ரல் 17, 1975 இயற்கை எய்தினார்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement