Teachers Day Welcome Speech in Tamil |ஆசிரியர் தின வரவேற்புரை
பொதுவாக நாம் ஒரு செயல் செய்கிறோம் என்றால் அதற்கான முதலில் செயல் எப்படி இருக்கிறது என்பது தான் மிகவும் முக்கியமானது என்று கூறுவார்கள். ஒருவேளை நாம் செய்யும் செயலில் ஆரம்பத்திலேயே தவறுகள் ஏற்பட்டால் முதற்கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்வார்கள். அதனால் நாம் செய்யும் செயல் முதல் காலையில் எழுந்து பேசும் முதல் வார்த்தை வரை அனைத்தும் மிகவும் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பது தான் சாத்தியமான ஒரு நிகழ்வு. அதேபோல் இந்த ஒரு நிகழ்விலும் முதலில் எவ்வாறு பேச்சு என்பது அமைகிறது என்பதை பொறுத்து தான் மற்ற அனைத்தும் அமையும். அதனால் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் வரவேற்புரை எப்படி இருக்கிறது என்பதை தான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள். எனவே இன்று வருகின்ற செப்டம்பர் 5-ஆம் தேதி வருகின்ற ஆசிரியர் தினத்திற்கான வரவேற்புரை உரையினை தான் பார்க்கபோகிறோம்.
குழந்தைகளுக்கான ஆசிரியர் தின வரவேற்புரை | welcome speech for teachers day in tamil:
செப்டம்பர் 5-ஆம் தேதி திரு டாக்டர் ராதாகிருணனின் பிறந்த நாளன்று ஆசிரியர் தினம் கொண்டாடும் எனது பள்ளி அல்லது கல்லூரி ஆசிரியர் மற்றும் ஆசிரியைக்கு காலை வணக்கம்.
ஆசிரியரர் பணியே அறப்பணி அதில் என்னை அர்ப்பணி என்று ஒவ்வொருவரின் எதிர்காலத்தை எண்ணி கல்வியினை கற்றுக் கொடுப்பதே ஒருவரின் ஆசிரியர் பணியாக இருக்கிறது.
இதோடு மட்டும் விட்டுவிடாமல் ஒருவரின் ஒழுக்கம், குணம், செயல் என இவை அனைத்தினையும் சிறந்த நெறியிலும், முறையிலும் வழிநடத்தி செல்வதும் ஆசிரியர்களின் பணியை தாண்டிலும் மேலோங்கி நிற்கிறது
எழுத்துக்களில் முதல் எழுத்து அ என்பதை நமது மனதிலும், உள்ளத்திலும் நிலை நிறுத்தி, அனைத்துலகமும் பாராட்டும் படி விண்வெளி வீரராகவோ, மருத்துவராகவோ அல்லது மீண்டும் உன்னைப்போல் ஒரு ஆசிரியராகவோ ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவருவது ஆசிரியர் பணியே என்பதை இந்த வரவேற்புரையில் கூறுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
மேலும் எத்தனை முறை சந்தேகங்கள் கேட்டாலும் கூட முகம் சுழிக்காமல் முன் வந்து பாடம் கற்றுக்கொடுப்பதில் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் நான் மனதார வாழ்த்துக் கூறுகிறேன்.
2024 என இன்னும் 24 வருடங்கள் ஆனாலும் கூட வேர் போல தொடர்ச்சியாக வந்து பாடங்களை இந்த உலகத்திற்கு கற்றுத் தரும் ஆற்றலை கொண்டு இருப்பவர்கள் ஆசிரியர்களே ஆவார்கள்.
மேலும் ஒருவரின் திறமையினை கண்டு கல்வி கற்றுக்கொடுக்காமல் திறமை இல்லாதவரையும் திறமையானவராக மாற்றும் ஆற்றல் இவர்களுக்கு தான் இருக்கிறது.
மீண்டும் ஒருமுறை இந்த வரவேற்பு உரையில் ஆசிரியர் தின வாழ்த்துக்களை கூறி அனைவருக்கும் நன்றி வணக்கம் கூறி விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்.
ஆசிரியர் தினம் பற்றிய பேச்சு போட்டி
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |