காளியிடம் வரம் பெற்ற தெனாலி..! Tenali Raman Stories Tamil..!
Tenali Raman Tamil Story: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் குழந்தைகள் விரும்பி கேட்கும் தெனாலி ராமனின் சுவாரசியமான கதைகளை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். குழந்தைகள் அனைவருமே கதை கேட்பதில் மிகுந்த ஆர்வத்தை கொண்டவர்களாய் இருப்பார்கள். கதைகளில் நீதி கதைகள், பஞ்ச தந்திர கதைகள், தேவதை கதைகள், அரசர் கதைகள் என பல்வேறு கதைகள் உள்ளன. இவற்றையெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கூறுவார்கள். சரி வாங்க இப்போது இந்த பதிவில் தெனாலி காளியிடம் வரம் பெற்ற கதையை முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
அறிவியல் விஞ்ஞானிகள் வரலாறு..! Scientist Name And Invention..! |
தெனாலி ராமன் தோன்றிய வரலாறு:
தெனாலி ராமன் நானூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன்பு ஏழை குடும்பத்தில் ஆந்திர மாநிலத்தில் சிற்றூர் என்னும் ஊரில் பிறந்தார் தெனாலி. தெனாலி தன் இளமை வயதிலேயே தனது தந்தையை இழந்துவிட்டார். தெனாலி ராமன் தன் தந்தையை இழந்த பிறகு தெனாலியின் தாய் மற்றும் தெனாலி அவரின் தாய்மாமன் வீட்டின் ஆதரவில் வாழ்ந்தனர்.
தெனாலி ராமனுக்கு கல்வி கற்பது என்றாலே பிடிக்காத விஷயம். ஆனாலும் தெனாலி ராமன் மிகவும் அறிவாற்றலும். நகைச்சுவை திறனும் இளம் வயதிலேயே பெற்றவர். தன் தந்தையை இழந்த காரணத்தால் வீட்டை காப்பாற்ற வேண்டும் என்ற மனநிலை தெனாலியை மிகவும் வருத்தத்திற்கு கொண்டு சென்றது.
தெனாலிக்கு மந்திரம் கற்றுக்கொடுத்த முனிவர்:
தெனாலி மிகவும் கவலையுடன் இருக்கும் போது ஒரு முனிவர் வந்தார். தெனாலி கவலையுடன் இருப்பதை அந்த முனிவர் அறிந்து தெனாலிக்கு ஒரு மந்திரத்தை கற்று கொடுத்தார். தெனாலியிடம் முனிவர் நான் கூறிய இந்த மந்திரத்தை காளி கோவிலுக்கு சென்று ஜெபித்தால் காளி பிரசன்ன மாவாள் என்று முனிவர் கூறினான்.
உடனே தெனாலியும் ஊர் வெளியில் இருக்கும் காளி கோவிலுக்கு சென்று நூற்றியெட்டு முறை முனிவர் கூறிய மந்திரத்தை ஜெபித்தான். ஆனாலும் காளி பிரசனமாகவில்லை. தெனாலி ராமன் சற்று யோசித்த நிலையில் முனிவர் ஆயிரத்து எட்டு முறை மந்திரத்தை கூற சொன்னார் என்று மறுபடியும் கண்களை மூடி பிரசன்ன காளியை ஜெபிக்க தொடங்கிவிட்டான்.
காளி தோன்றியது:
தெனாலி ஜெபிக்க தொடங்கி இரவும் வந்துவிட்டது. தெனாலி ராமன் கோவிலை விட்டு செல்லவில்லை. தெனாலி முன் திடீர் காளி தோன்றினாள். தெனாலியிடம் காளி கோபமாக என்னை ஏன் அழைத்தாய்? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டாள்.
தெனாலி காளியை வணங்கிய படியே தாயே நான் மிகவும் வறுமையுற்ற நிலையில் இருக்கிறேன். என் வறுமை நிலை அகன்று எனக்கு நல்லறிவும் கிடைக்க வேண்டும் என்று தெனாலி காளியிடம் வேண்டினான்.
காளி தெனாலியை பார்த்து ஏளனமாய் சிரித்தாள். உனக்கு அதிகமாக பேராசை இருக்கிறது என்றாள் காளி. உனக்கு கல்வியும் வேண்டும், செல்வமும் வேண்டுமா என்று காளி கேட்டாள்.
தெனாலி ராமன் உடனே ஆம் காளி எனக்கு புகழுடன் இருக்க கல்வியும், வறுமை போக செல்வமும் வேண்டும் என்றான் தெனாலி.
காளி நீட்டிய பால் கரம்:
காளி சிரித்தபடி தனது இரண்டு கைகளையும் நீட்டினாள். இரண்டு கைகளிலும் இரண்டு கிண்ணம் பால் வந்தது. அந்த பால் கிண்ணங்களை காளி தெனாலி ராமனிடம் கொடுத்தாள்.
தெனாலி ராமனிடம் காளி பாலை கொடுத்தபிறகு இந்த பால் மிகவும் சிறப்பு வாய்ந்த பால் ஆகும் என்று காளி கூறினாள். தெனாலியிடம் நீ என்னிடம் கேட்டவாறு இந்த இரண்டு பாலிலும் வலது கிண்ணம் பாலானது கல்வியும், இடது கிண்ணம் பால் செல்வத்தை உடைய பாலாகும்.
காளி தெனாலியிடம் ஒரு கிண்ணம் பாலை மட்டும் குடிக்குமாறு சொன்னாள். காளி சிரித்தபடி தெனாலியிடம் உனக்கு கல்வி மற்றும் செல்வத்தில் எது மிகவும் முக்கியமோ அதை குடி என்று காளி கூறினாள்.
இந்திய பெண் விளையாட்டு வீரர்கள் வரலாறு..! Famous Indian Sports Womens Biography..! |
தெனாலிராமன் பருகிய பால்:
தெனாலி ராமன் காலியிடம் நான் உன்னிடம் இரண்டும் தானே கேட்டேன் என்றான். ஒரு கிண்ணத்தின் பாலை மட்டும் அருந்த சொல்வதால் தெனாலி சற்று யோசித்து நின்றான்.
அதன் பிறகு தெனாலி இடது கிண்ண பாலை வலது கிண்ணத்தில் இருக்கும் பாலுடன் சேர்த்து வேகமாக குடித்துவிட்டு தெனாலி சிரித்தான்.
தெனாலி இப்படி செய்ததும் காளி தெனாலியை பார்த்து மிகவும் திகைத்து போய் நின்றாள். காளி தெனாலியிடம் உன்னிடம் நான் ஒரு கிண்ணத்தின் பாலை மட்டும்தான் குடிக்க சொன்னேன் என்றாள்.
வரம் தந்த காளி:
தெனாலியும் உடனே காளியிடம் நான் ஒரு கிண்ணத்தின் பாலை மட்டும்தான் அருந்தினேன் என்று கூறினான். காளி தெனாலியிடம் தனி தனியாக இருந்த பாலை ஒன்றாக ஏன் கலந்தாய் என்று காளி கேட்டாள்.
தெனாலி காளியிடம் நீ ஒரு கிண்ணத்தின் பாலை மட்டும்தான் குடிக்கவேண்டும் என்று சொன்னாய். இரண்டையும் கலக்க கூடாது என்று கூறவில்லை என்று சாதுரியமாக கூறினான் தெனாலி.
காளி சிரித்தபடி தெனாலி ராமனிடம் என்னையே நீ ஏமாற்றிவிட்டாய் என்று கூறியது. காளி தெனாலியிடம் நீ பெரும் புலவன் என்ற பெயர் எடுக்காமல் “விகடகவி” என்றுதான் பெயர் பெறுவாய் என்று வரம் தந்துவிட்டு காளி மறைந்து சென்றாள். தெனாலி ராமனும் விகடகவி என்ற பெயரை சொல்லி பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.
தமிழ்நாட்டின் சிறப்புகள்..! Tamil Nadu Famous Food Places..! |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |