Thada Pathiyam in Tamil
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! நம்மில் சிலருக்கு சொந்தமாக நிலம் கண்டிப்பாக இருக்கும். அதுவும் இன்றைய சூழ்நிலையில் பணத்திற்கு தான் அதிக மரியாதை இருக்கிறது. பணம் இருந்தால் மட்டும் தான் மனிதன் என்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றோம். அதிலும் நிலம் என்றால் சொல்லவே வேண்டாம். அதாவது ஒரு குடும்பத்தில் எதற்கு பிரச்சனை வருகிறதோ இல்லையோ, சொத்து பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். இது அனைத்து குடும்பத்திலும் நடந்து வரும் நிகழ்வு தான். அவ்வளவு ஏன் இது தீர்க்க முடியாத பிரச்சனையாகவும் இருந்து வருகிறது. இந்த சொத்து விஷயத்தில் நாம் தெரிந்து கொள்ள நிறைய தகவல்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும் இருக்கும் தகவல்களை நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி..
தட பாத்தியம் என்றால் என்ன:
இன்று நாம் இந்த பதிவின் வாயிலாக தட பாத்தியம் என்றால் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகின்றோம். சரி உங்களுக்கு தட பாத்தியம் என்பதை பற்றி தெரியுமா..? தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தட பாத்தியம் என்பது உங்கள் நிலத்தின் ஏதோ ஒரு பகுதியில் யாரோ ஒருவர் பொதுவழியாக பயன்படுத்தினால், அதை தட பாத்தியம் என்று சொல்வர். இந்த தட பாத்தியம் பிரச்சனை வந்துவிட்டால் நிலத்தின் சொந்தக்காரருக்கு பிரச்சனை தான்.
அதாவது நம்முடைய நிலத்தில் தட பாத்தியம் பிரச்சனை வந்துவிட்டாலோ அல்லது மற்றவர் நிலத்தில் பொது பாதை வழக்கு வந்துவிட்டாலோ அது பெரிய பிரச்சனை என்று அர்த்தம். இதை தான் தட பாத்தியம் என்று கூறுகிறார்கள்.
சரி இதுபோல தட பாத்தியம் பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று பார்க்கலாம்.
பட்டா செல்லுமா பத்திரம் செல்லுமா இரண்டில் எது முக்கியம்..
(எ.கா) : அண்ணன் தம்பி இடத்தில் தட பாத்தியம் பிரச்சனை வந்தால்..?
இப்போது உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் உள்ள அண்ணன் தம்பி இருவரும் சொத்தில் பாகப்பிரிவினை செய்து கொள்கிறார்கள். அப்போது அந்த நிலத்தில் அண்ணனுக்கு பொது வழி பாதை இருக்கிறது என்றால், அப்போது நாம் என்ன செய்வது..?
அதற்கு நீங்கள் முதலில் அந்த பொதுவழி பாதை உங்கள் நிலத்தில் வருகிறதா இல்லை அண்ணன் இடத்தில வருகிறதா என்று பார்க்க வேண்டும். அதுவும் இல்லையென்றால், அந்த இடத்தை மக்கள் பொதுவழி பாதையாக பயன்படுத்துகிறார்களா என்று பார்க்க வேண்டும். இப்படி அந்த நிலத்தில் ஏதேனும் தட பாத்தியம் பிரச்சனை இருந்தால் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுக்கலாம்.
(எ.கா) : அதுவே 2 வீடுகளுக்கு இடையில் தட பாத்தியம் பிரச்சனை வந்தால்..?
அதுபோல இரண்டு வீடுகளுக்கு இடையில் பொதுவழி பாதை பிரச்சனை வந்தால், முதலில் நீங்கள் அந்த பாதை உங்கள் நிலத்தில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இல்லையென்றால் பக்கத்துக்கு வீட்டுக்காரரிடம் விசாரணை செய்ய வேண்டும். அதேசமயம் அந்த பாதை பொது பாதையாக இருக்கிறதா என்றும் ஆராய வேண்டும்.
இதை மீறியும் பக்கத்துக்கு வீட்டுக்காரர் ஏதும் பிரச்சனை செய்கிறார் என்றால், நீங்கள் உங்கள் ஊரிலுள்ள கிராம நிர்வாக அலுவலகரிடம் சென்று மனு கொடுக்கலாம்.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ அனாதீனம் நிலம் என்றால் என்ன..?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |