தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம் பாடல் வரிகள் | Thai Piranthal Vazhi Pirakkum Thangame Thangam
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம் பாடல் வரிகளை தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று அனைவரும் கூறி கேட்டு இருப்போம். ஏன் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுகிறார்கள் தெரியுமா.? ஆடி மாதம் துவங்கி தொடர்ந்து ஆறு மாதங்கள் நெற்பயிர்கள் வளர்ந்து தை மாதத்தில் அறுவடைக்கு தயாராகி இருக்கும். ஆறு மாதம் விவசாயிகள் தான்பட்ட கடன், துன்பம், கவலைகள் எல்லாம் தீர்ந்து அறுவடை செய்து பணம் ஈட்டி துன்பங்கள் எல்லாம் தீர வழி பிறக்கும். இதனால் தான் தை பிறந்தால் வழி பிறகும் என்று கூறுவார்கள்.
அதுமட்டுமில்லாமல், கார்த்திகை மாத பௌர்ணமி முடிந்து மார்கழி் மாதம் வரை குடமுழுக்கு, திருமணம், புதுமனைப் புகுதல் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏதும் செய்யாமல் இருப்பார்கள். மார்கழி மாதம் முடிந்து தை மாதம் தொடங்கியவுடன் சுப நிகழ்ச்சிகளை செய்வார்கள். இதன் காரணமாகவும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை பாடல் மூலம் நமக்கு சொல்லி இருக்கிறார்கள். எனவே, தை மாதத்தின் சிறப்பினை தை பிறந்தால் வழி பிறக்கும் பாடல் (Thai Piranthal Vazhi Pirakkum Thangame Thangam) மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பொங்கலுக்கு பாடக்கூடிய பொங்கல் பாடல்கள்.!
Thai Piranthal Vazhi Pirakkum Song Lyrics in Tamil:
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
ஆடியிலே வெதை வெதைச்சோம் தங்கமே தங்கம்
ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணமாகுமடி தங்கமே தங்கம் ஆமா
கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணமாகுமடி தங்கமே தங்கம்
வண்ண மணி கைகளிலே தங்கமே தங்கம்
வண்ண மணி கைகளிலே தங்கமே தங்கம் ஆமா
வளையல்களும் குலுங்குமே தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
முத்து சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
முத்ததிலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
குத்து வெளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
குத்து வெளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தை பிறந்தால் வழி பிறக்கும் பொருள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |