கல்யாணம் ஆனா பெண்கள் புகுந்த வீட்டிற்கு இந்த பொருட்களை எடுத்து வராதீர்கள்

தாய் வீட்டு சீதனம்

முகம் பார்க்காமல் எங்களது பதிவுகளை வாசிக்கும் எங்களது இனிய நேயர்களுக்கு அன்பு வணக்கங்கள். பொதுவாக பெண்களுக்கு அம்மா வீடு என்றால் அனைவருக்கும் பிடித்த ஒன்று பிறந்த வீடு என்றால் அங்கு அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையும் சொகுசும் தனி தான். தாய் வீட்டிற்கு சென்றால் அவர்களுக்கு பிடித்தவற்றை மட்டும்  செய்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். அனைத்து தாய்மாருக்காலுக்கும் உள்ளது புகுந்த வீட்டிலும் மகள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பது தான். அதற்கான அனைத்தையும் சீதனமாக தருவார்கள். அவர்களின் பாசமானது அதிகமாகி குழம்பு முதல் கொடுத்துவிடுவார்கள். பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்தவரக்கூடாத பொருட்கள் 10 இருக்கின்றது அதனை பற்றி இப்போது பார்ப்போம் வாங்க..!

தாய் வீட்டிலிருந்து எடுத்து வரக்கூடாத பொருட்கள்:

அரிவாள்மனை

முதலில் பிறந்தவீட்டிலிருந்து கூர்மையான பொருட்களை எடுத்துவரக்கூடாது உதாரணத்திற்கு கத்தி, குண்டு ஊசி, அருவாள், அரிவாள்மனை போன்ற பொருட்களையே எடுத்துவருவதை தவிர்க்கவும், இதனை எடுத்துவருவதால் இரு குடும்பத்திற்கு இடையே பகைமை வருவதற்கு வழிவகுக்கும்.

தாய் வீட்டிலிருந்து எடுத்து வரக்கூடாத பொருட்கள்

இரண்டாவது வீட்டை சுத்தம் செய்யக்கூடிய பொருட்களை எதையும் எடுத்துவர கூடாது. துடைப்பம், மாப் , ஒட்டதை குச்சி, போன்றவற்றை எடுத்து வருவதை தவிர்க்கவும். இப்படி எடுத்துவருவதால் இருவீட்டில் உள்ளவர்க்கிடையே பிரச்சனை ஏற்படும்.

தாய் வீட்டிலிருந்து எடுத்து வரக்கூடாத பொருட்கள்

புதிதாக திருமணம் ஆகியோர் வீட்டில் மளிகை பொருட்களை சீதனமாக கொடுக்கும் பழக்கம் உள்ளது, அதனை அவர்கள் வருடம் வருடம் கொடுப்பார்கள். அப்படி கொடுப்பவர்கள் அதில் புளியை தவிர்ப்பது நல்லது. அப்படி கொடுத்தால் உறவுகளிடையேயே விரிசல் ஏற்படும்.

 thai veetil irundhu eduthu vara kudathavai

அடுத்ததாக கல் உப்பு மற்றும் எண்ணெய் எடுத்துவர கூடாது மீறி எடுத்துவந்தால் அதனால் பல வகையான இன்னல்களை சந்திப்பீர்கள்.

விளக்குகள்

புகுந்த வீட்டிற்கு தாய்வீட்டிலிருந்து விளக்கு எடுத்துவதல் கூடாது. பூஜை அறையிலோ அல்லது பயன்படுத்தாமல் இருந்தாலும் அதனை தாய்வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து வருதல் கூடாது. இதனால் புகுந்த வீட்டிற்கு நேர்வினையை கொடுத்து பிறந்தவீட்டிற்கு இருள் சூழ்ந்த நிலையை அளிக்கும். என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை.

முருங்கக்கீரை

தாய்வீட்டில் மரங்கள் இருந்தால் அதிலிருந்து எந்த காயையையும் எடுத்துவருதல் கூடாது. உதாரணத்திற்க்கு முருங்கை மரம், கருவேப்பிலை பாவற்காய், அகத்திக்கீரை போன்றவற்றை எடுத்துவருத்தலை தவிர்க்கவும். எடுத்துவருவதால் கசப்பான விஷயங்கள் ஏற்பட கூடும்.

படி

அரிசி படியை எடுத்துவருத்தல் கூடாது இந்த படியானது தானியங்களை நிர்ணயிக்கும் படியாக உள்ளது. இதனை எடுத்துவருவதால் பிறந்த வீட்டிற்கு வறுமையை ஏற்படுத்தும்.

முறம்

முறத்தை எடுத்துவருத்தலை தவிர்க்கவும். இதனை திருமண சீரில் கூட வாங்கி கொடுக்கமாட்டார்கள். காரணம் ஈம சடகுகளுக்கு மட்டும் பயன்படுத்துவார்கள் அதனால் இதனை தாய்வீட்டிலிருந்து  எடுத்து வருதலை தவிர்க்கவும்.

அசைவ உணவு

 

புகுந்த வீட்டிலிருந்து சென்று தாய்வீட்டில் அசைவ உணவுகளை சாப்பிட்டுவரலாம் ஆனால் அதனை புகுந்த வீட்டிற்கு எடுத்து வருவது நல்லது அல்ல..!

கோலமாவு

சிலர்கள் அவர்கள் ஊரில் கோலமாவு இல்லாததால் தாய் வீட்டிற்கு வரும் போது சில சில பொருட்களை எடுத்து செல்வது பழக்கம் அதில் முக்கியமான பொருள் கோலமாவு. இந்த கோலமாவை எடுத்து செல்ல வேண்டாம் அப்படி உங்களுக்கு தேவை என்றால் வீட்டில் பணம் கொடுத்துவிட்டு எடுத்துவதல் நல்லது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil