தஞ்சாவூர் பெயர் வர காரணம்

Advertisement

தஞ்சாவூர் பெயர் வர காரணம் | தஞ்சாவூர் பெயர் காரணம் | Thanjavur Peyar Karanam in Tamil

பொதுவாக ஒரு மனிதருக்கு பெயர் வைப்பதாக இருந்தால் கூட அதனை பலமுறை யோசித்து தான் அந்த பெயர்களை வைப்பார்கள். பெயர் என்பது ஒரு அடையாளத்தை ஏற்படுத்த கூடிய ஒன்றாக இருக்கிறது. நாம் அனைவருமே நமக்கு ஏன் இந்த பெயர் வைத்தீர்கள் என்று நமது பெற்றோரிடம் கேட்டு அறிந்து கொள்வோம். நமக்கு பெயர் வைத்ததற்கான காரணத்தை அவர்கள் கூறுவார்கள். அதுவே நமது ஊர் அல்லது நமது மாவட்டத்தின் பெயர்கள் எல்லாம் எப்படி வந்தது என்ற காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆற்வம் இருக்கும். இதனை நம்ம யாரிடமும் கேட்டு அறிந்து கொள்ள முடியாது. அதனால் கூகுளில் சர்ச் செய்து அறிந்து கொள்வீர்கள். அதனால் உங்களுக்கு உதவிடும் வகையில் இன்றைய பதிவில் தஞ்சாவூர் பெயர் வந்ததற்கான காரணத்தை அறிந்து கொள்வோம் வாங்க..

தஞ்சாவூர் பெயர் வர காரணம்:

தஞ்சாவூர் பெயர் வர காரணம்

இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் (Thanjavur அல்லது Tanjore) தமிழ் பாரம்பரிய மிக்க தொன்மையான நகரமாக விளங்குகிறது. இது தஞ்சாவூர் மாவட்டத் தலைநகரமாகும். இது தஞ்சை என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. சிறப்பு நிலை நகராட்சியாக இருந்த தஞ்சாவூர் நகராட்சி 10 ஏப்ரல் 2014 அன்று தமிழ்நாட்டின் 12-வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது

தஞ்சை என்பதற்கு “குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி” என்று பொருள்.  தஞ்சை மாவட்டத்தில் முக்கிய தொழில் விவசாயம் என்பதால் நெல் பயிர் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த தஞ்சையில் தான் அதிக அளவில் நெல் பயிர் விளைகிறது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் திகழ்கிறது. உலக பாரம்பரிய சின்னமாகவும், உலக புகழ் பெற்றதாகவும் தஞ்சைப் பெரிய கோவில் விளங்குகிறது.

இந்தியா என்று பெயர் வர காரணம் என்ன தெரியுமா

பெயர்க்காரணம்:

தஞ்சாவூர் ஆனது எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையர் பெயரையே, இந்நகரம் பெயராகப் பெற்றது. காலபோக்கில் தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைபெற்றது என்று கூறப்படுகிறது. 

மற்றொரு காரணமாக புராணக்கதை மூலம் பெயர் வந்ததாக கருதப்படுகிறது. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அரக்கன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்தி வந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயர் வந்ததாக நம்பப்படுகிறது. சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement