Jai Hind Song Lyrics in Tamil | ஜெய்ஹிந்த் பாடல் வரிகள்
ஆகஸ்ட் 15 – இது ஒரு சாதாரண நாள் அன்று. பலபேர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து நமக்காக சுதந்திரத்தை பெற்றுத்தந்த ஒரு புனித நாள். ஜாதி மத பேதங்களை கடந்து ஒவ்வொரு இந்திய குடிமகனும் சுதந்திர காற்றை கர்வத்தோடு சுவாசிக்க துவங்கிய நாள். நாம் சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருக்கும் அதே வேலையில் 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்பு நம் முன்னோர்கள் நம் நலனுக்காக எத்தகைய துன்பங்களை அனுபவித்தனர், சிறைச்சாலைகளிலும், போராட்டக்களங்களிலும் அவர்கள் பட்ட கஷ்டங்கள் என்ன என்பதை எண்ணி அவர்களுக்கான நன்றியை கூறும் நாள்.
தேசிய கொடியை கம்பத்தில் உயர பறக்கவிடுவதோடு நம் கடமை முடிந்துவிடுவதில்லை. நம்முடைய சிந்தனைகளும், எண்ணங்களும் நம் தேசியக்கொடியை போல எப்போதும் உயர்ந்து இருக்க வேண்டுமென்று உறுதி எடுத்துக்கொள்ளும் ஒரு நன்னாளாக இந்நாள் இருக்க வேண்டும். இந்த நன்னாளில் நாம் அனைவரும், இன்னுயிரை கொடுத்து நமக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தவர்களை போற்றி வணங்கிட வேண்டும். அந்த வகையில் பள்ளி குழந்தைகளுக்கு சுதந்திர தின நாள் மிக சிறப்பானதாக இருக்கும். சுதந்திரத்தை பெற நாம் முன்னோர்கள் செய்த தியாகங்களையும் எழுச்சிகளையும் கட்டுரையாகவும் கவிதையாகவும் பாடலாகவும் ஓவியங்களாகவும் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள். அத்தகைய பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் சுதந்திர தின தாயின் மணிக்கொடி பாடல் உங்களுக்காக…
Jaihind Song lyrics in tamil | Thayin Manikodi Song Lyrics in Tamil:
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுக ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் வந்த
கண்ணிய பூமி இது
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுக ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
வண்ணம் பல வண்ணம்
நம் எண்ணம் ஒன்றல்லோ
பறவைகள் பலவன்றோ
வானம் ஒன்றன்றோ
தேகம் பலவாகும்
நம் ரத்தம் ஒன்றல்லோ
பாஷைகள் பலவன்றோ
தேசம் ஒன்றன்றோ
பூக்கள் கொண்டு வந்தால்
இது புண்ணிய தேசமடா
வாட்கள் கொண்டு வந்தால்
தலை வாங்கிடும் தேசமடா
எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர்
இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே
இது தீயில் எழுந்து வந்த தேசமே
தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம்
சுதந்திர தின பாடல் வரிகள் தமிழ்
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுக ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
சட்டம் நம் சட்டம்
புது வேகம் கொள்ளாதோ
வேகமிருந்தால்தான்
வெற்றிகள் உண்டாகும்
மண்ணில் நம் மண்ணில்
புது சக்தி பிறக்காதோ
சக்தியிருந்தால்தான்
சரித்திரம் உண்டாகும்
சட்டம் கையில் கொண்டு
நீ தீமை திருத்திவிடு
சரியாய் இல்லை என்றால்
அதன் வேரை அறுத்துவிடு
புலி போல் எழுக
புயல் போல் விரைக
அட இளைய ரத்தம் என்ன போலியா
எழுகவேண்டும் புதிய இந்தியா
சுதந்திரத்தை காத்த அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்
சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுக ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்
என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் வந்த
கண்ணிய பூமி இது
ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |