Therthal Vilipunarvu Vasagam Tamil
தேர்தல் என்பது ஒரு ஜனநாயக நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் முறையாகும். தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும், அதே போல் மக்களும் விழிப்புணர்வுடன் தங்களின் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நாட்டில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், அவர்களை வழிநடத்தவும் ஒரு தலைவர் வேண்டும் என்பதற்காக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜனநாயகம் என்பது மக்களால் மக்களுக்காக வழங்கப்படும் ஆட்சி ஆகும். உலகின் மிக பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டுள்ளது. நாளை உங்களின் வாக்குகளை அளிப்பதற்கு தயராக இருப்பீர்கள். இந்த பதிவில் தேர்தல் விழுப்புணர்வு வாசகங்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
வாக்காளர் தினம் வாசகம்:
1. வாக்குரிமை நமது அடிப்படை உரிமை
2. நமக்கு கிடைத்திருக்கும் தார்மீக உரிமை வாக்குரிமை
3. வாக்களிப்பது ஜனநாயக கடமை
4. வாக்களிப்பது நமது வாழ்வுரிமை
5. ஜனநாயகம் காக்க வாக்களிப்போம்
6. தவறாமல் வாக்களிப்போம்,சமுதாயத்தை மேம்படுத்துவோம்
7. நமது வாக்கு நாட்டின் போக்கு
8. வாக்கின் வலிமை தேசத்தின் வலிமை
9. நமது வாக்கு ஐந்து வருட ஆட்சியின் சக்தி
10.வாக்களிப்பது ஐந்தாண்டு ஆட்சியை தீர்மானிக்கும் உரிமை
11. வாக்களிப்போம் வாழ்வுரிமை காப்போம்
12.நல்லாட்சி அமைய வாக்களிப்போம்
13. அனைவரும் வாக்களிப்போம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்
14. சிந்திப்போம் சுயசிந்தனையில் வாக்களிப்போம்
15.சுதந்திரமாக வாக்களிப்போம்,சுதந்திரத்தை பேணி காப்போம்
16. யாருடைய தூண்டுதலும் இல்லாமல் வாக்களிப்போம்
17. மற்றவர்கள் சொல்வதை கேட்காமல் மனசாட்சிப்படி வாக்களிப்போம்
18. நல்லாட்சியை தேர்ந்தெடுப்பதே நமது முதல் கடமை
19. நமக்கு இருப்பது ஒரே ஓட்டு,தவறாமல் வாக்களிப்போம்
20. வாக்களிப்பு என்பது நம்மை ஆளவேண்டியருக்கு நாம் கொடுக்கும் உத்தரவு
21. நமது வாக்கு நாட்டின் தலை எழுத்தையே மாற்றியமைக்கும்
22. வாக்களிப்போம் சமூகத்தை வளப்படுத்துவோம்
23. நயவஞ்சக பேச்சுக்களை நம்பாதீர்,நல்லவருக்கே வாக்களிப்பீர்
24. வாக்காளர் என்பதில் பெருமை வாக்களித்தால் மட்டுமே
25. நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிப்போம்,நியாயமாக வாக்களிப்போம்
26. எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே,அனைவரும் வாக்களிப்போம்
ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு கட்டுரை
27. நமக்கு நாமே எஜமானர் நேர்மையாக வாக்களிப்போம்
28. ஓட்டுப் போடுவது நமது உரிமையும் கடமையும் ஆகும்
29. எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லையா நோட்டா பட்டன் அழுத்துவோம்
30. எனது வாக்கு எனது உரிமை
31. விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுதுவோம்
32. எனது வாக்கு விற்பனைக்கு அல்ல
33. காசு,பணம் வாங்காமல் கண்ணியமாக வாக்களிப்போம்
34. மனதில் உறுதி வேண்டும்,கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும்.
35. எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே,எந்த இனாமும் வாங்காமல் வாக்களிப்போம்.
36. ஓட்டுக்கு பணம் பெற்றால் ஒரு வருடம் ஜெயில் தண்டனை
37 வாக்களிக்க பணம் கொடுப்பதும் பணம் வாங்குவதும் குற்றம்
38. மதுபானம்,பிரியாணி,பணம் என ஒருநாள் கொண்டாட்டத்திற்கு ஐந்து வருட ஆட்சியை வீணடிக்கலாமா?
39. நம் வாக்கினை விற்கலாமா – நல்லாட்சியை தொலைக்கலாமா
40. வாக்கை விற்க மாட்டேன்,எதிர்காலத்தை வீணடிக்க மாட்டேன்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |