பெண்கள் திருமணத்திற்கு முன் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

things to do before marriage for a girl in tamil

திருமணத்திற்கு முன்பு பெண்கள்

இன்றைய பதிவில் திருமணத்திற்கு முன்பு பெண் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்று தெரிந்துகொள்வோம். சில பெண்கள் திருமணத்திற்கு பிறகும் சில விஷயங்கள் தெரியாமல் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு எதாவது ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் அங்கு இருப்பவர்கள் எப்படி தான் உங்களை வளர்த்தார்கள். இது கூட தெரியாம என்று கேட்பார்கள். அதனால் மற்றவர்கள் சொல்லும்படி வைக்காதீர்கள். அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு திருமணம் செய்து கொள்ளுங்கள். வாங்க என்னென்ன விஷயம் தெரிந்திருக்க வேண்டும் என்று படித்து தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ வளரும் பெண் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய தகவல்கள் என்ன..!

வீட்டிற்கு தேவையான பொருட்கள்:

முதலில் வீட்டிற்கு பயன்படுத்தும் பொருட்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதில் சமையலுக்கு தேவையான பொருட்களின் பெயர்கள், அது எதற்காக பயன்படுத்துகிறோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

சாரி கட்டுவது எப்படி.?

பெண்களுக்கு எவ்வளவு தான் உடைகள் புதிதாக வந்தாலும் நமது பாரம்பரியமான புடவை கட்டுவது அவசியமானது. வெளியில் சுப நிகழிச்சிகளுக்கு செல்லும் பொழுது கண்டிப்பா புடவை தான் கட்ட வேண்டியிருக்கும்.

சமையல் செய்வது எப்படி.?

திருமணம் ஆகுவதற்கு முன்பு கட்டாயம் சமைக்க தெரிந்திருக்க வேண்டும். என்ன தான் Mobile பார்த்து சமைத்தாலும். அடிப்படை சமையலான சாதம் வைப்பது, டீ, காபி போன்றவை தெரிந்திருக்க வேண்டும்.

மாதம் கட்ட வேண்டிய கட்டணம்:

பெண்கள் மாதம் மாதம் எதற்கெல்லாம் கட்டணம் வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். தண்ணீர் கட்டணம், மின் கட்டணம், கேபிள் கட்டணம் போன்ற கட்டணம் எப்படி செலுத்த வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

குழந்தை வளர்ப்பது எப்படி.?

குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வது அவசியமானதாகும். மகப்பேறு பற்றிய தகவல்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

பெண்களுக்கான சட்டங்கள்:

பெண்கள் பிறந்த வீட்டில் என்னென்ன உரிமைகள் உள்ளது, புகுந்த வீட்டில் என்னென்ன உரிமைகள் உள்ளது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

சுயமாக சிந்திக்க:

ஒரு பெண் சுயமாக சிந்திக்கவும், முடிவு எடுப்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். புகுந்த வீட்டில் உள்ள பிரச்சனைகளை நீங்களாவே சமாளிக்க வேண்டும். மற்றவர்கள் துணையை எதிர்பார்க்க கூடாது.

நிர்வாக பொறுப்பு:

ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு சென்றதும் நிர்வாக பொறுப்பை நீங்கள் தான் பார்க்க வேண்டியிருக்கும். குடும்பத்தை எப்படி நிர்வகிக்க வேண்டும். எந்த நிலையில் எப்படி பேச வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information In Tamil