சிசேரியன் செய்த பிறகு செய்யக்கூடாதவை – Things not to do after caesarean section
வணக்கம் வாசகர்களே.. இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்வென்றால் சிசேரியன் ஆன பிறகு செய்ய கூடாத விஷயங்களை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க இருக்கின்றோம். நீங்கள் சிசேரியன் செய்து குழந்தையை பெற்றுக்கொண்டீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.
ஏன் என்றால் நீங்கள் உங்களை இன்னும் கூடுதலாக பார்த்துக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் உங்கள் உடம்புக்கு ஓய்வு என்பது அவசியம் தேவை. அதேபோல் உங்கள் காயம் ஆறுவதற்கும் கொஞ்சம் காலம் தேவைப்படும். சிசேரியன் ஆனவர்களுக்கு வெளிக்காயம் ஆறினாலும், உள்காயம் என்பது ஆறுவதற்கு சில மாதங்கள் ஆகும். ஆக அந்த நேரங்களில் நாம் செய்ய கூடாத 12 விஷயங்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
சிசேரியன் ஆன பிறகு செய்ய கூடாத விஷயங்கள்:
No: 1
சிசேரியன் ஆன அடுத்த நாள் உங்களை ICU-வில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றுவார்கள். நீங்கள் சரியாக யூரின் போறிங்களா, சரியாக மோஷன் போறீங்களா என்று கவனிப்பார்கள்.
ஆக நீங்கள் யூரின்னாக இருந்தாலும் சரி, மலமாக இருந்தாலும் சரி அதனை அடக்கி வைக்கக்கூடாது. உங்களுக்கு எதனை முறை எழுந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் அதனை முறையும் எழுத்து யூரின் அல்லது மலத்தை கழித்துவிட்டு வர வேண்டும்.
No: 2
சிசேரியன் செய்த இடத்தில் உள்ள காயத்தை நீங்கள் உங்கள் கைகளினால் தொடக்கூடாது, ஏன் என்றால் உங்கள் கைகளில் உள்ள கிருமிகள் அந்த காயத்தில் பட்டால் அங்கு இன்பெக்சன் ஆக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆக சிசேரியன் செய்த இடத்தில் உள்ள காயத்தை கைகளினால் தொட வேண்டாம்.
No: 3
நீங்கள் குளித்துவிட்டு வந்த பிறகு ஒரு காட்டன் துணியை கொண்டு காயத்தில் உள்ள ஈரத்தை சுத்தமாக ஒத்தி எடுக்க வேண்டும்.
No: 4
சிசேரியன் ஆன மூன்றாவது நாளில் இருந்து நீங்கள் சாதாரணமாக அனைத்து உணவுகளையும் சாப்பிடலாம். ஆக அந்த நேரத்தில் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உணவருந்திய பிறகு ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் அவசியம். ஏன் என்றால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டால் பிறகு மலம் கழிக்க மிகவும் சிரமப்படுவீர்கள் இதனால் தையல் பிரிவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
No: 5
பொதுவாக பிரசவம் ஆன பிறகு ஒரு சிலர் வயிற்றில் துணியை சுற்றி இறுக்கமாக காட்டுவார்கள். ஆக அது மாதிரியெல்லாம் சிசேரியன் செய்தவர்கள் செய்ய கூடாது.
ஏன் என்றால் புண் ஆறுவதற்கு காற்றோடடம் வேண்டும் ஆக காற்றோட்டமான ஆடைகளை அணிந்துகொள்வது சிறந்தது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வயதானவர்கள் வீட்டில் இருந்தால் இது கண்டிப்பாக இருக்க வேண்டும்!!
No: 6
சிசேரியன் செய்த பெண்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் குடுப்பது என்பது மிகவும் சிரமமாக இருக்கும். இருந்தாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து தான் ஆக வேண்டும். இது குழந்தைக்கும், உங்களுக்கும் ஏராளமான நன்மைகளை தரும்.
அதாவது குழந்தைக்கு தாய்ப்பால் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும், நீங்கள் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் உங்கள் உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.
No: 7
சிசேரியன் செய்த பிறகு சில மாதங்களுக்கு உங்களால் உங்கள் இஷ்டத்திற்கு உறங்கவும் முடியாது.
ஆக பிரசவத்திற்கு எப்படி ஒரே சைடில் உறங்கினீர்களோ அதே போல் உறங்குவது மிகவும் சிறந்தது, ஏன் என்றால் நீங்கள் புரண்டு புரண்டு படுக்கும் போதும் உங்களுக்கு வயிற்றில் வலி ஏற்படும். ஆக ஒரே சைடில் உறங்குவது மிகவும் சிறந்தது.
No: 8
உங்கள் காயங்கள் நன்கு ஆறும் வரை இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.
No: 9
உங்களுக்கு காலை அல்லது மாலை நேரங்களில் உடற் பயிற்சி செய்யும் பழக்கம் இருக்கிறது என்றால் சிசேரியன் செய்த பிறகு குறைந்தது 6 வாரங்கள் முதல் 8 வாரங்கள் வரை உடற்பயிற்சி செய்வதை முற்றிலும் தவிர்க்கவும்.
காயங்கள் நன்கு ஆரிய பிறகு உங்கள் உடல்நல மருத்துவரிடம் ஆலோசனை கேட்டபிறகு உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் சிறந்தது.
No: 10
குறைந்தது 6 மாதங்கள் வரையாவது அதிக எடை உள்ள பொருட்களை தூக்குவதை தவிர்க்கவும்.
ஏன் என்றால் அதிக எடை உள்ள பொருட்களை தூக்கினீர்கள் என்றால் உங்களுடைய தையல் பிரிந்துவிடும். ஆக குரைந்தது 6 மாதங்களாவது அதிக கனமான பொருட்களை தூக்குவதை தவிர்க்கவும்.
No: 11
அதேபோல் குறைந்தது 6 வாரங்கள் முதல் 8 வாரங்கள் வரை உங்கள் கணவருடன் சேர்ந்து இருப்பதை முற்றிலும் தவிர்க்கவும்.
No: 12
உங்களுக்கு காயங்கள் ஆறுவதற்கு முன் காய்ச்சல், சளி, தலைவலி இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் அதனை சாதாரணமாக நினைக்க வேண்டாம், ஏன் என்றால் உங்கள் காயங்களில் ஏதாவது இன்பெக்ஷன் ஏற்பட்டிருந்தாலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ஆக இது போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்பட்டால் உண்டானடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது மிகவும் நல்லது. நீங்கலாக மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடக்கூடாது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தூங்கி எழுந்ததும் இதுபோன்ற விஷயங்களை தவறாமல் கடைபிடியுங்கள்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |