தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

Advertisement

Things to Consider While Buying Gold Jewellery

தங்கத்தினை விரும்பாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு தங்கம் சிறப்பு வாய்ந்தது. பெரும்பாலும் தங்கத்தினை இரண்டு காரணங்களுக்காக வாங்குவார்கள். அதாவது, அழகிற்காகவும், பணத்திற்காகவும் தங்க நகைகளை வாங்கி சேமித்து வைப்பார்கள். குறிப்பாக பெண்களுக்கு தங்கத்தின் மீது அதிகமான ஆசை இருக்கும். என்னதான் தங்கம் விலையுர்ந்ததாக இருந்தாலும், அதன் விற்பனையும் சிறப்பும் என்றுமே குறையாது. இப்படி பல தேவைகளுக்காக தங்க நகைகளை அனைவருமே வாங்குவோம்.

தங்க நகை வாங்கும்போது, நாம் சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது, தங்கம் வாங்கும்முன்பு தங்கத்தினை பற்றிய சில விவரங்களை தெரிந்துகொண்டு வாங்குவது மிகவும் அவசியம். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் தங்க நகை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.

What to Consider When Buying Gold Jewelry in Tamil:

What to Consider When Buying Gold Jewelry in Tamil

தங்கம் வாங்கும்போது, முக்கியாக நாம் வாங்கும் நகை கடை, தங்கத்தின் தரம், தங்கத்தை செய்க்கூலி மற்றும் தங்கத்தின் எடை போன்றவற்றை சரியாக பார்ப்பது மிகவும் அவசியம். அதனை பற்றி பின்வருமாறு விவரமாக பார்க்கலாம்.

நகைக்கடை:

நாம் வாங்கும் நகைக்கடை ஆனது, பழமையான மற்றும் பதிவு செய்யப்பட்ட கடைகளை தேர்வு செய்து வாங்க வேண்டும். அப்படி பழமையான மற்றும் பதிவு செய்யப்பட்ட கடைகளில் வாங்கினால் தான் நகை நன்றாக தூய்மையாக இருக்கும்.

நகையின் தரம்:

தங்கத்தின் தரத்தை அறிந்து வாங்குவது மிகவும் அவசியம். அதாவது, சர்வதேச தரம், சான்று, விற்பனை மதிப்பு என அனைத்தையும் சரிபார்த்து வாங்க வேண்டும். BIS ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளுங்கள். நகைக்கு BIS ஹால்மார்க் முத்திரை மிகவும் அவசியம். தங்கத்தின் தூய்மையை கேரட் மதிப்பால் தெரிந்து கொள்ளலாம்.

22 கேரட் – 91.67% தூய தங்கம் (916 தங்கம்)

24 கேரட் – 99.9 % தூய தங்கம்

22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கம் என்றால் என்ன.? இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு.?

நகை எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் ஆபரணத்தில் மேல் ஏ,பி,சி,ஈ உள்ளிட்ட எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருக்கும். அதனையும் அறிந்துகொள்வது நல்லது.

தங்கத்தின் விலை:

தங்கம் வாங்கும்போது, அன்றைய நாளில் தங்கத்தில் விலை என்ன அளவில் இருக்கிறது அதாவது, தங்கத்தின் விலை உயர்ந்து இருக்கிறதா அல்லது குறைந்த இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். 22 கேரட் தங்கம் என்ன விலை.? 24 கேரட் தங்கம் என்ன விலை.? என்பதை அறிந்துகொண்டு வாங்க வேண்டும்.

நகையின் எடை:

நகையின் தரம் மற்றும் மாடல் பார்த்த பிறகு, முக்கியமாக நீங்கள் வாங்கும் நகை என்ன எடையில் இருக்கிறது என்றும், எடைக்கேற்ற விலை வழங்கப்படுகிறதா.? என்பதையும் பார்க்க வேண்டும்.

செய்கூலி அளவு:

பொதுவாக நகையின் செய்கூலி அளவானது 5% முதல் 30% வரையில் இருக்கும்.  ஆகவே நீங்கள் வாங்கும் நகையின் செய்கூலி அளவு சரியாக இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஓரு கிலோ தங்கம் எவ்வளவு கிராம் தெரியுமா..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information In Tamil 
Advertisement