வீடு, நிலம் மற்றும் சொத்து போன்றவை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை.!

Advertisement

சொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை | Things To Keep in Mind Before Buying a Property in Tamil

சொந்தமாக இடம் வாங்கி அதில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை அனைவர்க்கும் உள்ளது. அதிலும் சொந்தமாக வீடு உள்ளவர்களுக்கு கொஞ்ச கூடுதலான ஆசைகள் இருக்கும். சொந்தமாக நிலம் மற்றும் சொத்துக்கள் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். வீடு மற்றும் நிலம் வாங்கும் போது சில விஷயங்களை பார்த்து வாங்க வேண்டும். அது என்னென்ன விஷயங்கள் என்று இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

சொத்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

things to keep in mind before buying a property in tamil

நீங்கள் வீடு அல்லது நிலம் மற்றும் விட்டு மனை போன்றவை வாங்குவதற்கு முன் சில ஆவணங்களை பார்த்து வாங்க வேண்டும். அது என்னென்ன ஆவணங்கள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

நீங்கள் எந்த சொத்தை வாங்குவதற்கு முன் ஒரு வழக்கறிக்காரை பார்த்து நீங்கள் வாங்கும் சொத்தின் பற்றிய தகவலை கூறி அவர்களிடம் Opinion வாங்க வேண்டும்.

பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்தை வாங்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

தாய் பத்திரம்:

நீங்கள் வாங்கும் சொத்தின் நபர் அவர் யாரிடம் இருந்து பெற்றாரோ அந்த சொத்து பாத்திரம் சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

விற்பனை செய்பவரின் பத்திரம்:

நீங்கள் யாரிடமிருந்து சொத்தை வாங்க போகிறீர்களா அந்த பத்திரத்தை சரி பார்க்க வேண்டும். அந்த பத்திரத்தில் உரிமையாளரின் பெயர் பார்க்க வேண்டும்.

பத்திரத்தில் உள்ள முகவரியும், வாங்கும் இடத்தின் முகவரியும் ஒன்றாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

வில்லங்க சான்றிதழ்:

வில்லங்கச் சான்றிதழ் ஒரு சொத்துக்கு யார் உரிமை உள்ளவர் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சான்றாக உள்ளது. வில்லங்கச் சான்றிதழ் என்பது ஒரு சொத்து யாருடைய கைகளில் இருந்து எப்படி மாறி வந்துள்ளது, சொத்து உரிமை யாருக்கு மாற்றப்பட்டது போன்ற விவரங்களை அறிந்துகொள்ளும் ஆவணமாக உள்ளது.

இடம்:

ஒரு இடம், அல்லது வீடு வாங்க போகிறீர்கள் என்றால் அதை நேரடியாக சென்று பார்வையிட வேண்டும். அந்த இடத்திற்கு பக்கத்தில் உள்ளவர்களிடம் அந்த இடத்தை பற்றி விசாரிக்க வேண்டும்.

வாரிசுகளின் சம்மதம்:

நீங்கள் வாங்கும் சொத்தின் வாரிசுகள் அனைவருக்கும் இடத்தை கொடுப்பதற்கு சம்மதமா மற்றும் வாரிசுகள் அனைவரும் கையெழுத்து போட்டார்களா என்று பார்த்து வாங்க வேண்டும்.

அளவு:

பட்டாவில் உள்ள அளவும்,ஆவணத்தில் உள்ள அளவும் சரியாக உள்ளதா என்று நேரடியாக சென்று அளவிட்டு வாங்க வேண்டும்.

அப்பா சொத்து மகனுக்கா.! மகளுக்கா.! யாருக்கு சொந்தம்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement