சொந்தமா வீடு கட்டணும்னு பணத்தை சேமிக்கிறீங்களா.!

Advertisement

சொந்தமா வீடு கட்டணுமா

மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு ஆசைகள் இருக்கும். சில பேருக்கு அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும், இன்னும் சிலருக்கு சொந்த கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்காக பலரும் பணத்தை சேமித்து வைக்கிறார்கள்.

ஆனால் சேமித்து வைத்த பணத்திலேயே வீட்டை கட்ட முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியாது. சில வேலைகளில் பணம் கூட செலவாகலாம். இந்த பதிவில் வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அறிவுரை தான் பார்க்க போகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வீடு கட்டுவதற்கான பட்ஜெட்:

நம்முடைய கையில் பணம் இருக்கின்ற அளவிற்கு ஆசை பட மாட்டோம். ஆசை என்பது அதிகமாகவே இருக்கும். அதில் நீங்கள் வீடு கட்டும் போது உங்களிடம் கையில் இருக்க வேண்டிய பணத்தில் வீட்டை கட்டுவது எப்படி என்றுபார்ப்போம்.

கையில் இருக்கும் பணம்:

உங்களிடம் 30 லட்சம் கையில் இருந்தால் 10 லட்சத்தில் வீட்டை கட்ட வேண்டும்.

அதுவே 10 லட்சம் தான் கையில் இருக்கிறது என்றால் 5 லட்சத்தில் வீட்டை கட்ட வேண்டும்.

5 லட்சம் வீட்டில் இருந்தால் 4000 ரூபாய்க்கு வாடகை வீட்டில் வாழுங்கள்.

மேல் கூறப்பட்டுள்ளவை ஒரு எடுத்துக்காட்டுகள் தான், ஏன் இதை சொல்கின்றோம் என்றால் நீங்கள் சொந்த வீடு கட்ட வேண்டும் தான், அதற்காக கடனை வாங்கி வீட்டை கட்டாதீர்கள். கடன் வாங்கமால் வீட்டை முடியுமா என்று நீங்கள் கேள்வி கேட்பது புரிகின்றது. நீங்கள் வாங்கும் கடன் ஆனது உங்களுடைய வருமானத்திற்கு ஏற்ற வகையில் வாங்கி கொள்ள வேண்டும்.

லோன் வாங்குவது:

அது போல லோன் வாங்கி வீட்டை கட்டாதீர்கள், ஏனென்றால் லோன் வாங்கி வீட்டை கட்டும் போது அதற்கான வட்டியானது அதிகமாக இருக்கும், நீங்கள் கடைசி வரைக்கும் வட்டி மட்டுமே கட்டி வேண்டியிருக்கும். அது போல தனியாரிடம் கடன் வாங்காதீர்கள், இதிலும் வட்டி தொகையானது அதிகமாக இருக்கும்.

நீங்கள் 10 லட்சத்தை கையில் வைத்து கொண்டு 20 லட்சத்திற்கு வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தால் உங்கள் வாழ்க்கையில் உள்ள மகிழ்ச்சியானது உடைந்து விடும். அதனால் இருக்கின்ற பணத்தில் வீட்டை கட்டுவதற்கு முயற்சியுங்கள்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link

 

Advertisement