AC வாங்கும் முன் இந்த விஷயத்தை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு அப்பறம் வாங்குங்க..! அதான் நல்லது..

Advertisement

Things To Know Before Buying An Ac in Tamil

பொதுவாக எந்த ஒரு பொருளையும் வாங்குவதற்கு முன்னால் அந்த பொருளை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு வகையான செயல் திறன்களை கொண்டிருக்கும். எனவே பொருட்கள் வாங்கும் போது அதனுடைய தரம், வாரண்டி, செயல் திறன் போன்ற பலவற்றை பார்த்து வாங்க வேண்டும். அந்த வகையில் AC வாங்க போனால் இந்த விஷயத்தை மறக்காமல் கேட்டு வாங்க வேண்டும்.  இப்போது வெயில் காலம் தொடங்கி விட்டது. எனவே எல்லோரும் AC வாங்க போவோம். அப்படி போகும்போது இவற்றையெல்லாம் அறிந்து பிறகு வாங்குவது நல்லது.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Things To Know Before Buying an AC in Tamil:

ஸ்டார் ரேட்டிங்:

AC வாங்கும் போது, முதலில் AC-யின் ஸ்டார் ரேட்டிங் என்ன என்பதை பார்த்து வாங்க வேண்டும்.  5 ஸ்டார் AC இருந்தால் மிகவும் சிறந்தது. அப்படி உங்கள் பட்ஜெட் சற்று குறைவாக இருந்தால் 3 ஸ்டார் ரேட்டிங் AC சிறந்தது. ஏனென்றால், அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட AC-தான் நல்ல செயல்திறனை கொண்டிருக்கும். அதுமட்டுமில்லாமல் அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட AC தான் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தி மின்கட்டணத்தை சேமிக்கும்.

இன்வெர்ட்டர் டெக்னாலஜி:

AC வாங்கும் போது இன்வெர்ட்டர் டெக்னாலஜி உள்ள AC -ஆக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். ஏனென்றால், ஏசியில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்று. இன்வெர்ட்டர் டெக்னாலஜி கொண்ட AC ஆனது, அவற்றின் செயல்திறனை அதிகரிப்பதோடு, அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்தாமல் அறையில் சரியான அளவில் வெப்பநிலையை பராமரிக்கிறது. எனவே இன்வெர்ட்டர் AC தான் சிறந்தது.

கார்ல ஏசியை போடுவதற்கு முன் இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..

காப்பர் கம்ப்ரசர்:

AC வாங்கும் போது அதில் சரியான கம்ப்ரசர் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். AC-யில் காப்பர் கம்ப்ரசர் இருந்தால் மிகவும் சிறந்தது. ஏனென்றால் இது நீடித்து உழைக்கக்கூடியது. மேலும், ஏசியில் ஏற்படும் சேதத்தை குறைத்து விரைவில் AC ரிப்பர் ஆகாமல் பார்த்து கொள்ளும்.

வாரண்டி:

இப்போது வரும் பெரும்பலமான ஏசிகள் 1 ஆண்டிற்கான என்டர் ப்ராடெக்ட் வாரண்டி (Entire Product Warranty) உடன் வருகின்றன. இருப்பினும், சில பிராண்டு ஏசியின் கம்ப்ரசர் 10 ஆண்டு வாரண்டியுடன் வருகின்றன. எனவே, ஏசியின் கம்ப்ரசருக்கு எத்தனை ஆண்டு வாரண்டி இருக்கிறது என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

Eco-friendly R-32 Gas:

நீங்கள் வாங்கும் AC ஆனது, R-32 கேஸை பயன்படுத்துகிறதா..? என்பதை கேட்டு வாங்க வேண்டும். ஏனென்றால், R-32 கேஸ் தான் சுற்றுசூழலுக்கு உகந்தது.

ஏசியை நம் வீட்டில் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

இன்ஸ்டாலேஷன் கட்டணங்கள்:

நீங்கள் ஏசியை வாங்கியதும், ஏசியின் இன்ஸ்டாலேஷன் கட்டணங்கள் பற்றி தெளிவாக கேட்டு தெரிந்த கொள்வது அவசியம். அதாவது, ஏசியை  இன்ஸ்டாலேஷன் செய்வதற்கு கட்டணங்கள் விதிக்கப்படுமா அல்லது இலவசமாக செய்து தரப்படுமா என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement