வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

திருச்சிற்றம்பலம் என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..?

Updated On: May 2, 2024 6:37 PM
Follow Us:
Thiruchitrambalam Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Thiruchitrambalam Meaning in Tamil

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்..! பொதுவாக நம் அனைவருக்குமே கடவுளின் மீது நம்பிக்கை அதிகமாக இருக்கும். அதிலும் சிலருக்கு சில கடவுளின் மீது அதீத பக்தி இருக்கும். அதனால் நாம் கோவிலுக்கு செல்லும் போதும், அல்லது நமக்கு ஏதாவது பிரச்சனை வரும் போதும், அந்த கடவுளுக்கு உகந்த மந்திரத்தையோ அல்லது கடவுளின் பெயரையோ கூறுவது வழக்கம். அப்படி கூறும் பெயர்களில் ஓன்று தான் திருச்சிற்றம்பலம் என்பது பலரும் இந்த வார்த்தையை கூறி கேட்டிருப்போம். ஆகவே இந்த பதிவின் வாயிலாக திருச்சிற்றம்பலம் என்ற சொல்லின் அர்த்தம் என்ன என்பதை படித்தறியலாம் வாங்க..!

“ஓம் நமசிவாய” என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..

திருச்சிற்றம்பலம் விளக்கம்:

பொதுவாக நாம் அனைவருமே இந்த திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம்.

சிறு+அம்பலம்= சிற்றம்பலம். இதற்கு சிறிய வெளி என்று பொருள். அம்பலம் என்பது வெளி, ஆகாயம், அரண்மனை போன்ற பொருளைத் தருகிறது. 

நமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் பழைய வேதங்கள் கூறுகின்றன.

அப்படி நமக்குள் இருக்கும் ஆன்மாவுக்குள் ஆன்மாவாய் இறைவன் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டிருப்பதாய் சிவாகமங்கள் கூறுகின்றன. ஆகவே இதனை நாம் உணர்ந்து வழிபட்டு உய்வதற்காக தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்காட்சியளித்ததாக கோவில் புராணங்கள் கூறுகின்றன.

அதாவது நாம் தான் அது, அதுவே தான் நாம் என்பதை உணர்த்துவதற்க்கே இந்த ஆனந்த திருநடனம் உருவானதாக சொல்லப்படுகிறது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால், மனிதனின் அகம் ஒரு கோயில் ஆகும். உள்ளம் ஒரு பெருங்கோயில் என்றும், ஊன் உடம்பு ஆலயம் என்றும் சொல்லப்படுகிறது.

ஆகவே நம்முள் இருக்கும் ஆன்மா தான் திருச்சிற்றம்பலம் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக தில்லையை சுற்றி வசிக்கும் மக்களும், சிவனே சிவம் என்று உணர்ந்த ஆன்மீக பெருமக்களும் ஒருவருக்கொருவர் பார்க்கும் போதும், பேசும் போதும், தொடக்கத்திலும் முடிவிலும் இரு கைகளையும் கூப்பி திருச்சிற்றம்பலம் என்று கூறுவர். அதற்கு எதிர்புரம் உள்ளவர்கள் தில்லையம்பலம் என்று பதிலுக்கு வணக்கம் கூறுவர்.

இதற்கு என்ன பொருள் என்றால், (பின்டத்தில் இருக்கும் உன் ஆன்மா அண்டத்தில் கரையட்டும்) உண்ணுள் இருக்கும் உன் ஆன்மா சிற்றம்பலத்தில் நிறைவு பெறுவதாக பரிபூரணமாக என்று பொருள்.

திருச்சிற்றம்பலம் அர்த்தம் என்ன..?

அதாவது திருச்சிற்றம்பலம் என்றால், உங்கள் ஆத்மா நிறைவு பெறட்டும் என்று அர்த்தம் ஆகும். 

அதற்கு எங்கே செல்ல வேண்டும் என்றால் தில்லையம்பலம் என்று எதிரில் உள்ளவர் பதில் வணக்கம் சொல்லுவர்.

ஆகவே உங்களை பார்த்து இனிமேல் யாராவது திருச்சிற்றம்பலம் என்று சொன்னால் உங்கள் ஆன்மா நிறைவு பெறட்டும் என்று அவர்கள் வாழ்த்துகிறார்கள் என்று அர்த்தம். ஆகவே நீங்களும், பதிலுக்கு தாங்களும் தில்லையம்பலம் என்று கூறவேண்டும்.

அப்படி கூறுவதோடு இல்லாமல், தில்லையம்பலத்தில் உள்ள ஆனந்த கூத்தனை மனதால் தரிசிக்க வேண்டும். உருவத்தில் இருந்து அருவமாக உன் ஆன்ம கரைய வேண்டும் என்றால் தில்லைக்கு போக வேண்டும். இதனால் உனக்கு முக்தி கிடைக்கும்.

இதனை உணர்த்தவே திருசிற்றம்பலத்தில் நடராஜ பெருமான் மனித ரூபத்தில் ஆனந்த கூத்தாடுகிறான்.

ஆகவே நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள்.

காரணம், மனிதன் நாள்தோறும் 21,000 தடவை மூச்சு விடுவதையும், அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள்.

எனவே மனித உடலும் ஒரு கோயில் தான் என்பதை உணர்த்துவதே இந்த சிதம்பர ரகசியம்..!

சிதம்பரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை எல்லாம் மனக் கண்ணால் பார்க்க வேண்டியது. அதாவது திரை ரகசியம். திரை விலகினால் ஒளி தெரியும். மாயை விலகினால் ஞானம் பிறக்கும். இதை தான் அப்படி கூறியிருக்கிறார்கள்.

சிவன் மந்திரம் தமிழ்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now