திருப்பாவை பாடல் 30 விளக்கம்

Advertisement

திருப்பாவை விளக்கம் 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காமில் ஆண்டாள் எழுதிய  திருப்பாவையின்  முப்பதாவது பாடலின் விளக்கத்தை பற்றித் தான்  பார்க்கப்போகிறோம். திருப்பாவை என்றாலே பஜனைதான் எல்லாருக்கும் நினைவுக்கு வரும்.  நாச்சியார் திருமொழி என்ற பெயரில் ஆண்டாள் எழுதிய பாசுரகம் தான் திருப்பாவை ஆகும். சைவம், வைணவம்  ஆகிய இரண்டு பிரிவினரும் அனுபவிக்கும் பாடல் தொகுப்பு திருப்பாவை ஆகும். திருப்பாவை பாடலை படிக்கும் கன்னி பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. இந்த பாடலின் வழியானது மார்கழி மாதம் பீடை மாதமாக இல்லாமல் நன்மை சேர்க்கும் மாதமாக இருக்க வேண்டும் என்று அமையப்பெற்றதாகும். மேலும் திருப்பாவை பாடலின் முப்பதாவது விளக்கத்தை படித்தறியலாம் வாங்க……

நாலடியார் பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

திருப்பாவை பாடல்: 30

வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை, அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ எம்பாவாய்.

பாடல் விளக்கம்:

அலைகள் நிறைந்துள்ள வங்கக்கடலை கடந்த மாதவனும், அரக்கன் கேசியைக் கொன்ற கேசவன் ஆனா கண்ணனை, சந்திரனை போல அழகிய முகத்தை கொண்ட அணிகலன்களை அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரதம் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த, தாமரை போன்ற முகத்தை உடைய பெரியாழ்வாரின் மகளாகிய ஆண்டாள், இனிய தமிழ் மொழியான முப்பது பாடல் பாடிய பாமாலைகளை தொடுத்துரிக்கிறார். இந்த பாடலை பாடியவர்கள் உயர்ந்த தோள்களையுடைவனும், அழகிய கண்களையுடையவனும், திருமுகத்தை கொண்ட செல்வத்திற்கு அரசாலும் அதிபதியான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வ செழிப்புடன் இன்பம் பெற்று வாழ்வர்.

 

இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil
Advertisement