தமிழ்நாட்டில் திதி கொடுக்கும் முக்கியான இடங்கள்.!

Advertisement

திதி கொடுக்கும் இடங்கள் தமிழ்நாடு | Thithi Places in Tamilnadu

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் திதி கொடுக்கலாம் (Thithi Places in Tamilnadu) என்பதை பின்வருமாறு கொடுக்கலாம். இறந்த நம் முன்னோர்களை வழிபடும் விதமாக அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுத்து வணங்க வேண்டும். இறந்த நம் முன்னோர்களை திருப்திபடுத்தவும், அவர்களின் ஆசியை பெறவும், குடும்பத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்கவும் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் அவசியம். முக்கியமாக, ஆடி அமாவசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசைகளில் தவறாமல் புனித தீர்த்தலங்களுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

இறந்தவர்களுக்கு தர்ப்பணம் தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் கொடுக்கலாம் என்பது பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருங்க வாய்ப்பில்லை. பெரும்பாலும், காசி இராமேஸ்வரம் போன்ற இடங்கள் மட்டும் தான் நமக்கு தெரியும். இதனை தவிர்த்து தமிழ்நாட்டில் திதி கொடுக்க பல இடங்கள் இருக்கிறது. அதனை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

தமிழ்நாட்டில் திதி கொடுக்கும் முக்கியான இடங்கள் | Places to Give Thithi in Tamil Nadu:

திதி கொடுக்கும் இடங்கள் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் திதி கொடுக்கும் முக்கியமான தீர்த்தத் தலங்கள் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம்.

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்தில் மொத்தம் 22 தீர்த்த தலங்கள் உள்ளது. இவற்றில் அக்னி தீர்த்தம் முக்கியமானதாக கருதப்படுகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதர் கோவில் பித்ரு வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது.

திருப்புல்லாணி:

திருப்புல்லாணி ஆனது, இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டத்தில் உள்ளது. திதி கொடுக்க இதுவும் ஒரு முக்கியமான தலமாக இருக்கிறது. திருப்புல்லாணியில் ‘தில ஹோமம்’ மற்றும் தர்ப்பணம் செய்யப்படுகிறது.

திலதர்ப்பணபுரி:

திலதர்ப்பணபுரி ஊர் ஆனது, மயிலாடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வூரில் முக்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் தான் இராமபிரான் தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

திதி கொடுக்க தேவையான பொருட்கள்..!

பவானி கூடுதுறை:

பவானி கூடுதுறை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடலாம்.

திருக்கண்ணபுரம்:

திருக்கண்ணபுரம், திருவாரூர் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள நித்ய புஷ்கரணி நீரில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பு.

கருங்குளம்:

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் கருங்குளம் உள்ளது. இங்கு தாமிரபரணியில் நீராடி மார்த்தாண்டேசரை வழிபட்டால் முன்னோர்களின் சாபம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

திருப்பூவணம்:

இந்த ஊர் ஆனது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்னும் ஊரில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இங்கு வைகையில் நீராடி புஷ்பவனேஸ்வரரை வழிபாடு செய்தால் பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் உள்ள தென்புலத்தார் தீர்த்தத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தமிழ்நாட்டில் உள்ள பிற தர்ப்பண இடங்கள்:

Places to Give Thithi in Tamil Nadu

  • திருவெண்காடு
  • சிவசைலம்
  • ஆழ்வார்குறிச்சி
  • கடையம்
  • திருப்புடைமருதூர்
  • பாபநாசம்
  • திருவையாறு
  • திருவிடைமருதூர்
  • மயிலாடுதுறை
  • சாயாவனம்
  • ஸ்ரீவாஞ்சியம்
  • அவிநாசி
  • தென்காசி

இறந்தவர்களின் திதி தேதியை எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement