Thonmam Endral Enna in Tamil | தொன்மம் என்றால் என்ன.?
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தொன்மம் என்றால் என்ன.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். தொன்மம் என்ற வார்த்தையினை நாம் அனைவரும் பிறர் கூற அல்லது தேர்வுகளில் அறிந்து இருப்போம். ஆனால், தொன்மம் என்றால் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
தொன்மங்கள் என்பது யாராலும் உருவாக்கப்படுவதில்லை. அவை தாமாகவே உருவாகின்றன. தொன்மம் என்பது, பழங்காலத்தில் நடந்த நிகழ்வுகள் பலவற்றை கதை வழியாக இன்று நாம் அறியக்கூடிய ஒன்றாக இருக்கிறது. எனவே, அவற்றை பற்றி பின்வருமாறு விவரமாக பார்க்கலாம்.
தொன்மம் என்றால் என்ன.?
தொன்மம் என்பது பழங்கதைகள், புராணங்கள், நாட்டுப்புறக் கதைகள் ஆகியவற்றின் தொகுப்பாகும். தொன்மை என்றால் பழமை என்று பொருளப்படும். தொன்மை என்பதை ஆங்கிலத்தில் Myth என்று கூறுவார்கள். பழங்காலத்தில் உள்ள உண்மைச் சம்பவங்கள் அல்லது வரலாற்று நிகழ்ச்சிகளை தொகுத்து கதையாக அமைப்பதே தொன்மம் ஆகும்.
சில தொன்மங்கள் சமய நம்பிக்கைகளையும், சடங்குகளையும் வெளிச்சப்படுத்துகின்றன. இன்னும் சில தொன்மங்கள் உவமை கதைகளாகவும் மெய்யியல் உருவகங்களாகவும் நின்று சமுதாயத்திற்கு வழி காட்டுகின்றன. தொன்மங்களை பற்றி ஆராயும் துறை தொன்மவியல் ஆகும்.
தொன்மம் எங்கும் எப்போதும், எல்லா காலத்திலும் வழக்கில் இருக்கும் ஒன்றாகும். இக்காலத்துடன் கடந்த காலத்தை இணைப்பது தொன்மம். சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய இலக்கியங்கள் வரை சொல்லவந்த கருத்தை விளக்குவதற்கு தொன்மங்கள் எடுத்துக்காட்டாகவும் குறியீடாகவும் புதுப்பிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ் இலக்கியங்களில், தொன்மங்கள் சார்ந்த பல புராண கதைகள் உள்ளது. இந்த புராண கதைகள் அனைத்தும், இக்காலத்தில் நடக்கும், சிக்கல்களை எடுத்துரைப்பதற்கு மாற்று வடிவில் பயன்படுகின்றன. அகநானூறு, நற்றிணை, கலித்தொகை, இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் தொன்ம செய்திகள் மிகுதியாக காணப்படுகிறது. குறிப்பாக, தொன்மை இலக்கியங்களுக்கு இராமாயணமும், மகாபாரதமும் மிக சிறந்த சான்றுகளாக உள்ளன.
தொன்மம் பற்றி தொலைக்காப்பியர் கூற்று:
“தொன்மை தானே சொல்லுங் காலை உரையோடு புணர்ந்த பழமை மேற்றே”
தொன்மம் பற்றி இளம்பூரணர் உரை:
தொன்மையாவது உரையோடு பொருந்திப் போந்த பழமைதாகிய பொருள் மேல் வருவன. அவை இராம சரிதமும் பாண்டவசரிதமும் முதலாகியவற்றின் மேல்வருஞ் செய்யுள்.
தொன்மம் பற்றி பேராசிரியர் உரை:
தொன்மை என்பது, உரைவிராஅய்ப் பழமையனவாகிய கதைப்பொருளாக செய்யப்படுகிறது. அவை பெருந்தேவனார் பாரதம், தகடூர் யாத்திரை போல்வன்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |