சங்க இலக்கிய திணைகளின் பெயர்கள் மற்றும் பண்புகள்

tinais in sangam literature in tamil

சங்க இலக்கிய திணை வகைகள் 

இன்றைய பதிவில் சங்க இலக்கியம் சார்ந்த விஷயங்களை படித்தறியலாம். சங்க இலக்கியத்தில் 5 வகை திணைகள் காணப்பட்டது. நிலத்தை அடிப்படையாக கொண்டு மக்கள் வாழும் நிலப்பகுதியை பிரித்தனர். அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் கலாச்சாரத்தையும் போற்றும் வகையில் இருந்தது.சங்க இலக்கியங்களில் பலவகையான நூல்களில் இந்த திணைகளை பற்றி சங்க கால புலவர்கள் கூறியுள்ளனர். அந்த நிலப்பகுதிகளை பற்றி இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்..

5 வகை நிலத்திணைகள்:

தமிழ் இலக்கணத்தில் ஐந்திணை நிலங்கள் என்பது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்தாகப் பிரிக்கப்படுகிறது.

இதில் குறிஞ்சி என்பது மலையையும் மலை சார்ந்த இடத்தையும், முல்லை என்பது காடுகள் மற்றும் காடுகள் சார்ந்த இடத்தையும், மருதம் என்பது வயல் மற்றும் வயல் சார்ந்த இடத்தையும், நெய்தல் என்பது கடல் மற்றும் கடல் சார்ந்த இடத்தையும், பாலை என்பது வெற்று மணல் பரப்புகளையும் குறிக்கும்.

தமிழ் இலக்கியம் இந்த ஐந்திணைகளுக்கும் உரிய பல்வேறு சிறப்புகளை எடுத்து கூறுகிறது. ஒவ்வொரு திணைக்கும் உரிய தெய்வம், மக்கள், உணவு, விலங்கு, பூ, மரம், பறவை, ஊர், நீர், பறை, யாழ், பண், தொழில் ஆகியவை பற்றியும் தமிழ் இலக்கணம் சிறப்பித்து கூறுகிறது.

குறிஞ்சித் திணை | (Kurinji Thinai):

குறிஞ்சி திணை

குறிஞ்சித் திணை என்பது மலைகளையும் மலை சார்ந்த இடங்களையும் குறிக்கும். மேற்குக் காற்றாடி மலைகள், கிழக்குக் காற்றாடி மலைகள், பழனி, நீலகிரி, ஆனைமலை போன்ற பகுதிகள் அனைத்தும் தமிழ் நாட்டின் குறிஞ்சி நிலப் பகுதியாகத் திகழ்கின்றது.

குறிஞ்சி திணை சிறப்புகள்:

தெய்வம்: முருகன் 

மக்கள் : குறவன், குறத்தியர்

உணவு : தினை, மலை நெல்

விலங்கு: புலி, கரடி, சிங்கம்

பூ : குறிஞ்சி, காந்தள்

மரம் : அகில், வேங்கை

பறவை : கிளி, மயில்

ஊர் : சிறுகுடி

நீர் : அருவி நீர், சுனை நீர்

பறை : தொண்டகப் பறை

யாழ் : குறிஞ்சியாழ்

பண் : குறிஞ்சிப்பண்

தொழில் : தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்

முல்லை திணை | (Mullai Thinai) :

முல்லை திணை Mullai Thinai

முல்லை திணை என்பது காடுகளையும் காடு சார்ந்த இடங்களையும் குறிக்கும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலம் வாசனை மிகுந்த முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. ” மாயோன் மேய காடுறை உலகமும்” எனத் தொல்காப்பியம் முல்லை சிறப்பு பற்றிக் கூறுகிறது.

முல்லை திணை சிறப்புகள்:

தெய்வம்: திருமால் 

மக்கள் : ஆயர், ஆய்ச்சியர்

உணவு : வரகு, சாமை

விலங்கு: முயல், மான்

பூ : முல்லை, தோன்றி

மரம் : கொன்றை, காயா

பறவை : காட்டுக்கோழி, மயில்

ஊர் : பாடி, சேரி

நீர் : காட்டாறு

பறை : ஏறுகோட்

யாழ் : முல்லையாழ்

பண் : முல்லைப்பண்

தொழில் : ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல்

மருதம் திணை | (Marutham Thinai):

மருதம் திணை Marutham Thinai

மருதம் திணை என்பது வயலும் வயல் சார்ந்த பகுதிகளையும் குறிக்கும். “வேந்தன் மேய தீம்புனல் உலகமும்” -என்கிறது தொல்காப்பியம். மருத நிலத்தலைவர்கள் மகிழ்னன், வேந்தன் , ஊரன் கிழவன் என்றும் வேளாண்மை செய்யும் பொருட்டு வேளாளர் என்றும் அழைக்கப்பட்டனர். இவ்வாறு மருதநில கடவுளாக வேந்தனைதொல்காப்பியம் கூறுகிறது.

மருத திணை சிறப்புகள்:

தெய்வம்: இந்திரன் 

மக்கள் : உழவர், உழத்தியர்

உணவு : செந்நெல், வெண்ணெய்

விலங்கு: எருமை, நீர்நாய்

பூ : செங்கழுநீர், தாமரை

மரம் : காஞ்சி, மருதம்

பறவை : நாரை, நீர்க்கோழி, அன்னம்

ஊர் : பேரூர், மூதூர்

நீர் : மனைக்கிணறு, பொய்கை

பறை : மணமுழா, நெல்லரிகிணை

யாழ் : மருதயாழ்

பண் : மருதப்பண்

தொழில் : நெல்லரிதல், களைபறித்தல்

நெய்தல் திணை | (Neithal Thinai):

நெய்தல் திணை என்பது கடலையும் கடல் சார்ந்த இடத்தையும் குறிக்கும். பெரும்பொழுது ஆறும் நெய்தல் அனைத்தும் திணைக்கு உரியன. மருதத்தைப் போலவே நெய்தலுக்கும் ஆண்டு முழுவதும் உரிய காலமாகும். தொல்காப்பியம் “வருணன் மேய பெருமணல் உலகமும்” என அழகாக நெய்தலுக்கு உரிய காலத்தை விளக்குகிறது.

நெய்தல் திணை சிறப்புகள்:

தெய்வம்: வருணன் 

மக்கள் : பரதர், பரத்தியர்

உணவு : மீன்

விலங்கு: முதலை, சுறா

பூ : தாழை, நெய்தல்

மரம் : புன்னை, ஞாழல்

பறவை : கடற்காகம்

ஊர் : பட்டினம், பாக்கம்

நீர் : மணற்கிணறு, உவர்க்கழி

பறை : மீன்கோட்பறை

யாழ் : விளரியாழ்

பண் : செவ்வழிப்பண்

தொழில் : மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்

பாலை திணை | (Palai Thinai):

palai thinai

பாலை திணை என்பது குறிஞ்சித் திணை மற்றும் முல்லைத் திணை ஆகிய இரண்டு நிலத்திணைகளுக்கும் இடையில் அமைந்த பாழ் நிலப்பகுதியைக் குறிக்கும். குறிஞ்சி, முல்லை எனும் இரண்டு நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப்பகுதி பாலை எனப்படுகிறது. அதாவது காடாகவுமில்லாமல், மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து காணப்படும் வெப்பம் மிகுந்த பகுதிகள் அதனை சார்ந்த இடங்களும் பாலை நிலமாகும்.

பாலை திணை சிறப்புகள்:

தெய்வம்: கொற்றவை 

மக்கள் : எய்னர், எய்யிரியர் 

உணவு : களவு செய்வதன் மூலம் கிடைக்கும் பொருள் 

விலங்கு: வலிமை இழந்த யானை 

பூ : குரவம், பாரிதி 

மரம் : இலுப்பை, பாலை 

பறவை : புறா, பருந்து 

ஊர் : குறும்பு 

நீர் : வற்றிய சுணை, கிணறு 

பறை : துடி 

யாழ் : பாலை யாழ் 

பண் : பன்சுரப்பன் 

தொழில் : வழிப்பறி செய்தல் 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil