நில மதிப்பை எவ்வாறு கணக்கிடுவது? TN Registration New update for Land Guideline Value in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. ஒரு நிலத்தினுடைய வழிகாட்டி மதிப்பு அதாவது land guideline value-ஐ ஏப்ரல் 1-தேதி 2023-யில் முதல் தமிழக அரசு புதிப்பித்துள்ளனர். ஆக ஒரு இடத்தினுடைய புதிய Land Value-ஐ எப்படி தெரிந்துகொள்வது. கூடவே பதிவு கட்டணமாக நாம் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
Land New Guideline Value Tamil:
ஒரு இடத்தினுடைய புதிய வழிகாட்டி மதிப்பு அதாவது land guideline value-ஐ தெரிந்துகொள்வதற்கு தமிழக அரசின் பதிவு திரை அதிகாரப்பூர்வ இணையதளமான tnreginet.gov.in-ற்கு செல்லவும்.
அதில் வழிகாட்டி மதிப்பு என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது வழிகாட்டி மதிப்பு மற்றும் சொத்து மதிப்பீடு என்ற பக்க திறக்கப்படும்.
அதில் நீங்கள் வழிகாட்டி தேடல் என்பதை From 1-4-2023 என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது ஒரு பக்கம் திறக்கப்படும் அதில் நீங்கள் தெரு பெயர் அடிப்படையில் தேடுவதற்கு இங்கே சொடுக்கவும் என்பதில் தெரு அல்லது புல எண் எது உங்களுக்கு தெரியுமே அதனை கிளிக் செய்யுங்கள்.
உதாரணத்திற்கு நீங்கள் புல எண் என்பதை தேர்வு செய்திருந்தால். தேடுதல் வரையறை என்ற ஆப்ஷனில் நிலத்தின் வகைப்பாடு வாரிய அல்லது புல எண் வாரியாக என்ற ஆப்சன் இருக்கும் அவற்றிலும் நீங்கள் புல எண் வாரியாக என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
பிறகு மண்டலம், சார்பதிவாளர் அலுவலகம், பதிவு கிராமம், புல எண் ஆகிய விவரங்களை உள்ளிட்டு தேடுக என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
பிறகு எந்த பக்கத்தின் கீழ் புறம் மேல் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் வரும். அந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை வரைத்து நில மதிப்பை நீங்கள் எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
காலி சிலிண்டரை மாற்றும்பொழுது இப்படி நடந்தா ஆளே காலி!!
பதிவு கட்டணம்:
ஒரு நிலத்தை நீங்கள் வாங்க விரும்புகிறீர்கள் என்றால், முத்திரைத் தீர்வை கட்டணம் அதாவது அந்த இடத்தின் மொத்த மதிப்பு எவ்வளவோ அதனை 7 சதவீதம் stamp duty செலுத்த வேண்டும். அதேபோல் பதிவு கட்டணமாக அந்த இடத்திற்க்கான மொத்த மதிப்பில் 2 சதவீதம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆக நீங்கள் வாங்க இருக்கும் நிலத்தினுடைய ஒரு சதுரடி எவ்வளவோ அதனுடைய மதிப்பை இந்த இணையத்தளத்திலேயே பதிவு செய்துள்ளனர். ஆக அந்த ஒரு சதுரடிக்கான மதிப்பை வைத்தே நீங்கள் வாங்க இருக்கும் மொத்த நிலத்தினுடைய மதிப்பை தெரிந்துகொள்ளலாம். ஆக அந்த இடத்திற்க்கான மொத்த stamp duty எவ்வளவு, பதிவு கட்டணம் எவ்வளவு என்று நீங்களாகவே தெரிந்துகொள்ளலாம்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |