TNPSC குரூப் 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

Advertisement

TNPSC Group 4 Apply Online in Tamil

எல்லோருக்குமே அரசு வேலைகளில் சேர வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசையாக உள்ளது. அரசு வேலைக்காக இப்பொழுது உள்ள இளைஞர்கள் பெரிதும் போராடி கொண்டிருக்கிறார்கள். அதுவும் TNPSC தேர்விற்கு தயாராகாத இளைஞர்களே இருக்க மாட்டார்கள். அந்த வகையில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள TNPSC குரூப் 4 தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

TNPSC Group 4 Apply Online 2022 in Tamil:

tnpsc apply online in tamil

  • https://apply.tnpscexams.in/ என்ற வலைத்தளத்திற்கு செல்லவும். பின் அவற்றில் விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்யவும். (One Time Registration செய்யாதவர்கள் நிரந்தர பதிவு விவரங்கள் என்பதை கிளிக் செய்து புதிய பதிவு செய்ய நுழைவோர் என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்).

How to Apply TNPSC Group 4 Exam Online in Tamil:

tnpsc group 4 apply online in tamil

  • அதில் தேர்விற்கான அறிவிப்பு விளம்பரம் இருக்கும் அவற்றில் Apply Now என்பதை கிளிக் செய்தால் மேலே காட்டப்பட்டுள்ளதை போல ஒரு பேஜ் ஓபன் ஆகும். அதில் ஏற்கனவே Register செய்திருந்தால் User name, Password கொடுத்து சமர்ப்பிக்க என்பதை கிளிக் செய்யவும்.

TNPSC Group 4 Apply Online in Tamil:

how to apply tnpsc group 4 exam online in tamil

  • சமர்ப்பி கொடுத்தவுடன் அடுத்த பேஜ் ஒபனாகும். அதில் Click Here to Apply Online Services என்பதை கிளிக் செய்தால் அடுத்த பகுதி திறக்கப்படும்.

TNPSC Group 4 Apply Online 2022 in Tamil:

how to apply tnpsc group 4 exam online in tamil

  • அதில் சில விவரங்கள் இருக்கும் அதை படித்து விட்டு தொடர்க என்பதை கிளிக் செய்யவும்.

How to Apply TNPSC Group 4 Exam Online in Tamil:

how to apply tnpsc group 4 exam online in tamil

  • பின்னர் தேர்வு பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அதை படித்து விட்டு I Agree Terms and Conditions என்பதை டிக் செய்து விட்டு Save and Continue என்பதை கிளிக் செய்யவும்.

TNPSC Group 4 Apply Online in Tamil:

how to apply tnpsc group 4 exam online in tamil

  • கிளிக் செய்த பிறகு அடுத்த பகுதியில் புகைப்படத்தை இணைக்க வேண்டும், அதற்கு முன்னர் உங்களது கையொப்பம் மற்றும் புகைப்படம் சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள அறிவுரைகளை படிக்க இங்கே சொடுக்கவும் என்பதை கிளிக் செய்து படித்துக்கொள்ளவும்.
  • புகைப்படத்தில் உங்கள் பெயரும், எப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்ற தேதியும் இருக்க வேண்டும். புகைப்படத்தின் அளவு உயரம் 4.5 செ.மீ, அகலம் 3.5 செ.மீ இருக்க வேண்டும். கையெழுத்தின் அளவு அகலம் 6 செ.மீ, உயரம் 2 செ.மீ இருக்க வேண்டும்.
  • பின்னர் புகைப்படத்தை Upload செய்து விட்டு Save Photo என்பதை கிளிக் செய்யவும். கையெழுத்தை Upload செய்து விட்டு Save Signature என்பதை கிளிக் செய்யவும்.

TNPSC Group 4 Apply Online 2022 in Tamil:

tnpsc group 4 apply online in tamil

  • பின்னர் கீழே One Time Registration செய்யும் போது கொடுத்த விவரங்களை சரிபார்த்து கொள்ளவும். அதற்கும் கீழே One Time Registration செய்யும் போது  கொடுத்த பெயர், பிறந்த தேதி, பாலினம், வகுப்பு, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பின்னர் I Agree Terms and Conditions என்பதை டிக் செய்து விட்டு Save and Proceed என்பதை கிளிக் செய்யவும்.

TNPSC Group 4 Apply Online in Tamil:

tnpsc group 4 apply online in tamil

  • பின்னர் அடுத்த பேஜ் ஓபன் ஆகும். அதில் தங்களது முகவரி கொடுக்கப்பட்டிருக்கும் அது சரியா உள்ளதா என்பதை பார்த்து விட்டு (முகவரி சரியாக இல்லையெனில் Edit கொடுத்து மாற்றி கொள்ளவும்) Save and Continue என்பதை கிளிக் செய்யவும்.

TNPSC Group 4 Apply Online in Tamil:

tnpsc group 4 apply online in tamil

கிளிக் செய்தவுடன் அடுத்த பேஜ் ஓபன் ஆகும் அதில் கல்வி தகுதி பற்றிய விவரங்களை கொடுக்க வேண்டும். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ அல்லது டிகிரி படித்த விவரங்களை சரியாக உள்ளிடவும்.

  • விவரங்களை உள்ளிட்டவுடன் I Agree Terms and Conditions என்பதை டிக் செய்து விட்டு Save and Continue என்பதை கிளிக் செய்யவும். பிறகு அடுத்த பகுதி திறக்கப்படும் அதில் நீங்கள் கொடுத்த விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை பார்த்துவிட்டு ஆம் என்பதை கிளிக் செய்யவும்.

How to Apply TNPSC Group 4 Exam Online in Tamil:

tnpsc group 4 exam apply online

  • பிறகு அடுத்த பகுதியில் PSTM கேட்கப்பட்டிருக்கும் தமிழ் வழி கல்வியில் படித்திருந்தால் ஆம் என்பதை கிளிக் செய்து விட்டு கீழே SSLC-ல் தமிழ் வழி கல்வியில் படித்திருந்தால் அதை டிக் செய்யவும், HSC-ல் தமிழ் வழி கல்வியில் படித்திருந்தால் அதை டிக் செய்யவும். இரண்டிலும் தமிழ் வழி கல்வியில் படித்திருந்தால் இரண்டையும் டிக் செய்யவும்.
  • பின்னர் Fill Certificate Details என்பதை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் கீழே PSTM பற்றிய விவரங்கள் வரும் அதில் தங்களது விவரங்களை சரியாக உள்ளிடவும். விவரங்களை பூர்த்தி செய்த பின்பு I Agree Terms and Conditions என்பதை டிக் செய்து விட்டு Save and Proceed என்பதை கிளிக் செய்யவும்.

TNPSC Group 4 Apply Online in Tamil:

tnpsc group 4 exam apply online

  • அடுத்த பகுதி ஓபன் ஆகும். அதில் நீங்கள் Widow, மாற்றுத்திறனாளி, ex-serviceman, Employment Status, Department or disqualification, Criminal Case, பார்வை திறன், Eligibility for appointment போன்றவற்றில் ஆம் என்றால் Yes என்றும் இல்லை என்றால் No என்பதை கிளிக் செய்து I Agree Terms and Conditions என்பதை டிக் செய்து விட்டு Save and Continue என்பதை கிளிக் செய்யவும்.

How to Apply TNPSC Group 4 Exam Online in Tamil:

டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு

  • பிறகு அடுத்த பகுதி திறக்கப்படும். அதில் உங்களுடைய Other Qualification விவரங்களை உள்ளிட்டு Save and Continue என்பதை கிளிக் செய்யவும்.

டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு ஆன்லைனில் tamil

  • பிறகு அடுத்த பகுதி ஓபன் ஆகும் அதில் நீங்கள் Store Maintenance-ல் அனுபவம் இருந்தால் Yes என்றும் இல்லை என்றால் No என்பதை கிளிக் செய்து Save and Continue என்பதை கிளிக் செய்யவும்.

How to Apply TNPSC Group 4 Exam Online in Tamil:

டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு ஆன்லைனில் tamil

  • அடுத்த பகுதியில் தேர்வுக்கான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் தங்களது மாவட்டம், தேர்வு மையம், விண்ணப்ப கட்டணம் போன்றவற்றை பூர்த்தி செய்து விட்டு Save and Continue என்பதை கிளிக் செய்யவும்.

TNPSC Group 4 Exam Apply Online in Tamil:

டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு ஆன்லைனில் tamil

  • பிறகு Preview Page ஓபன் ஆகும். அதில் தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்பதையும் மற்றும் தேர்விற்கான அறிவுரைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதை படித்து விட்டு எல்லாவற்றிற்கும் டிக் கொடுத்து விட்டு I Confirm The Above என்பதை கிளிக் செய்து Yes I Agree Proceed என்பதை கிளிக் செய்யவும். பின்னர் கீழே உள்ள I Agree Final Submission என்பதை கிளிக் செய்யவும்.

How to Apply TNPSC Group 4 Exam Online in Tamil:

டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

  • அடுத்த பகுதி திறக்கப்படும் அதில் உங்களுடைய விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை பார்த்து விட்டு I Confirm The Above என்பதை கிளிக் செய்து Yes I Agree Proceed என்பதை கிளிக் செய்யவும். பின்னர் கீழே உள்ள I Agree Final Submission என்பதை கிளிக் செய்யவும். இப்போது உங்களுடைய விண்ணப்பம் பதிவாகிவிடும்.

TNPSC Group 4 Exam Apply Online in Tamil:

டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

  • விண்ணப்பத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். உங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் Dashboard சென்று Current Application என்பதை கிளிக் செய்து Edit பண்ணிக்கலாம்.
முதல் பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி?

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement