Toor Dal என்றால் தமிழ் என்ன.? அதன் விவரம் இதோ..!

Advertisement

Toor Dal in Tamil Name | Toor Dal in Tamil Uses 

உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்கும் இன்றைய சூழலில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டினால் மற்றும் முறையற்ற வாழ்க்கைமுறையால் ஏற்படும் அனைத்து உடல்நல குறைபாடுகளையும் எதிர்த்து இந்த உலகில் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நமக்கு பெரிதும் உதவுவது நாம் சாப்பிடும் ஆரோக்கியமான உணவுதான். அப்படி நமக்கு மிகவும் உதவும் உணவுகளை பற்றிய சரியான புரிதல் நம்மிடம் இல்லை என்பதே உண்மை.

அதாவது நாம் உண்ணும் உணவுபொருட்களின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், வகைகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவை அனைத்து நமக்கு தெரிந்திருக்காது. எனவே தான் இன்றைய பதிவில் துவரம் பருப்பின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..

Toor Dal in Tamil Name:

Toor Dal என்பதன் தமிழ் பெயர் துவரம் பருப்பு ஆகும். இதனை பெரும்பாலும், சாம்பார் வைப்பதற்கு பயன்படுத்துவார்கள்.

Toor Dal Details in Tamil | Toor Dal Meaning in Tamil Images:

Toor Dal Details in Tamil

இந்த துவரம் பருப்பு என்பது ஃபேபேசி (Fabaceae) குடும்பத்தைச் சார்ந்த ஒரு வற்றாத பருப்பு வகை தாவரம் ஆகும். இதன் பருப்பே துவரம் பருப்பு ஆகும். இந்த பருப்பே ஆசியாவில் முதல் முதலில் பயிரிடப்பட்டதாகக் கருதப்படுகிறது.

தமிழர் சமையலிலும் துவரம் பருப்பு முக்கிய உணவுப்பொருளாக உள்ளது. துவரம் பருப்பு அதிகப் புரதச்சத்துக் கொண்டது. இதன் நிறம் சிகப்பு ஆகும்.

பிறப்பிடம்:

இதன் பிறப்பிடம் என்று ஒன்று குறிப்பிடப்படவில்லை. இது உலகெங்கிலும் உள்ள வெப்பமண்டல மற்றும் அரை வெப்பமண்டல பகுதிகளில் பரவலாக பயிரிடப்படுகிறது, அதிலும் குறிப்பாக தெற்காசியா , தென்கிழக்கு ஆசியா , ஆப்பிரிக்கா , லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் அதிக அளவு பயிரிடப்படுகிறது.

ரணகள்ளி தாவரம் பற்றி யாருக்கும் தெரியாத ரகசியம்

வேறுபெயர்கள்:

இந்த பருப்பானது துவரம் பருப்பு என்று தமிழ் மொழியிலும், ரோஹோர் மஹ் அசாமி மொழியிலும், மிரி-மா பெங்காலி மொழியிலும், அரஹர் குஜராத்தி மொழியிலும், தொகரி பயிர் என்று கன்னட மொழியிலும் குறிப்பிடபடுகிறது.

ஊட்டச்சத்துக்கள்:

இந்த துவரம் பருப்பில் அதிக அளவு புரதம் மற்றும் முக்கியமான அமினோ அமிலங்களான மெத்தியோனைன், லைசின் மற்றும் டிரிப்டோபான் ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

100 கிராம் துவரம் பருப்பில்,

  1. ஆற்றல் – 569 kJ (136 kcal)
  2. கார்போஹைட்ரேட்டுகள் -23.88 கிராம்
  3. சர்க்கரைகள் – 3 கிராம்
  4. நார்ச்சத்து – 5.1 கிராம்
  5. கொழுப்பு – 1.64 கிராம்
  6. புரத – 7.2 கிராம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

பயன்கள் | Toor Dal in Tamil Uses:

  • துவரம் பருப்பினை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
  • அதேபோல் எலும்புகளும் பலம் பெறுகின்றது.
  • இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • இரத்த அழுத்தத்தை மேம்படுத்த பயன்படுகிறது.
  • உடலின் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவுகிறது.

ராஜ்மாவை சாப்பிடுவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil
Advertisement