வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் | Traffic Rules in Tamil

Advertisement

போக்குவரத்து விதிமுறைகள் | Road Safety in Tamil | Tamilnadu Traffic Rules in Tamil | Traffic Rules and Penalties in Tamil Nadu

Traffic Rules in Tamil: இப்போதெல்லாம் சாலை விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் நாட்டில் தினமும் ஒரு இறப்பு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. வாகனத்தில் ஸ்டைலாக போகிறோம் என்ற எண்ணத்தில் வேகமாக சென்று உடலானது விபத்துக்குள்ளாகிறது. இதனை பலரும் புரிந்துகொள்வதில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும். சாலையில் வாகனத்தில் பயணிப்போர் கட்டாயமாக சில சாலை விதிமுறைகளை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். சிலர் வாகனத்திற்கு ஹெல்மட் வைத்திருந்தும் அணியாமல் செல்வார்கள். இதனால் பின்விளைவுகளை சந்திப்பது தாங்கள் தான் என்று சற்று யோசிக்க வேண்டும். இதனால் வாகன ஓட்டிகளின் நலன் கருதி எங்கள் பொதுநலம் பதிவில் சில சாலை விதிமுறைகள் பற்றி பதிவு செய்துள்ளோம். அவற்றை படித்து சாலை விதிமுறைகளை கடைபிடியுங்கள்..! சாலை விதிமுறைகளை பின்பற்றுவோம்..! உயிரை காப்போம்..! 

பான் கார்டு விதிமுறைகளில் ஒரு மாற்றம் – தெரிந்து கொள்ளுங்கள்

சாலை போக்குவரத்து விதிகள் | Road Safety Tips in Tamil:

  1. மதிய வேளைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரில் வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவதுதவறான செயல்.
  2. சாதாரண நேரத்தில் நான்கு திசையிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடக்கூடாது. ஆபத்தாகவோ அல்லது வாகனம் பழுதாகி நிற்கும் போதோ, பழுதடைந்த வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும் போதோதான்  எச்சரிக்கை விளக்கை எரியவிட வேண்டும்.
  3. சிக்னல்கள் அல்லது சாலைகளிலோ வாகனம் நிறுத்தி இருக்கும்போது, எச்சரிக்கை விளக்குகளை எரியவிடாமல் அனைத்து வைக்க வேண்டும்.
  4. சாலையின் நடுவில் குறிப்பிட்ட இடைவெளியில் கோடுகள் போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதே நேரத்தில் தொடர்ச்சியான பெரிய கோடுகள் போடப்பட்டிருந்தால் முந்தி செல்லக்கூடாது என்று அர்த்தம்.
  5. சாலையின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக நாம் எண்ண வேண்டும்.
  6. ஓட்டுனருக்கு 67 அடி தொலைவில் இருந்து வருகின்ற வாகனத்தினையுடைய பதிவு எண்ணை உங்களால் படிக்க முடிந்தால், கண் பார்வை நன்றாகஉள்ளது என்று அர்த்தம். எனவே, வருடத்திற்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
  7. கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிறத்தில் முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, வாகனத்தின் பின்புறம் இருக்கக்கூடிய சிவப்பு சின்னமானது எச்சரிக்கை சின்னமாக கருதப்படுகிறது. சாலையில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அல்லது அவசர  நிலையில் இருக்கும்போது அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.
  8. நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் போது உங்கள் வாகனத்திற்கு எதிராக வரும் வாகனத்திற்கு வசதியாக இருக்கும் வகையில் வாகனத்தின் முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.
  9. சாலையின் வளைவு இடங்களில் வாகனத்தினை வேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவு பகுதிகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் வாகனத்தின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தி செல்லவும். ஆனால் வாகனத்தில் பயணிக்கும் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ வாய்ப்பு நேரிடும்.
  10. கார்களில் பயணிப்போர் “சீட் பெல்ட்’ போடும்போது சட்டைப் பாக்கெட்டில் மொபைல், பென், சில்லரை காசுகள் வைத்துக்கொள்வதை தவிர்த்துக்கொள்வது நல்லது. குறிப்பாக பெண்கள் அதிகமாக அணிகலன்கள்  அணிவதை தவிர்க்க வேண்டும்.  ஏதேனும் திருட்டு போனால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.
  11. நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் பெரும்பாலும் அரளி செடிகள் வைத்திருப்பதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். இதற்கு என்ன காரணம் என்று கேட்கிறீர்களா? எதிரில் வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து நமது கண்களை பாதுகாக்கும். இதனால் தான் அந்த செடியை வளர்த்து வைத்துள்ளார்கள். வறட்சியை தாங்கும் இந்த செடிகளின் வேர்கள் அதிகமாக ஒளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகமாக உரிந்துகொள்ளும் தன்மை உடையது.
  12. ஏதேனும் அவசர அழைப்பிற்கு அரசானது வெளியிட்ட எண்ணானது 108 என்பது அனைவருக்கும் தெரியும். 108 மட்டுமல்லாமல் 112 என்ற எண் இருப்பது இன்றும்  பலருக்குதெரியவில்லை. தங்களுடைய மொபைல் “டவர்’ இல்லாத இடங்களிலும், போன் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், குறிப்பாக “சிம் கார்டு’ இல்லாத நேரத்திலும் கூட இந்த 112 எண்ணை அவசர உதவிக்கு அழைக்கலாம். என்ன நண்பர்களே சாலை விதிகளை எப்படி பின்பற்ற வேண்டும் என்று படித்து தெரிந்துகொண்டீர்களா..! இதனை தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்..! மிகவும் பயனுள்ள பதிவு. சாலை விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவோம்..! சாலை விபத்துகளிலிருந்து மீள்வோம்..!

Traffic Rules and Penalties in Tamil Nadu:

போக்குவரத்து விதிமீறல் அபராதம்
செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் (DL) இல்லாமல் வாகனம் ஓட்டுதல்/சவாரி செய்தல் 5000
சரியான காப்பீடு இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல்/சவாரி செய்தல் 2,000
ஹெல்மெட் இல்லாமல் சவாரி (ரைடர்/பில்லியன்) 1,000
சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் 1,000 
குடிபோதையில் அல்லது வேறு ஏதேனும் போதையில் வாகனம் ஓட்டுதல்/சவாரி செய்தல் 10,000 மற்றும்/அல்லது 6 மாத சிறைத்தண்டனை
செல்லுபடியாகும் பதிவுச் சான்றிதழ் (RC) இல்லாமல் வாகனம் ஓட்டுதல்/சவாரி செய்தல் 5,000
போக்குவரத்து போலீசாரின் அறிவுரைகளை மதிக்கவில்லை 2,000
டிஎல் ரத்து செய்யப்பட்ட பிறகும் வாகனம் ஓட்டுதல் 5,000
இரு சக்கர வாகனங்களில் அதிக சுமை ஏற்றுதல் 2,000 மற்றும் 3 மாதங்களுக்கு டிஎல் தடை
போக்குவரத்து விதிமீறல் அபராதம்
சிறார்களால் செய்யப்படும் குற்றங்கள் 25,000 மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
சரியான அனுமதி இல்லாமல் வாகனம் ஓட்டுதல் 10,000
கவனக்குறைவாக அல்லது அவசரமாக வாகனம் ஓட்டுதல் 5,000
சாலை விதிகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பான குற்றங்கள் 500
அதிக வேகம் 300
கற்றல் உரிமம் (LL) தொடர்பான விதிகளை மீறுதல் 150

 

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement