Train First Number Information in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் ரயில் பற்றிய சில தகவல்களை பற்றி தெரிந்துகொள்ளலாம். பொதுவாகவே எல்லாருக்கும் ரயிலில் பயணம் செய்வது என்றாலே அதிகமாக விரும்புவார்கள். நம்முடைய நாட்டில் ரயிலில் பயணம் செய்யாதவர்கள் இருக்கவே மாட்டார்கள். ஏதாவது ஒரு ரயிலில் நீங்கள் உள்ளூர் வெளியூர் என்று பயணம் செய்திருப்பீர்கள் அல்லது வெளி மாநிலங்களுக்கும் பயணம் செய்திருப்பீர்கள். ஆனால் ரயில் பெட்டிகளில் உள்ள ஐந்து இலக்கு எண்கள் எதற்காக இருக்கிறது என்று யாருக்கும் தெரிவதில்லை. மேலும் ஐந்து இலக்கு எண்கள் எதற்காக இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
ரயில் புறப்படும் போது ஏன் பச்சை கொடி காட்டுகிறார்கள் தெரியுமா? |
முதல் இலக்கு எண்கள்:
இந்திய ரயில்வே ஆனது டிசம்பர் 20 2010 ஆம் ஆண்டு முதல் இந்திய ரயில்வே அமைச்சகம் ஐந்து இலக்கு எண்களை கொண்டு பயணிகள் ரயில்களுக்கான முந்தைய காலத்தில் நான்கு இலக்கு எண்ணாக இருந்தது. அதன் பிறகு இவை ஐந்து இலக்கு எண்ணாக மாறியது.
ஐந்து இலக்கு எண்களில் முதல் எழுத்து புஜ்ஜியமாக இருந்தால் அவை சிறப்பு ரயில்கள் என்று சொல்லப்படுகிறது. அதாவது விடுமுறை நாட்களில் பண்டிகை நேரங்களிலும், கோடைகாலங்களில் மட்டும் இந்த ரயில்கள் சிறப்பு ரயில்களாக அனுப்பப்படுகிறது.
அதேபோல் முதல் இலக்கு எண்கள் ஒன்றாக இருந்தால் ராஜதானி, சகாப்த்தி போன்ற மிகவும் தூரமாக இருக்கும் ஊர்களுக்கு மட்டும் இந்த ஒன்று இலக்கு எண்களை கொண்ட ரயில் சிறப்பாக செல்கிறது, அதேபோல் எஸ்பிரஸ் ரயில்களிலும் இந்த ஒன்று இலக்கு எண்கள் இருக்கும்.
கொல்கத்தா மற்றும் புறநகர் போன்ற ரயில்களுக்கு முதல் இலக்கு எண்கள் மூன்றாக இருக்கும்.
சென்னை, புது டெல்லி போன்ற இடங்களுக்கு முதல் இலக்கு எண் நான்காக இருக்கும். அதேபோல் பிற புறகரங்களுக்கு செல்லும் ரயிலுக்கும் முதல் இலக்கு எண்கள் நான்காக இருக்கும்.
பயணிகள்பயணம் செய்யும் படுக்கை வசதி இல்லாத ரயில்களுக்கு முதல் இலக்கு எண்கள் ஐந்தாக இருக்கும். நம்ம ஊரு என்ற ரயில்களுக்கு முதல் இலக்கு எண்களானது ஆறாக இருக்கும்.
திருச்சிராப்பள்ளி மற்றும் காரைக்கால் செல்லும் ரயில்களுக்கு முதல் இலக்கு எண் ஏழாக இருக்கும். புதிதாக அறிமுகம் படுத்திருக்கும் சுவிதா ரயில்களுக்கு முதல் இலக்கு எண்கள் எட்டு வரும். மும்பை புறநகர ரயில்களுக்கு மட்டும் முதல் இலக்கு என் ஒன்பதாக இருக்கும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |