ரயில் டிக்கெட் முன்பதிவு
ரயில் பயணம் செய்பவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை பெறுவது கடினமான ஒன்றாக இருக்கும். அப்படி உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை பெற்றிருந்தாலும், சில பயணிகள் சில நேரங்களில் தங்களது பயணத்தை மேற்கொள்ள முடியாமல் போய்விடும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அப்படி உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை வைத்திருந்தும் பயணம் செய்ய முடியாமல் இருக்கும் அவர்களுக்கான வசதியை இந்திய ரயில்வே சில வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறது. அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ஒருவரின் பெயரில் உள்ள ரயில் டிக்கெட்டை இன்னொருவருக்கு மாற்றுவது எப்படி.?
ஒருவரின் பெயரில் உள்ள ரயில் டிக்கெட்டை பதிவு செய்து அவரால் பயணத்திற்கு வர முடியவில்லை என்றால் அந்த டிக்கெட்டை இன்னொருவருக்கு மாற்றலாம். இதில் முக்கியமாக இந்த பெயரை மாற்றுவதற்கு அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களான தந்தை, தாய், சகோதரி, சகோதரர், மகள், மகன், கணவன் அல்லது மனைவி போன்றவர்களின் பெயர்களில் தான் மாற்ற முடியும்.
இதை மாற்றுவதற்கு நீங்கள் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட்டை மாற்றுவதற்கான கோரிக்கையை விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஒரு முறை மட்டுமே பெயரை மாற்ற முடியும் என்பதை ஞாபக வைத்து கொள்ளவும்.
டிக்கெட்டை மாற்றுவதற்கான வழிமுறை:
முதலில், டிக்கெட்டின் பிரிண்ட் அவுட் தேவைப்படும்.
நீங்கள் டிக்கெட்டை மாற்ற விரும்பும் நபரின் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்லவும்.
உங்கள் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு கவுண்டருக்குச் செல்லவும்.
டிக்கெட் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க கால அளவு:
24 மணி நேரத்திற்கு முன்னதாக கோரிக்கை எழுப்பப்பட வேண்டும், ஆனால் கோரிக்கையை எழுப்பும் பயணிகளைப் பொறுத்து இது மாறுபடும்.
அரசு ஊழியராக இருந்தால், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் கோரிக்கையை அனுப்ப வேண்டும்.
ஒரு பண்டிகை, திருமண நிகழ்வு அல்லது ஏதேனும் தனிப்பட்ட பிரச்சனை இருந்தால், அந்த நபர் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாக டிக்கெட்டை அனுப்ப வேண்டும்.
NCC விண்ணப்பதாரர்கள் டிக்கெட் பரிமாற்ற சேவையின் பலன்களையும் அனுபவிக்க முடியும். பயணிகளை மாற்றும் பயணிகள், பயணத்திற்கான அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |