Trevally Fish in Tamil
அசைவ பிரியர்களுக்கு மீன் என்றால் அவ்வளவு பிடிக்கும். மீன் குழம்பு என்றாலே எப்போடா குழம்பை வைப்பாங்க சாப்பிடலாம் என்று காத்திருப்பார்கள். அதிலும் வறுவல் சொல்லவே வேணாம், வறுக்கும் போதே சூடாக எடுத்து சாப்பிட்டு விடுவோம்.
மீனில் பல வகைகள் உள்ளது, அதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மீனை பிடிக்கு . சில பேர் நாட்டு மீன் தான் சாப்பிடுவார்கள், சில பேர் கடல் மீன் தான் சாப்பிடுவார்கள். ஆனால் சாப்பிடுவதோடு சரி அதனை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதில்லை. அதனால் தான் இந்த பதிவில் ட்ராவலி மீன் பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Trevally Fish Meaning In Tamil:
ட்ராவலி மீன் என்பது பாறை என்று அழைக்கப்படுகிறது. பாறை மீன் என்பது பாறைகளில் மறைந்து கொள்ளும் திறன் கொண்ட பல்வேறு வகையான மீன் இனங்களைக் குறிக்கும் பொதுப் பெயராகும். உணவிற்குப் பயன்படும் பல்வேறு மீன்களைக் குறிக்கவும் பாறை மீன் என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது.
இது ஒரு சிறிய முள் உள்ள மீன். இது வெள்ளி-வெள்ளை நிறத்திலும், துடுப்புகள் வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்
விலை குறைவு:
மீன் வகைகளிலே குறைவான விலை கொண்டது. இதன் விலை குறைவு என்பதற்காக இதன் சுவையில் குறைவு இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்.. இதன் சுவையை சுவைத்து பார்த்தால் மட்டுமே உணர் முடியும்.
சத்துக்கள்:
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன. புரோட்டீன்கள், வைட்டமின் டி, துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இதன் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
மீன் முள் தொண்டையில் சிக்கினால் என்ன செய்வது
எடுத்துக்காட்டு:
100 கிராம் பாறை மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9,நீர்ச் சத்து 66.70 கிராமும் உள்ளது.
நன்மைகள்:
⇒ இந்த மீனை சாப்பிடுவதால் தோல் நோய், முடி உதிர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சனை வராமல் பாதுகாத்து கொள்கிறது.
⇒ பாறை வைட்டமின் டி நிறைந்திருப்பதால் புற்றுநோய் பிரச்சனை வராமல் பாதுகாத்து கொள்ள உதவுகிறது.
⇒ சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் பாறை மீன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதோடு மட்டுமில்லாமல் சர்க்கரையின் அளவும் குறையும்.
⇒ இந்த மீனில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளை பலமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
⇒ இதில் வைட்டமின் b12 இருப்பதால் கொலஸ்ட்ராலின் அளவை சமமாக வைத்திருந்து, இதய பிரச்சனை வராமல் தடுக்கிறது.
⇒ பாறை மீனில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது.
வகைகள்:
- தேங்காய் பாறை மீன்
- வரி பாறை| நாம் பாறை
- தோல் பாறை மீன்/ தேல பாறை / தேளா பாறை/ கட்டாப்பாரை மீன்
- பொன்னாம் பாறை மீன்
- கண்ணாடி பாறை மீன்/ ஓட்ட பாறை
- மலபார் பாறை மீன் / லாபாறை
- வங்கடை அல்லது வங்கடைப் பாறை
- வயம் பாறை மீன்
- செம்பாரை மீன்
- குமார பாறை
- மெத்தம் பாறை
- ஒட்டகப்பாரை, ஒட்டப்பாறை, ஒட்டாம்பாரை
- சுறா மூஞ்சி பாறை
- மொசிங் பாரை
- ஊசிப்பாரை மீன்
- முயல் பாறை / மொசப்பாறை /முசுங்கு பாறை
- மஞ்ச பாறை மீன்
- கடல் பாறை மீன்
- தோள் பாறை மீன்
- முட்டா பாறை மீன்
- நெய் பாறை மீன்
- அணை பாறை மீன்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |