Types of Debentures in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அதேபோல் இப்பதிவில் கடன் பத்திரம் என்றால் என்ன.? அதன் வகைகள் எத்தனை போன்ற விவரங்களை பார்க்கலாம். கடன் பத்திரம் என்ற சொல், கடனை குறிக்கும் “டெபரே” என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து உருவானது. பெரும்பாலும் நாம் ஒரு நிறுவனத்திலோ அல்லது ஒரு நபரிடமோ கடன் பெறுகிறோம் என்றால் அதற்கான கடன் பத்திரங்களை வாங்கி கொள்வது நல்லது. இது நமக்கு பாதுகாப்பாகவும் உண்மையாகவும் இருக்கக்கூடியய ஒரு ஆவணம் ஆகும். எனவே, கடன் பத்திரத்தில் எத்தனை வகைகள் உள்ளது.? என்பதை நம் அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும்.
Different Types Debentures in Tamil:
கடன் பத்திரம் என்றால் என்ன.?
கடன் பத்திரம் என்பது நிறுவனத்தின் பொது அங்கீகாரத்தின் கீழ் கடனை ஏற்றுக்கொள்வதற்கான எழுதப்பட்ட கருவியாகும். அதாவது,கடன் வாங்கும் நபரோ அல்லது கடன் கொடுக்கும் நபரோ வாங்கிய கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து திருப்பி அளிப்பதற்கான உத்திரவாதத்தினை தருவது ஆகும்.
கடன் பத்திரம் எழுதுவது எப்படி?
கடன் பத்திரங்களின் வகைகள்:
கடன் பத்திரங்களை ஐந்து வகைகளாக பிரிக்கலாம்.
- பாதுக்காப்பு அடிப்படையிலான பத்திரம்
- மாற்றத்தின் அடிப்படையிலான பத்திரம்
- பதவிக்காலத்தின் அடிப்படையிலான பத்திரம்
- பதிவின் அடிப்படையிலான பத்திரம்
- முன்னுரிமை அடிப்படையிலான பத்திரம்
பாதுக்காப்பு அடிப்படையிலான பத்திரம்:
பாதுகாப்பு அடிப்படையிலான கடன் பத்திரங்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை பாதுகாக்கப்பட்ட கடன் பத்திரங்கள் மற்றும் பாதுகாப்பற்ற கடன் பத்திரங்கள் ஆடும்.
மாற்றத்தின் அடிப்படையிலான பத்திரம்:
மாற்றத்தின் அடிப்படையிலான கடன் பத்திரங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அவை மாற்றக்கூடிய கடன் பத்திரங்கள் மற்றும் மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் ஆகும்.
பதவிக்காலத்தின் அடிப்படையிலான பத்திரம்:
கால அளவு அடிப்படையிலான கடன் பத்திரங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று மீட்டெடுக்கக்கூடிய கடன் பத்திரங்கள் மற்றொன்று திரும்ப பெற முடியாத கடன் பத்திரங்கள் ஆகும்.
பதிவின் அடிப்படையிலான பத்திரம்:
பேச்சுவார்த்தையின் அடிப்படையிலான கடன் பத்திரங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று பதிவுசெய்யப்பட்ட கடனீட்டு பத்திரங்கள் மற்றொன்று தாங்குபவர் கடனீட்டு பத்திரங்கள் ஆகும்.
முன்னுரிமை அடிப்படையிலான பத்திரம்:
முன்னுரிமை அடிப்படையிலான பத்திரத்தை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று முதல் அடமான கடன் பத்திரங்கள் மற்றொன்று இரண்டாவது முன்னுரிமை கடன் பத்திரங்கள் ஆகும்.
செட்டில்மெண்ட் பத்திரம் என்றால் என்ன..? அதை ரத்து செய்ய முடியுமா..?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |