உழைப்பை போற்றும் திருக்குறள்..!

Advertisement

உழைப்பே உயர்வு திருக்குறள்

வாசகர்கள் அனைவரும் உழைப்பு பற்றிய திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. உழைப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை திருவள்ளுவர் அவர்கள் திருக்குறளில் எடுத்துரைத்துள்ளார். உழைப்பின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் பல திருக்குறளில் கூறியுள்ளார். அவற்றை நாம் படிப்பதன் மூலம் ஒருவருக்கு உழைப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். எனவே, அந்த வகையில் இப்பதிவில் உழைப்பை போற்றும் திருக்குறள் பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம்.

உழைப்பே உயர்வு பழமொழி

திருக்குறள் 1:

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.

பொருள்:

இக்குறளின் பொருள் என்னெவென்றால், சொந்த உழைப்பில் கிடைத்த நீர்த்த கஞ்சியே ஆயினும் அதனை உண்பதே மிகவும் இனியது.

மு.வரதராசனார் உரை:

தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

கலைஞர் உரை:

கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.

திருக்குறள் 2:

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

விளக்கம்:

முதாலாகும் உழைப்பு இல்லாதவர்க்கு இல்லை ஊதியமாகும் கூலி. மதில் போல் காக்கும் சான்றோர் இல்லாதவர்க்கு இல்லை சிறந்த நிலை.

மு.வரதராசன் விளக்கம்:

முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

சாலமன் பாப்பையா விளக்கம்:

முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.

கலைஞர் விளக்கம்:

கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.

உழைப்பு சிந்தனைகள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement