உழைப்பே உயர்வு பழமொழி
இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களும் உழைக்கின்றது. அதில் ஐந்தறிவு பெற்ற உயிரினங்கள் அனைத்தும் தன்னுடைய வயிற்று பசிக்காக உணவிற்காக மட்டும் உழைக்கின்றது. ஆறறிவு பெற்ற உயிரினங்கள் எல்லாம் உணவிற்காகவும், தன்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காகவும் உழைக்கின்றது. உழைக்கும் மனிதர்களை போற்றும் வகையில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் மே 1-ம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த பதிவில் உழைப்பே உயர்வு பழமொழி பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உழைப்பே உயர்வு பொன்மொழி
உழைப்பு, உடலைப் பலப்படுத்தும்; கஷ்டங்கள் மனதைப் பலப்படுத்தும். – பிளமிங்
பத்து விரல்களும் பதறாது உழைத்தால், அஞ்சு விரலால் அஞ்சாது தின்னலாம். – டாலிராண்ட்
அளவற்ற உழைப்பைத்தான் மேன்மை என்கிறோம். – லாங்பெல்லோ
கடுமையான உழைப்பைத் தவிர, வெற்றிக்கு ரகசியம் வேறு இல்லை. – டர்னர்
ஏழ்மை என்ற நோய் அகல வேண்டுமானால், உழைப்பு என்ற மருந்தைக் கொடு – எமர்சன்
உழைக்கும் மனிதனின் உறக்கம் இனிமையானது – ராபர்ட் சப்ரிசா
உழைப்பு இல்லாமல் வெற்றி கிடைக்காது- ஜேம்ஸ் ஆலன்
கடினமான உழைப்பு, தெய்வ வழிபாட்டுக்குச் சமம். – லால் பகதூர் சாஸ்திரி
சோம்பல், தீய பழக்கம், வறுமை ஆகிய மூன்று தீமைகளை உழைப்பு களைகிறது – வால்டேர்
அடிமையைப்போல உழைப்பவன், அரசனைப்போல உண்பான்- கதே
உழைப்பு வறுமையை மட்டுமல்லாமல், தீமையையும் விரட்டுகிறது – வால்டேர்
செல்வத்தை உண்டாக்குவது உழைப்பு; உலகத்தை இயக்குவதும் அதுவே – வெப்ஸ்டர்.
அடிமை போல உழைப்பவன் அரசனைப் போல உயர்வான்
உழைப்பவன் வீட்டுக்குள் வறுமை எட்டிப் பார்க்காது.
உழைப்பவனுக்கு எந்த வேலையும் இழிவல்ல, சோம்பல்தான் இழிவு -கிரீஸ்
அவசர காலத்தின் தேவைக்கு ஓய்வு நேரத்தில் தேடி வை
மனிதன் உழைக்கிறான்; இறைவன் வாழ்த்துகிறான்.
உழைக்கும் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |