Urad Dal in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! தினமும் நமது பதிவின் வயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள் அதேபோல் இன்றைய பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள இருக்கின்றோம். பொதுவாக இந்த உலகில் நாம் மிக மிக ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது உணவு தான். இப்படி நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக உள்ள உணவு பொருட்களை பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அதாவது நாம் உண்ணும் உணவுபொருட்களின் பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், வகைகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவை அனைத்து நமக்கு தெரிந்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் உளுத்தம் பருப்பின் (Urad Dal) பிறப்பிடம், வேறுபெயர்கள், தோற்றம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயன்கள் ஆகியவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Urad Dal Details in Tamil:
உளுந்து அல்லது உழுந்து என்பது பேஸியோலஸிலிருந்து விக்னா இனத்தை சேர்ந்த தாவரம் ஆகும். இந்த தாவரத்தில் உள்ள உளுத்தம் பருப்பை பயன்படுத்தி இந்தியாவில் பலவகையான உணவுகள் தயாரிக்கப்படுகிறது.
மேலும் இந்தியாவில் உள்ள விலை உயர்ந்த பருப்பு வகைகளில் இந்த உளுத்தம் பருப்பும் ஒன்று ஆகும். இது ஒரு வெப்பமண்டல பயிராகும். இது தாழ்வான தாவரம் ஆகும். இதன் வேர்கள் குழாய் வேர்கள் ஆகும்.
இதன் இலைகள் 30-100 செ.மீ வரை இருக்கும். அதேபோல் இதன் காய்கள் குறுகலாகவும், உருளை வடிவமாகவும் 6 செ.மீ நீளமாகவும் இருக்கும்.
பேஷன் பழத்தை சாப்பிடுவதற்கு முன்னால் அதை பற்றி முழுதாக தெரிஞ்சிக்கோங்க
பிறப்பிடம்:
இது தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. அதேபோல் இந்த உளுத்தம் பருப்பு தெற்காசியாவில் தான் அதிக அளவு பயிரிடப்படுகிறது.
வேறுபெயர்கள்:
இது உளுந்து அல்லது உளுத்தம் பருப்பு என்று தமிழிலும், அடத் அடு என்று குஜராத்தியிலும், உட தால் என்று ஹிந்தியிலும், உடு (Uddu) என்று கன்னடத்திலும், உழுன் என்று மலையாளத்திலும், மன்ஹா டி தால் பஞ்சாபியிலும், உருட்டு டால் (Urad Dal) என்று ஆங்கில மொழியிலும் அழைக்கப்படுகிறது.
உங்களுக்கு நெல்லிக்காய் பிடிக்குமா அப்போ இதை தெரிஞ்சிக்கமா இருந்தா எப்படி
ஊட்டச்சத்துக்கள்:
100 கிராம் உளுந்தம் பருப்பில்,
- புரதம் – 25 கிராம்
- பொட்டாசியம் – 983 மி.கி
- கால்சியம் – 138 மி.கி
- இரும்பு – 7.57 மி.கி
- நியாசின் – 1.447 மி.கி
- தியாமின் – 0.273 மி.கி
- riboflavin – 0.254 மி.கி
பயன்கள்:
இது இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையை குறைகிறது.
சருமம், தலைமுடிக்கு பாதுகாப்பிற்கு பயன்படுகிறது.
இதயம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கின்றது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது.
பாதாமை அதிக அளவு சாப்பிட்டால் மட்டும் போதாது இதையும் தெரிஞ்சு வைச்சிக்கணும்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |