உடம்பில் சுரக்கும் யூரிக் அமிலம் பற்றி உங்களுக்கு தெரியுமா.?

Advertisement

Uric Acid in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் உடம்பில் சுரக்கும் யூரிக் அமிலம் பற்றிய சில முக்கியமான தகவல்களை பற்றி தெரிந்துகொள்ளப்போகிறோம். உடலில் உள்ள கழிவு பொருட்களில் யூரிக் அமிலமும் ஒன்றாகும். நாம் உண்ணும் உணவு பொருட்களில் இருந்து குடல் உறிஞ்சப்படும் போது உடல் செல்களில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். அப்பொழுது அதிலிருந்து பெறப்படும் இறுதியான கழிவு பொருளாக யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. மேலும் யூரிக் அமிலம் என்றால் என்ன.? இவற்றால் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றை நம் பதிவில் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

யூரிக் அமிலம் முற்றிலும் குணமாக சித்த மருத்துவம்..!

யூரிக் அமிலம் என்றால் என்ன?

யூரிக் அமிலம் என்பது ஒருவகையான கழிவு பொருளாகும். யூரிக் அமிலமானது கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் போன்றவற்றால் ஆன கரிமச் சேர்மமாகும். இதற்கு  மூல கூறு வாய்ப்பாடுகளும் உண்டு, C5H4N4O3  போன்றவை மூல கூறு வாய்ப்பாடுகள் ஆகும்.

இந்த யூரிக் அமிலமானது இரட்டை புரோட்டான் அமிலம் என்று சொல்லப்படுகிறது. சுருக்கமாக இந்த யூரிக் அமிலத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் உடலில் புரதங்கள் நீக்கப்படும்பொழுது அதில் உண்டாகும் ப்யூரின்கள் என்னும் வேதிப்பொருளானது உடலில் யூரிக் அமிலமாக உடைக்கப்படுகிறது.

யூரிக் ஆசிட் எதனால் வருகிறது

இந்த யூரிக் அமிலம் ஆனது நாம் உண்ணும் உணவுகளான இறைச்சி, ஆல்கஹால், பீன்ஸ் போன்ற உணவுகளில் இந்த அமிலங்கள் இருக்கிறது. அதாவது நாம் சாப்பிடும் சைவ உணவுகளில் தேவைக்கு ஏற்பவும், அசைவ உணவுகளில் அதிகமாகவும் இந்த யூரிக் அமிலம் இருக்கிறது. எனவே அசைவம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்த யூரிக் ஆசிட் ஆனது பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாவே வருகிறது.  பெண்களை பொறுத்தவரை மாதவிடாய் நேரங்களில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் பிரச்சனைகள் வருகிறது.

இவை எதனால் வருகிறது என்றால் மது அருந்துவதாலும், உடல் பருமன் அதிகரிப்பதாலும் அல்லது வெயில் நேரங்களில் வாகனங்களில் பயணிப்பதாலும் யூரிக் அமிலம் அதிகரிக்கும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

சாதாரண யூரிக் அமிலமானது இரத்த ஓட்டம் வழியாக சிறுநீர் பாதைக்கு சென்று சிறுநீர் மூலம் வடிகட்டப்படுகிறது. யூரிக் அமிலம் அதிகரிக்கும் பொழுது மன சோர்வு, சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படுகிறது.  இந்த யூரிக் அமிலம் அதிகமானால் மிகவும் மோசமான பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement