ஊர்வன கனவில் வந்தால் என்ன பலன்..! Oorvana Dream Meaning In Tamil..!
Kanavil Thel Vanthal Enna Palan: அனைவருக்கும் பொதுநலம்.காம்-ன் வணக்கம்..! இன்றைய பதிவில் ஊர்வன சார்ந்தவைகள் நம் கனவில் வந்தால் என்ன பலன் என்று படித்து தெரிந்துக்கொள்ளலாம். நம் கனவில் வரும் அனைத்திற்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. கனவானது ஏற்பட போகும் நன்மை மற்றும் தீய செயல்கள் முன்கூட்டியே நமக்கு தெரியப்படுத்தும் ஒரு அறிகுறியாகும். அந்த வகையில் நம் கனவில் எந்த விலங்குகள் வந்தால் என்ன பலன் என்று இப்போது விரிவாக படித்தறியலாம்.
எறும்பு கனவில் வந்தால் என்ன பலன்:
- நம் கனவில் எறும்பு சுவற்றில் ஊர்வது போன்று வந்தால் பதவி உயர்வு ஏற்பட போகிறது என்று அர்த்தமாகும்.
- அதே போன்று எறும்புகள் கூட்டம் கூட்டமாக செல்வது போன்று நம் கனவில் வந்தால் செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய போகிறீர்கள் என்று அர்த்தமாகும்.
- எறும்புகள் சர்க்கரை சாப்பிடுவது போன்றோ அல்லது உணவினை எடுத்து சென்று போவது போல் கனவு கண்டால் சேமித்து வைத்த பணமோ, பொருளோ குறைய தொடங்கிவிடும்.
பல்லி கனவில் வந்தால் என்ன பலன் / Lizard Kanavu Palangal In Tamil:
- கனவில் பல்லி ஊர்ந்து செல்வது போன்று வந்தால் தொழில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
- கனவில் இரண்டு பல்லிகள் சேருவது போன்று வந்தால் வீட்டில் சுப காரியம் நடக்க போகிறது என்று அர்த்தமாகும்.
- பல்லி கனவில் சண்டை போடுவது போன்று வந்தால் குடும்பத்தில் சண்டை நிகழப்போகிறது என்ற அறிகுறியாகும்.
- பல்லி கனவில் வந்தால் நம் பதவிக்கு ஏதோ ஆபத்து நேரிட போகிறது என்று அர்த்தமாகும்.
தேள் கனவில் வந்தால் என்ன பலன் / Kanavil Thel Vanthal Enna Palan:
- கனவில் தேள் கொட்டுவது போன்றோ அல்லது கடிப்பது போல் கனவு கண்டால் இதுவரை உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகும். மேலும் தொழிலில் நல்ல முன்னேற்றம், நஷ்டம் அனைத்தும் நீங்கி லாபம் கிடைக்கும்.
- தேள் சுவரில் ஊர்ந்து செல்வது போன்று கனவில் கண்டால் தொழிலில் உங்களுடைய மேலதிகாரியிடம் இருந்து அவர்களின் கோபத்திற்கு ஆளாகுவீர்கள். மேலும் குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படக்கூடும்.
பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் / Pambu Kanavil Vanthal:
- பாம்பு வேகமாக செல்வது போன்று கண்டால் நமக்கு நன்மை நடக்க போகிறது என்று அர்த்தமாகும்.
- பாம்பு படம் எடுப்பது போன்று நம் கனவில் வந்தால் செலவு ஏற்பட போகிறது என்று அர்த்தமாகும்.
- பாம்பு புற்றை கனவில் கண்டால் இன்பம் நிகழ போகிறது என்று பலன்.
- பாம்பு உங்கள் உடல் மேல் ஏறி செல்வது போல் கனவை கண்டால் வாழ்க்கையில் இருக்கின்ற பிரச்சனைகள் குறைய தொடங்கும்.
சாரை பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்:
- சாரை பாம்பு கனவில் வந்தால் உங்களுக்கு இருக்கும் எதிரிகள் அனைவரும் நண்பர்கள் போன்ற வடிவில் இருப்பார்கள் என்று அர்த்தம்.
- கனவில் நல்ல பாம்பினை கண்டால் உங்களின் எதிரிகளால் தொல்லைகள் ஏற்பட போகிறது என்று பலன்.
- நல்ல பாம்பினை கொள்வது போன்று கனவில் வந்தால் எதிரிகளுடைய தொல்லைகள் நீங்க வாய்ப்புள்ளது.
நல்ல பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்:
- கனவில் நல்ல பாம்பினை நீங்கள் துரத்துவது போல் வந்தால் வாழ்க்கையில் உள்ள கஷ்டம் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.
- நல்ல பாம்பு உங்களை துரத்துவது போல் கனவில் கண்டால் ஏதோ துன்பம் நடக்க போகிறது என்று அர்த்தமாகும்.
- கனவில் ஒரே ஒரு நல்ல பாம்பினை கண்டால் நம்முடைய விரோதிகளால் தொல்லைகள் ஏற்பட போகிறது என்று பொருள்.
இரண்டு பாம்பு கனவில் வந்தால்:
- இரண்டு பாம்புகளை கனவில் ஒரே நேரத்தில் கண்டால் நல்ல காரியம் நடக்கப்போகிறது என்று அர்த்தம்.
பாம்பை கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்:
- கனவில் பாம்பினை நீங்கள் கொள்வது போன்று வந்தால் இதுவரை வாழ்க்கையில் உங்களுக்கு விரோதிகளால் ஏற்பட்ட அனைத்து தொல்லைகளும் நீங்கும்.
பாம்பு கடிப்பது போல் கனவு கண்டால் நல்லதா கெட்டதா:
- உங்களை கனவில் பாம்பு கடித்து விட்டது போன்று கனவு கண்டால் தனலாபம் ஏற்படும்.
பாம்பு காலை சுற்றினால் என்ன பலன்:
- பாம்பு உங்கள் காலை சுற்றி பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் உங்களுக்கு சனி பிடிக்க போகிறது என்று பலனாகும்.
கனவில் பாம்பு கடித்து ரத்தம் வந்தால் என்ன பலன்:
- பாம்பு கனவில் கடித்து இரத்தம் வருவது போன்று கனவு கண்டால் உங்களுக்கு இதுவரை பிடித்திருந்த சனி விலகும்.
- பாம்பு உங்கள் கழுத்தில் மாலை வடிவில் விழுவது போன்று கனவில் கண்டால் செல்வந்தர் ஆக போகிறீர்கள் என்று அர்த்தம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Today Useful Information in Tamil |