Vadiya Payirai Kanda Pothellam in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! பொதுவாக பலருக்கும் பாடல்கள் எழுதுவது மற்றும் கேட்பது என இதுபோன்ற பழக்கங்கள் இருக்கும். அந்த வகையில் சினிமா பாடல்கள் என்றால் பலருக்கும் நினைவில் இருக்கும். மேலும் எந்த பாடலை யார் எழுதி இருப்பார்கள் வரையுமே நன்றாக தெரிந்து வைப்பார்கள். ஆனால் அதுவே தமிழில் பாரதியார், பாரதிதாசன், கல்யாண சுந்தரனார், கண்ணதாசன் மற்றும் இராமலிங்க அடிகளார் என இவர்கள் எல்லாம் எழுதிய பாடலை கேட்டால் அந்த அளவிற்கு தெரியாது. அது மட்டும் இல்லாமல் ஒரு சில பாடல் வரிகள் நமக்கு தெரிந்து இருக்கும். ஆனால் அதனை யார் எழுதியது என்று தெரியாமல் இருக்கும். அந்த வகையில் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற பாடல் வரிகள் மிகவும் சிறப்பான ஒன்று. எனவே இந்த பதிவில் இந்த பாடலை யார் எழுதியது என்றும், பாடலாசிரியருக்கான ஆசிரியர் குறிப்பையும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வள்ளலார் ஆசிரியர் குறிப்பு:
1823-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி சிதம்பரத்தில் உள்ள மருதூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரது பெற்றோர் இராமையாபிள்ளை மற்றும் சின்னம்மை ஆவர். மேலும் வள்ளலாருக்கு சபாபதி பிள்ளை, பரசுராமன், உண்ணாமுலை என்ற சகோதரர்களும், சுந்தரம்மாள் என்ற சகோதரியும் இறுக்கிறார்கள்.
இவரது தந்தை இறந்த காரணத்தினால் வள்ளலார் அவரது அண்ணனுடைய வளர்ப்பில் தான் வளர்ந்து வந்தார். ஆகவே அவரது அண்ணன் தான் இராமலிங்க அடிகளாரை கல்வி படிக்க வைத்தார். ஆனால் வள்ளலாருக்கு கல்வி மீது இருந்த நாட்டத்தினை விட கடவுளாகிய முருகப்பெருமானது தியானத்தில் தான் அதிக ஈடுபாட்டுடன் காணப்பட்டார்.
மேலும் சிறந்த தமிழ் புலவராக திகழும் வகையிலும் நன்கு வல்லமை பெற்று இருந்தார். இதனை தொடர்ந்து குடும்பத்தில் உள்ளோரின் விருப்பத்திற்காக திருமணம் செய்து கொண்டாலே கூட திருமண வாழ்க்கையில் நாட்டம் இல்லாத காரணத்தினால் துறவியாக வாழ ஆரம்பித்தார்.
இராமலிங்க அடிகளார் சத்திய ஞான சபை, சமர சன்மார்க்க சங்கம், சத்திய தருமசாலை ஆகியவற்றை நிறுவினார். திருவருட்பா, சிவநேச வெண்பா, உண்மை நெறி, மனுநீதிச்சோழன் புலம்பல், நெஞ்சறிவுறுத்தல் மற்றும் மகாதேவமாலை என இத்தகைய நூல்களையும் எழுதினார்.
மனுமுறை கண்ட வாசகம் மற்றும் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரைநடை நூல்களையும் எழுதினார். மேலும் சிறப்பமிக்க பாடலான வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற பாடலையும் வள்ளலார் அவர்களே பாடினார்கள்.
இத்தகைய பாடலுக்கான பொருளாக ஒருவர் உணவு இல்லாமல் பசியினால் உடல் மெலிந்து இருப்பதனை பார்க்கும் போது நமது உள்ளம் எப்படி வருந்துகிறதோ, அதேபோல் மழை இல்லாமல் நெற்பயிர்கள் அனைத்தும் வாடி வதங்கி நிற்பதை பார்க்கும் போது உள்ளம் துன்படுகிறது என்று கூறியிருக்கிறார்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த வள்ளலாருக்கு புதுநெறி கண்ட புலவர், ஓதாது உணர்ந்த அருட்புலவர் மற்றும் திருவருட்பிரகாச வள்ளலார் என்ற சிறப்பு பெயர்களும் இருக்கிறது.
கடைசியாக இராமலிங்க அடிகளார் அவர்கள் 1874-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி என்று இயற்கை எய்தினார்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |