வைகாசி விசாகம் எப்போது 2024 தேதி மற்றும் நேரம்

Advertisement

வைகாசி விசாகம் 2024 | Vaikasi Visakam 2024 Date in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வைகாசி விசாகம் 2024 தேதி மற்றும் நேரம் (Vaikasi Visakam 2024 Date and Time in Tamil) பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. பொதுவாக, வைகாசி விசாகம் என்பது மிகவும் பிரபலமான நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் முருகனுக்கு பல வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. வைகாசி விசாகம் என்பது முருகனுக்கு அர்பணிக்கப்பட்ட புனிதமான நாளாக கருதப்படுகிறது. முருகப்பெருமானின் பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விரதம் வைகாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு வைகாசி விசாகம் எப்போது 2024 வருகிறது என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

வைகாசி விசாகம் விரதம் இருப்பது எப்படி.?

Vaikasi Visakam 2024 Date and Time:

வைகாசி விசாகம் 2024

 வைகாசி விசாகம் 2024 ஆண்டு தமிழ் தேதியான வைகாசி மாதம் வைகாசி 09 ஆம் தேதி வருகிறது. அதுவே ஆங்கில தேதி என்று பார்த்தால், மே 22 ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது.  வைகாசி விசாகம் மே 22 ஆம் தேதி காலை 08:18 AM மணிக்கு துவங்கி மே 23 ஆம் தேதி காலை 09:43 AM மணி வரை  விசாகம் நட்சத்திரம் உள்ளது. எனவே, வைகாசி விசாகம் விரதம் மற்றும் வழிபாடு முறைகளை கடைபிடிப்பவர்கள் இந்த நேரத்தில் செய்யலாம்.  

வைகாசி விசாகம் அன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால் எல்லா விதமான நன்மைகளும் நம்மை வந்து சேரும். முக்கியமாக துன்பம் விலகும், பகை விலகும். இதுபோன்ற பல நன்மைகள் நம்மை வந்து சேரும். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது இந்த வைகாசி விசாகம்.

அன்றைய தினம் முழுவதும் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒரு வேளையாவது விரதம் இருப்பது அவசியம்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement