வைகாசி விசாகம் 2025 | வைகாசி விசாகம் 2025 தேதி மற்றும் நேரம்
முருகனுக்குரிய நாட்கள் நிறைய இருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த வைகாசி விசாகம். இந்த வைகாசி விசாகத்தில் முருகனை நினைத்து பலரும் விரதமிருந்து வழிபடுவார்கள். அப்படி வழிபடுன் விதங்களில் இரண்டு இருக்கிறது. ஒன்று மாலை போட்டு விரமிருப்பவர்கள், மற்றொன்று மாலை போடாமல் விரதமிருப்பார்கள். அப்படி விரதமிருப்பதற்கு முன்னடி வைகாசி விசாகம் எப்போது வருகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது என்பதை பதிவிட்டுள்ளோம்.
Vaikasi Visakam 2025 Date and Time | வைகாசி விசாகம் 2025 தேதி தமிழ் நாட்காட்டி
வைகாசி மாதத்தில் வரக்கூடிய விசாக நட்சத்திரத்தில் முருகன் அவதரித்தார் என்று அனைவரும் அறிந்தது. ஆகையால் இந்த நாளில் முருக பெருமானுக்கு விரதமிருந்து கோவிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் முருகனின் அருளை பெறலாம்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. இந்த நாளில் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், நடைபெறும். இந்த நாளில் முருகன் கோவில்களில் கூட்டம் அலைமோதும். ஜூன் 8-ம் தேதி பகல் 02.10 மணிக்கு தொடங்கி, ஜூன் 9-ம் தேதி மாலை 04.40 மணிக்கு வரை விசாகம் நட்சத்திரம் இருக்கும். வைகாசி விசாகம் ஒரு நாள் விரதமிருப்பவர்கள் இந்த நேரத்தில் விரமிருந்து வழிபாடு செய்யலாம்.இந்த நாளில் உங்களின் வேண்டுதல் நிறைவேறுவதற்கு நாப்பத்தி எட்டு நாள் நாள் விரமிருக்கலாம். என்னால் நாப்பத்தி எட்டு நாள் விரமிருக்க முடியாதுயென்றால் இருபத்து ஒருநாள் விரமிருக்கலாம். இருபத்து ஒருநாள் விரதமிருந்தால் நாப்பத்தி எட்டு நாள் விரமிருந்த பலன் கிடைக்கும். இந்த இருபத்து ஒருநாள் விரமானது மே மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது. இந்த நாளில் நீங்கள் முருகன் கோவிலுக்கு சென்று விரதமிருக்கும் காரணத்தை சொல்லி விரதத்தை ஆரம்பிக்கணும். 21 நாட்கள் விரமிருக்க முடியாது என்றால் 11 நாட்கள் 9 நாட்கள் 1 நாள் என்று விரமிருக்கலாம்.
இந்த விரதமானது நீங்கள் மாலை போட்டும் விரமிருக்கலாம், மாலை போடாமலும் விரதமிருக்கலாம்.விரதம் இருக்கும் காலங்களில் முருகனை மனதார நினைத்து வழிபடுங்கள். நீங்கள் கேட்டதை விட அதிகமாக கொடுப்பவர் முருக பெருமான்.
விரதம் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்
வைகாசி விசாகம் விரதம் இருப்பது எப்படி.?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |