வைகாசி விசாகம் அன்று சாப்பிட வேண்டியவை, சாப்பிட கூடாதவை..

Advertisement

வைகாசி விசாகம் அன்று சாப்பிட வேண்டிய உணவுகள்

பொதுவாக ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மாதிரியான விரதத்தை கடைபிடிப்பார்கள். அதிலும் பல பேருக்கு விரதத்தின் போது என்ன உணவு எடுத்து கொள்ள வேண்டும் என்ற தெரியாது. விரதம் எப்படி இருக்க வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. இதனை பின்பற்றி தான் விரதம் எடுக்க வேண்டும். முருகனுக்கு பல உகந்த நாட்கள் இருந்தாலும் விசாகம் என்பது சிறப்பு பெற்றதாக இருக்கிறது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் கேட்ட வரத்தை கொடுப்பார் என்பது ஐதீமாக இருக்கிறது. இந்த நாளில் என்ன உணவுகள், என்ன உணவு சாப்பிட கூடாத உணவுகள் பற்றி அறிந்து கொள்வோம்.

வைகாசி விரதம் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

பொதுவாக விரதம் இருப்பவர்கள் என்ன உணவுகள் சாப்பிடலாம் என்பது தெரியாது. அதனால் தான் இந்த பதிவில் நாளை வைகாசி விரதம் அன்று விரதம் இருப்பவர்கள்  நாள் முழுவதும் எந்த மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ளலாம் என்று கீழே பார்த்து அறிந்து கொள்வோம்.

காலை உணவு:

எந்த கடவுளுக்கும் விரதம் இருப்பவர்கள் காலையில்  தான் ஆரம்பிப்பார்கள். இந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பது அவசியம். அதனால் காலை வாழைப்பழம், திராட்சை போன்ற பழங்களை எடுத்துக்கொள்ளலாம். முந்திரி, பாதாம் போன்றவற்றையும் சாப்பிடலாம். மேலும் இனிப்பு சேர்க்காமல் தயிர் உண்ணலாம். உணவுகளை பொறுத்தவரை கிச்சடி அல்லது நெய் விட்ட பருப்பு சாதம் சாப்பிடலாம்.

வேண்டிய வரம் தரும் விசாகம்

மதிய உணவு:

வைகாசி விசாகம் அன்று சாப்பிட வேண்டிய உணவுகள்

மதிய உணவாக சாதம் சாப்பிடலாம், இதனோடு பருப்பு, காய்கறி கூட்டு போன்றவற்றையும் சேர்த்து கொள்ளலாம். மேலும் நம் வீட்டில் எந்த சுப நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி அதில் பாயசம் இல்லாமல் இருக்காது. இந்த உணவுகளோடு பாயசம் வைத்து சேர்த்து சாப்பிடலாம்.

இரவு உணவு:

விசாகம் அன்று இரவு கண் விழித்திருந்து முருகனின் மந்திரத்தை கூறுவார்கள். அவர்கள் இரவு உணவாக சப்பாத்தி எடுத்து கொள்ளலாம். அன்று கண் விழிக்காதவர்கள் தயிர் சாதம் எடுத்து கொள்ளலாம்.

வைகாசி விரதம் அன்று முருகனுக்கு விரதம் இருப்பவர்கள் காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement