வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள்.! | Vaikunda Yegathasi Sirappugal in Tamil

Updated On: January 3, 2025 4:47 PM
Follow Us:
Vaikunda Yegathasi Sirappugal in Tamil
---Advertisement---
Advertisement

Vaikunda Yegathasi Sirappugal in Tamil | வைகுண்ட ஏகாதசி சிறப்புகள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள் பற்றி  பின்வருமாறு கொடுத்துள்ளோம். மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதி வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்டுகிறது . வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாவிட்டாலும் வைகுண்ட ஏகாதசி அன்றாவது விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும். பெருமாளுக்கு இருக்கப்டும் விரதங்களில் மிக முக்கியமான விரதம் ஏகாதசி விரதம்.

ஏகாதசி விரதம் ஏழு ஜென்மத்தில் செய்ய பாவங்களை போக்கக்கூடியது. ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்களுக்கு மறுபிறவி என்பது கிடையாது. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும் நற்குணத்துடன் வாழ்வபவர்கள் மட்டுமே ஏகாதசி அன்று இறப்பார்கள். மேலும் வைகுண்ட ஏகாதசி விரதத்தின் சிறப்புகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்.!

வைகுண்ட ஏகாதசி சிறப்புகள்:

வைகுண்ட ஏகாதசி சிறப்புகள்

  • மார்கழியில் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று கூறுகிறோம். வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருப்பவர்களுக்கு ஸ்ரீவைகுண்ட நாதனே பரமபத வாசலைத் திறந்து வைத்து, அருள் பாலிப்பார் என்பது ஐதீகம்.
  • பஞ்சாங்க அடிப்படையில் மொத்தம் 15 திதிகள் உள்ளது. அவற்றில் ஒரு சில திதிகள் மட்டுமே அதிக சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று தான் ஏகாதசி திதி.
  • தேவர்களையும் முனிவர்களையும் முரண் என்ற அசுரன் துன்புறுத்தி வந்தான். அதனால், இவர்கள் தங்களை காப்பாற்றும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அதனால், விஷ்ணு அந்த அசுரனுடன் போரிட்டு வெற்றி பெற்றார்.
  • அதன் பிறகு, ஒரு குகைக்கு அருகில் சென்று உறங்கி ஓய்வெடுத்து கொண்டிருந்தார். அப்போது முரண் மீண்டும் வந்து பெருமாளை கொள்ள முயலும்போது, விஷ்ணு தன் உடலில் உள்ள சக்தியை ஒரு பெண் வடிவத்தில் உருவாக்கினார்.
  • அந்த பெண், சூரன் முரணுடன் போரிட்டு அவனை எரித்தாள்.  அசுரனை வென்ற பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயரிட்டார். அசுரனை வென்ற நாள் ஏகாதசி என்றும், அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்ட பதவியளிப்பதாகும் கூறினார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
  • காயத்ரிக்கு ஈடான மந்திரமில்லை
    தாய்க்குச் சமானமான தெய்வமில்லை
    காசிக்கு அதிகமான தீர்த்தமில்லை
    ஏகாதசிக்கு சமமான விரதமில்லை என்று அக்னி பூரணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஏகாதசி அன்று இதை மட்டும் செய்து விடாதீர்கள்..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now