வளைகாப்பு பாடல் வரிகள்
வளைகாப்பு என்பது, ஒரு பெண் கருவுற்ற ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதங்களில் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அப்பெண்ணிற்கு சடங்கு செய்யும் முறை ஆகும். இந்த வளைகாப்பில் அப்பெண்ணிற்கு வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ஆரோக்கியம் அளிக்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் செய்வார்கள். அதாவது, வளையல் அணிவது, சாதம் ஊட்டிவிடுதல், பொட்டு வைத்தல் என பல்வேறு முறைகள் செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், வளைகாப்பிற்கு என்று தனி சீர்வரிசை வைப்பார்கள்.நம் வீட்டில் வயதானவர்கள் இருந்தால் பாடல் பாடுவார்கள். இந்த பாடல் ஆனது இன்றைய காலத்தில் யாருக்கும் தெரிவதில்லை. அதனால் தான் இன்றைய பதிவில் வளைகாப்பு பாடல் வரிகளை அறிந்து கொள்வோம் வாங்க..
Valaikappu Paadal Varigal
மங்கையர் முகத்திலே கொஞ்சி விளையாடும்
மஞ்சள் நிற வளையல் இது வாழ்வு தரும் வளையல்
மங்கலப் பெண்குலம் பொட்டு வைத்தே மகிழும்
குங்கும நிறத்தோடு குலுங்கும் திரு வளையல்
வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
மங்காத பச்சை நிறம் வழங்கும் எழில் வளையல் – தும்பை
மலர் போன்று இரு மனமும் மாசின்றி வாழ்கவென
வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்
வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே
முத்துப் போலே பவழக் கொத்துப் போல இன்னும்
மூணு மாசம் போனா மகன் பொறப்பான்
முத்துப் போலே பவழக் கொத்துப் போல இன்னும்
மூணு மாசம் போனா மகன் பொறப்பான்
பட்டுப்போலத் தங்கத் தட்டுப் போலே கரும்புக்
கட்டுப் போலக் கிடந்து கண்னைப் பறிப்பான்
ஆரி ஆராரோ ஆரிராரோ
வளைகாப்பு சீர்வரிசை தட்டு பொருட்கள்
ஒண்ணும் தெரியாத சின்னப் பிள்ளை போலே
ஒக்காந்திருக்காரு மாப்பிள்ளை ஆமா
ஒக்காந்திருக்காரு மாப்பிள்ளை – அவர்
கண்ணே முழிக்கிறாரு சும்மா கனைக்கிறாரு
என்னான்னு கேளுங்கடி சங்கதியத் தான் – அடி
என்னான்னு கேளுங்கடி சங்கதியத் தான் – அடி
எனக்குந்தெரியாது ஒனக்குந்தெரியாது
ஏதேதோ பேசுறாங்க ரெண்டு பேரும் – அதை
வெளக்க முடியாது வெவரம் புரியாது
வேணாண்டி நமக்கது ரொம்ப தூரம் – அடி
ஆமாண்டி நமக்கது ரொம்ப தூரம்
தாலாட்டுப் பாடி இவர் தாயாகி மகனுக்குப்
பாலூட்ட நெருங்குது நாளு
தாலாட்டுப் பாடி இவர் தாயாகி மகனுக்குப்
பாலூட்ட நெருங்குது நாளு – அவன்
காலாட்டிக் கையாட்டித் துள்ளுறதைப் பாத்துப்புட்டா
கீழே விட மாட்டாரு ஆளு – அவனைக்
கீழே விட மாட்டாரு ஆளு
ஆரி ஆராரோ ஆரிராரோ
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.Com |