வளைகாப்பு சீர்வரிசை தட்டு பொருட்கள்

Advertisement

வளைகாப்பு சீர்வரிசை தட்டு பொருட்கள்

நமது வாழ்க்கையில், பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சுப காரியங்களும் அசுப காரியங்களும் நடக்கிறது. சுப காரியங்கள் என்று எடுத்துக்கொண்டால், குழந்தை பிறந்து அதற்கு பெயர் வைப்பது, சடங்கு, காதுகுத்து, கல்யாணம், வளைகாப்பு என பல்வேறு சுப காரியங்கள் அடங்கும்.

இதில் வளைகாப்பு என்பது, ஒரு பெண் கருவுற்ற ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதங்களில் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அப்பெண்ணிற்கு சடங்கு செய்யும் முறை ஆகும். இந்த வளைகாப்பில் அப்பெண்ணிற்கு வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ஆரோக்கியம் அளிக்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் செய்வார்கள். அதாவது, வளையல் அணிவது, சாதம் ஊட்டிவிடுதல், பொட்டு வைத்தல் என பல்வேறு முறைகள் செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், வளைகாப்பிற்கு என்று தனி சீர்வரிசை வைப்பார்கள். அதில் என்னென்ன சீர்வரிசை வைக்க வேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

மாப்பிள்ளை வீட்டில் வாங்க வேண்டியது:

  • மஞ்சள்
  • குங்குமம்
  • சந்தனம்
  • பன்னீர்
  • கற்கண்டு
  • பன்னீர் ரோஜா
  • வாழைப்பழம்
  • பூ
  • வெற்றிலை, பாக்கு

மேற்கூறிய பொருட்கள் அனைத்தும் வளைகாப்பிற்கு வந்தவர்களை வரவேற்பதற்காக வாங்க வேண்டும்.

பெண் வீட்டில் கொண்டு வர வேண்டிய சீர்வரிசை:

  1. மஞ்சள்- 9 டப்பா
  2. குங்குமம்- 9 டப்பா
  3. சந்தனம்- ஒரு பாக்கெட்
  4. வெற்றிலை- ஒரு கவுளி
  5. பாக்கு- 50
  6. தேங்காய்- 5
  7. வாழைப்பழம்- 3 சீப்பு
  8. சர்க்கரை- 1 கிலோ
  9. பேரீட்ச்சைப்பழம்- 1 கிலோ
  10. பூ- 5 முழம்
  11. மாலை- 1
  12. ஆப்பிள் மற்றும் சாத்துக்குடி தட்டிற்கு ஏற்ப
  13. அவல், கடலை, லட்டு, முறுக்கு- தட்டிற்கு ஏற்ப
  14. வளையல்- தேவையான அளவு

வரிசை தட்டு ஒற்றை படையில் இருக்க வேண்டும், 9, 11 இது போல் இருக்க வேண்டும். உங்களால் எத்தனை தட்டு எடுக்க முடியுமோ அத்தனை தட்டு எடுத்து கொள்ள வேண்டும்.

100 பேருக்கு சொல்லி ஒரு பெண்ணின் வளைகாப்பு நடத்தனும்னா எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா..?

Valaikappu Seiyum Murai:

வளைகாப்பு சீர்வரிசை தட்டு பொருட்கள்

  • இரண்டு குத்து விளக்கு ஏற்ற வேண்டும்.
  • வாழை இலையில் சர்க்கரை பொங்கல், அவல், லட்டு போன்றவற்றை வைக்க வேண்டும்.
  • பூஜை சாமான்கள், சாம்பிராணி, கற்பூரம் போன்றவற்றை தயாராக வைக்க வேண்டும்.
  • ஒரு தாம்பூலத்தில் சந்தனம், குங்குமம், பன்னீர், மஞ்சள் கலந்த அரிசி, பால் பழம் போன்றவற்றை வைக்க வேண்டும்.
  • ஆரத்தி தட்டு தயாராக இருக்க வேண்டும்.
  • பெண்ணிற்கு நலங்கு ஒற்றைப்படையில் வைக்க வேண்டும்.
  • பெண் வீட்டிலிருந்து வரிசை சாமான்களை சபையில் வைக்க வேண்டும்.
  • வளைகாப்பிற்கு வந்தவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பொருட்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.
  • பெண்ணிற்கு ஆரத்தி எடுக்க வேண்டும்.
  • பெண் வயதானவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.
  • இரு வீட்டாரும் வந்தவர்களை சாப்பிட்டு செல்லுங்கள் என்று கூற வேண்டும்.

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com 

 

 

Advertisement