வணிக நிறுவனங்களின் பெயர்கள் தூய தமிழில் அறிந்து கொள்வோம்..

Advertisement

வணிக நிறுவனங்கள் பெயர்கள்

நாம் அனைவருமே தமிழ் மொழியில் பேசுகின்றோம் என்று கூறுகிறோம், ஆனால் அவையாவும் தமிழ் மொழி தானா என்று கேட்டால் இல்லை. நாம் பேசுவது பேச்சு வழக்கு சொல்லாக இருக்கிறது. இதற்கு தமிழ் மொழியில் கூறுவதற்கு வேறு பெயர்கள் இருக்கிறது. அதனை பற்றி அறிந்து கொள்வது அவசியமானது. ஏனென்றால் இவைஅரசு தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த பதிவில் வணிக நிறுவனங்களின் தமிழ் பெயர்களை அறிந்து கொள்வோம் வாங்க..

நிறுவனங்களுக்கான தமிழ் பெயர்கள்

டிரேடரஸ் வணிக மையம் கார்ப்பரேஷன் நிறுவனம்
ஏஜென்சி முகவாண்மை சென்டர் மையம், நிலையம்
எம்போரியம் விற்பனையகம் ஸ்டோர்ஸ் பண்டகசாலை
ஷாப் கடை, அங்காடி அண்கோ குழுமம்
ஷோரூம் காட்சியகம், எழிலங்காடி ஜெனரல் ஸ்டோர்ஸ் பல்பொருள் அங்காடி
ட்ராவல் ஏஜென்சி சுற்றுலா முகவான்மையகம் ட்ராவல்ஸ் போக்குவரத்து நிறுவனம், சுற்றுலா நிறுவனம்
எலெட்ரிக்கலஸ் மின்பொருள் பண்டக சாலை ரிப்பேரிங் சென்டர் சீர்செய் நிலையம்
ஒர்க் ஷாப் பட்டறை, பணிமனை ஜீவல்லர்ஸ் நகை மாளிகை, நகையகம்
டிம்பர்ஸ் மரக்கடை ப்ரிண்டர்ஸ் அச்சகம்
பவர் பிரிண்டர்ஸ் மின் அச்சகம் ஆப்செட் பிரிண்டர்ஸ் மறுதோன்றி அச்சகம்

Business Company Tamil Names List

லித்தோஸ் வண்ண அச்சகம் கூல் டிரிங்கஸ் குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
ஸ்வீட் ஸ்டால் இனிப்பகம் காபி பார் குளம்பிக் கடை
ஹோட்டல் உணவகம் டெய்லரஸ் தையலகம்
டெக்ஸ்டைலஸ் துணியகம் ரெடிமேடஸ் ஆயத்த ஆடையகம்
சினிமா தியேட்டர் திரையகம் வீடியோ சென்டர் ஒளிநாடா மையம், விற்பனையகம்
போட்டோ ஸ்டூடியோ புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம் சிட் பண்ட் நிதியகம்
பேங்க் வைப்பகம் லாண்டரி வெளுப்பகம்
டிரை கிளீனரஸ் உலர் வெளுப்பகம் அக்ரோ சென்டர் வேளாண் நடுவம்
அக்ரோ சர்வீஸ் உழவுப் பணி ஏர்-கண்டிஷனர் குளிர் பதனி, சீர்வளி
ஆர்டஸ்
கலையகம், கலைக்கூடம் ஆஸ்பெஸ்டரஸ் கல்நார்

Business Company Tamil Names:

ஆடியோ சென்டர் ஒலியகம், ஒலிநாடா மையம் ஆட்டோ தானி 
ஆட்டோமொபைலஸ் தானியங்கியகம் ஆட்டோ சர்வீஸ் தானிப் பணியகம்
பேக்கரி அடுமனை  பேட்டரி சர்வீஸ்  மின்கலப் பணியகம்
பசார்  கடைத்தெரு, அங்காடி பியூட்டி பார்லர் அழகு நிலையம், எழில் புனையகம்
பீடா ஸ்டால்  மடி வெற்றிலைக் கடை பெனிஃபிட் பண்ட்  நலநிதி
போர்டிங் லாட்ஜிங்  உண்டுறை விடுதி பாய்லர்  கொதிகலன்
பில்டரஸ்  கட்டுநர், கட்டிடக் கலைஞர் கேபிள்  கம்பிவடம், வடம்
கேபஸ்
வாடகை வண்டி கபே  அருந்தகம், உணவகம்
கேன் ஒர்கஸ்  பிரம்புப் பணியகம் கேண்டீன் சிற்றுண்டிச்சாலை
சிமெண்ட்  பைஞ்சுதை கெமிக்கலஸ்  வேதிப்பொருட்கள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement