வராகி அம்மன் பெயர்கள் | Varahi Amman 12 Names in Tamil..!
மனிதனாக பிறந்த நாம் அனைவருக்குமே பள்ளி மற்றும் கல்லூரியில் என இதுபோன்ற இடங்களில் ஒரு பெயரும், வீட்டில் அழைப்பதற்கு என்று மற்றொரு பெயரும் இருக்கும். இதனை கணக்கிட்டு பார்த்தால் ஒரு சாதாரணமாக ஒரு நபருக்கு 2 அல்லது மூன்று பெயர்கள் உள்ளது. அந்த வகையில் பார்த்தால் நாம் தினமும் வழிபடும் தெய்வங்களுக்கு ஒன்று மட்டுமில்லாமல் நிறைய பெயர்கள் இருக்கிறது. ஆனால் நாம் அனைவருக்கும் அந்த பெயர்கள் அனைத்தும் சரியாக தெரிவது இல்லை. ஏனென்றால் நாம் ஒரே ஒரு பெயரை மட்டுமே சொல்லி பழக்கம் அடைந்ததால் மற்ற பெயர்கள் இருப்பது தெரியாமலே போய்விடுகிறது. அதனால் இன்று நினைத்தது நடக்க பெரும்பாலான மக்கள் வழிபடும் வராகி அம்மனின் வேறு பெயர்களை பற்றி பட்டியல் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வராகி அம்மன் பெயர்கள்:
- பஞ்சமீ,
- தண்டநாதா
- ஸமேஸ்வரீ
- ஸமய ஸங்கேதா
- போத்ரிணீ
- ஸிவா
- மஹாஸேநா
- அரிக்நீ
- வார்த்தாளீ
- ஆஜ்ஞாசக்ரேஸ்வரீ
- ஸங்கேதா
- வாராஹீ
வராகி அம்மன் வாழ்க்கை வரலாறு:
வராஹி அம்மன் காட்டுப்பன்றியின் தலையும், மனித பெண் உடலும் கொண்ட வடிவமான பெண் தெய்வமாக காட்சி அளிக்கிறார். மேலும் வாராகி அம்மன் கருப்பு நிற ஆடை அணிந்து, சிம்மா வாகனத்தில் வீற்றிருப்பவராக அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறாள்.
இத்தகைய வராகி அம்மனை துர்கா தேவியின் ஒரு அம்சமாகவும் போற்றப்படுகிறாள். அதேபோல் வராகி அம்மன் தன்னிடம் உள்ள முழு சக்தியினை ஏழு பிரிவுகளாக பிரித்து அதனை சப்தக் கன்னிகளுக்கு அளித்து ரத்த பீஜனுடன் போர் செய்ததாக புராணக் கதையில் இடம் பெற்றிருக்கிறது.
அதுமட்டும் இல்லாமல் வராகி அம்மனுக்கு மொத்தம் 8 கைகள் இருக்கிறது. அதில் ஸ்ரீசக்கரம், அங்குசம், சங்கு, சூலம், ஏர்களப்பை, கதாயுதம் என 6 கைகளிலும், இதர 2 கைகளில் வரத, அபயம் என்ற அடையாளத்தினையும் கொண்டு காணப்படுகிறாள்.
இந்த வராகி அம்மனை ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி, அஷ்டமி திதிகளில் வழிபடலாம்.
மேலும் தமிழ் மாதங்களில் ஒன்றான புரட்டாசி மாதம் வரக்கூடிய நவராத்திரி நாட்களில் 5-வது நாள் வராகி அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்பட்டு வழிபாடு செய்கிறார்கள்.
இதுவே வராகி அம்மனின் வரலாறு மற்றும் வழிபடும் நாட்கள் ஆகும்.
கடவுள்களின் வேறு பெயர்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
அருள் தரும் கணபதியின் வேறு பெயர்கள்.. |
சிவன் பெயர்கள் பட்டியல் 2023 |
ஐயப்பன் ஆண் குழந்தை பெயர்கள் |
ஆண் குழந்தை சிவன் பெயர்கள் |
அம்மன் வேறு பெயர்கள் பட்டியல்.. |
விஷ்ணு 108 பெருமாள் பெயர்கள் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |