வீரமாமுனிவர் இயற்பெயர் என்ன? | Veeramamunivar Real Name in Tamil

Advertisement

வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன? | Veeramamunivar Original Name in Tamil

தமிழில் உள்ள சிறப்புகள் யாவும் மேலைநாட்டவர்களை வியக்க வைப்பதாக தான் இருக்கும். அப்படி வியப்பில் ஆழ்ந்த பல தலைவர்கள் தங்களுடைய பெயரை தமிழில் மாற்றி கொள்வார்கள். அப்படி தமிழில் உள்ள இலக்கிய, இலக்கண செழுமைகளை கண்டு தனது பெயரை மாற்றி கொண்ட மேலைநாட்டவர்களில் ஒருவர் தான் வீரமாமுனிவர். நாம் இந்த தொகுப்பில் வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன என்பதையும் அவரை பற்றிய ஒரு சில குறிப்புகளையும் தெரிந்து கொள்வோம் வாங்க.

வீரமாமுனிவர் இயற்பெயர் என்ன?

விடை: கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi) என்பது வீரமாமுனிவரின் இயற்பெயர் ஆகும்.

வீரமாமுனிவர்:

  • Veeramamunivar Iyar Peyar: இவர் நவம்பர் மாதம் 8-ம் தேதி 1680-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் கேசுதிகிலியோன் எனும் இடத்தில் பிறந்தார். பெற்றோர் பெயர் கொண்டல் போபெஸ்கி, எலிசபெத் என்பதாகும். 1709-ம் ஆண்டு கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்கில் இவர் இயேசு சபையை சேர்ந்த குரு ஆனார்.
  • இவர் தமிழகத்துக்கு 1710-ம் ஆண்டு வந்தார். தமிழை இவர் சுப்ரதீபக் கவிராயர் என்பவரிடம் கற்று கொண்டார். பின் தமிழின் வளர்ச்சிக்கு மற்றும் முன்னேற்றத்திற்கு பல பணிகளை செய்துள்ளார். இவர் தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார்.
  • இவர் எழுதிய தேம்பாவணி எனும் நூல் தமிழுக்கும் இவருக்கும் பெருமை சேர்ப்பதாக இருந்தது.

பெயர் காரணம்:

  • வீரமாமுனிவர் இயற்பெயர்: மதத்தை பரப்புவதற்கு உள்ளூர் மொழி அவசியம் என்பதை தெரிந்து கொண்டு தமிழை கற்றார். பின் தமிழில் புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். முதலில் தன்னுடைய பெயரை தைரியநாதசாமி என்று மாற்றி கொண்டார்.
  • பின் அந்த பெயர் வடமொழி என்பதாலும், தமிழில் புலமை பெற்றதாலும் தன்னுடைய இயற்பெயரின் பொருளைத் தழுவி, வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.

வீரமாமுனிவர் இயற்றிய உரைநடை நூல் எது?

  • வேத விளக்கம்
  • வேதியர் ஒழுக்கம்
  • ஞானக் கண்ணாடி
  • செந்தமிழ் இலக்கணம்
  • பரமார்த்த குருவின் கதை
  • வாமன் கதை ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

வீரமாமுனிவர் இயற்றிய நூல் எது?

  • தேம்பாவணி எனும் நூலை இயற்றியுள்ளார். இந்த காவியம் மூன்று காண்டங்களையும், 36 படலங்களையும், 3615 விருத்த பாக்களையும் கொண்டுள்ளது. இந்த காப்பியத்திற்கு இவருக்கு செந்தமிழ் தேசிகர் எனும் பட்டம் வழங்கப்பட்டது.

வீரமாமுனிவர் படைப்புகள்:

  • இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றைப் படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகியவற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
தேம்பாவணி திருக்காவலூர்க் கலம்பகம்
அடைக்கல மாலை அன்னை அழுங்கல் அந்தாதி
கித்தேரியம்மாள் அம்மானை சதுரகராதி
தொன்னூல் விளக்கம்

இறப்பு: 

  • தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். இலக்கண அறிவு, இலக்கிய புலமை, மொழியியல் உணர்வு என பல துறையிலும் சிறந்தவர். தமிழுக்காக வாழ்ந்து தொண்டு செய்த வீரமாமுனிவர் அவர்கள் பிப்ரவரி மாதம் 04-ம் தேதி 1747-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.
புத்தரின் இயற்பெயர் என்ன?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement