தர்ப்பணம் செய்ய தேவையான காய்கறிகள்..!

Advertisement

திதி கொடுக்க தேவையான காய்கறிகள் | Vegetables Required for Tharpanam in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தர்ப்பணம் செய்ய தேவையான காய்கறிகள் (Vegetables Required for Tharpanam in Tamil) என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். நாம் அனைவருக்குமே இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள் என்று தெரியும். ஆனால், அப்படி கொடுக்கும்போது எந்த விதமான காய்கறிகள் வைத்து கொடுப்பார்கள் என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் திதி கொடுக்க தேவையான காய்கறிகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

தர்ப்பணம் என்றால் என்ன.?

இறந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். ஆடி அமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அன்றைய தினத்தில் இறந்த முன்னோர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக காய்கறிகள், அரிசி உள்ளிட்ட பல பொருட்களை வைத்து தர்ப்பணம் கொடுப்பார்கள். பித்ரு தர்ப்பணம் மூன்று தலைமுறை முன்னோர்களுக்காகச் செய்யப்படுகிறது.

இறந்தவர்களின் திதி தேதியை எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா..?

தர்ப்பணம் செய்ய தேவையான காய்கறிகள்:

தர்ப்பணம் செய்ய தேவையான காய்கறிகள்

தர்ப்பணம் கொடுக்கும்போது வாழை இலையில் அரசி, வெல்லம், பைத்தம்பருப்பு, வாழைக்காய், சேப்பங்கிழங்கு, கொத்தவரங்காய், புடலங்காய், வாழைத்தண்டு ஆகியவை கட்டாயம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் திதி கொடுக்கும் காய்கறிகள் மாறுபடும். அதாவது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான காய்கறிகளை வைத்து தர்ப்பணம் கொடுப்பார்கள். எந்த காய்கறி வைத்தாலும் அதில் முக்கியமாக , சேப்பங்கிழங்கு, கொத்தவரங்காய், வாழைக்காய், புடலங்காய், வாழைத்தண்டு ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும்.  

மேலும், அன்றைய நாளில் 5 அல்லது 7 விதமான காய்கறிகள் சமைக்க வேண்டும். அவற்றில் பாகற்காய், வாழைக்காய், கொத்தவரங்காய், வாழைத்தண்டு, சேப்பங்கிழங்கு இந்த அனைத்து காய்கறிகளையும் கட்டாயம் சமைத்து தர்ப்பணம் கொடுக்கலாம்.

தர்ப்பணம் செய்ய தேவையான பொருட்கள் | திதி காய்கறிகள்:

  • தேங்காய்
  • வாழைப்பழம்
  • வெற்றிலை
  • பாக்கு
  • தர்ப்பை
  • பூணூல்
  • பச்சரிசி
  • வாழை
  • காய்கறிகள் 
  • இலை
  • மாவிலை
  • திருநீர்
  • குங்குமம்
  • சந்தனம்
  • எள்
  • பால்
  • தயிர்
  • பஞ்சகவ்வியம்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement